Aug 23, 2013

திருவள்ளுவரைப் பற்றி

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ…..!!!

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

நன்றி – மணிமாறன்.

Aug 21, 2013

மனைவிகளை கணவன்மார்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்?

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை
ஆகி விடுகிறது. தன் மனைவியை ஏமாற்றி. இன்னொரு பெண்ணிடம் புது உறவை வைத்துக் கொள்ள சில ஆண்கள்.


கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி கொண்டு குற்றம் கண்டுபிடிக்க காரணம் தேடி அலைவார்கள். பல நேரம் இப்படி நடப்பது தன் மனைவியை காயப்படுத்தி. அவளை பழிவாங்கவே. ஆனால் சில நேரம் தன் குற்றம் வெளிப்படாது என்ற தைரியத்தால், இந்த தவறுகளை ஆண்கள் செய்கின்றனர்

.ஆண்கள் ஏன் தங்களின் மனைவியை ஏமாற்றுகிறார்கள்? கமல் குரானா என்ற உறவு சார்ந்த ஆலோசகர், திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வை நடத்தினார். இதற்காக அவர் பல தம்பதிகளிடம் கலந்துரையாடி தன் முடிவை மனைவிமார்கள் பார்வையிலிருந்து வெளியிட்டார். அப்படி அவர் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாமா...

மனைவிகளை கணவன்மார்கள் ஏமாற்றுவதற்கான 8 முக்கிய காரணங்கள்!!!

திருமண பந்தத்தில் கோளாறு

வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது தப்பி ஓட முடிவெடுப்பார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டால், மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல், அந்த புதிய உறவுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இப்படி செய்யும் போது, இவ்வகை குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி, மற்றொரு துணையுடன் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அதனால் மனைவியை ஏமாற்ற முற்படுவார்கள்.உறவில் சலிப்பு தட்டும் போது ஏமாற்ற தொடங்குவார்கள்

சில ஆண்களுக்கு ஒரே மாதிரி செல்லும் திருமண வாழ்க்கை அலுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வகை ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் புது உறவில் ஈடுபடுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அலுப்புத் தட்டும் உறவை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அதிலிருந்து விலகி புது உற்சாகத்தை பெற புது உறவையே நாடுவார்கள். சிக்கலில் இருக்கும் அலுப்புத் தட்டிய உறவை சரி செய்வதை விட, புது உறவில் உடனடியாக ஏற்படும் மன நிறைவையே அவர்கள் விரும்புவார்கள். இவ்வகையான புது உறவு அவர்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தரும். அந்த தைரியத்தில், அவர்கள் இடர்பாடுகளை சந்திக்க தயாராகி விடுவார்கள்.உடலுறவில் விதவிதமான அனுபவம் பெற ஆண்கள் ஏமாற்ற நினைப்பதுண்டு

உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதன்மையான பங்கை வகித்து வருகிறது. சில ஆண்கள் ஒரே மனைவியுடன் வாழ்நாள் முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வதில் திருப்தி அடைவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ உடலுறவை பல பெண்களிடம் வைத்துக் கொள்ள அலாதி பிரியம் ஏற்படும். புது வகை இன்பங்களை சோதித்து பார்க்க, பல பெண்களிடம் பல முறை உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் இவ்வகை உறவு வைத்துக் கொள்ளும் முன், அவர்கள் எதையும் யோசிப்பதில்லை. சொல்லபோனால் செக்ஸ் விஷயத்தில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்ற பெருமையே அவர்களிடம் மேலோங்கி நிற்கும்.ஏமாற்றும் ஆண்கள் பாசத்தில் திருப்தி அடையாமல் இருப்பார்கள்

மனைவிகள் அவர்களுடைய வாழ்க்கையை கவனிப்பதில், வேலை பார்ப்பதில், குழந்தைகளை கவனிப்பதில், மாமனார் மாமியாரை கவனிப்பதில் அல்லது பெற்றோர்களை கவனிப்பதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது, கணவன்மார்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாசத்தை எதிர்பார்ப்பார்கள். ஆண்கள் மட்டும் என்ன மரக்கட்டைகளா என்ன? தன் மீதும் தன் மனைவி அக்கறை காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். தாங்கள் படும் பாட்டை மனைவிகள் புரிந்து, அவர்களை பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பல ஆண்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று கேட்பது குழந்தைத்தனம் என்று எண்ணுவதாலேயே அவர்களுக்குள் இந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது. சில நேரம் அவர்களுக்கு இடையே உள்ள அலைவரிசை ஒத்துப்போவதில்லை. அதனால் மனைவி என்ன தான் மனம் விரும்பிய படி நடந்தாலும், சில ஆண்கள் ஏதாவது குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்கள் அவர்களை புகழ்ந்து தள்ளி ஊக்கப்படுத்துவதால், அது கிடைக்காத வீட்டின் மீது நாட்டம் குறைந்து ஏமாற்ற தோன்றும்.

சிறு வயதின் பாதிப்பும் ஏமாற்ற தூண்டும்

சில ஆண்கள், தங்களின் குழந்தை பருவத்தில் தங்கள் பெற்றோர்கள் ஏமாற்றுவதை கண்டு வளர்ந்திருக்கலாம். இது அவர்கள் ஆழ் மனதில் தவறு என்ற தெரிந்த போதிலும், எங்கோ ஒரு மூலையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். நாம் அனைவரும் நம் பெற்றோர்களிடம் இருந்து பலவற்றை கற்பதால், இந்த விஷயத்தில் உள்ள இடர்பாட்டை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நம் மூத்த சகோதர சகோதரிகள், அண்டை வீட்டார்கள் மற்றும் உடன் பழகும் நபர்கள் ஏமாற்றுவதை நாம் காணும் போது, அது நம்மையும் தொற்றிக் கொள்ளும். சில நேரம் விடலை பையனாக, சில ஆண்கள் பல பெண்களிடம் காதல் வயப்பட்டிருக்கலாம். அவர்கள் வேண்டுமென்றே அல்லது எதேர்ச்சையாக தங்களின் பழைய காதலிகளை மறுபடியும் நாடுவதுண்டு. ஆனால் சிலரோ தங்கள் கடந்த காலத்தை போலவே, இப்போதும் பல பெண்களிடம் உறவு வைத்திருப்பார்கள். நம் மனம் என்ன நினைக்கிறதோ, அதை கண்டிப்பாக அடையும் என்று சும்மாவா சொன்னார்கள். அதனால் தெரிந்தோ தெரியாமலோ, இவ்வகை ஆண்களை விரும்பும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஏமாற்றும் மனைவியை ஏமாற்றும் ஆண்கள்

தங்களை ஏமாற்றும் மனைவியை பழி வாங்க பல பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். அவர்களின் மனைவிகள் மனம் திருந்தி உண்மையை ஒப்புக் கொண்ட போதிலும் கூட இவ்வகை தொடர்புகளை சில ஆண்கள் துண்டிப்பதில்லை. தங்கள் மனைவியை மன்னிக்க மனம் இடம் கொடுக்காத கனவான்களே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்.விவாகரத்து பெறுவதற்கு மனைவியை ஏமாற்றும் ஆண்கள்

சில ஆண்கள் வேண்டுமென்றே ஒழுக்கக்கேடாக இருப்பார்கள். இதை ஒரு சாக்காக வைத்து விவாகரத்தை நாடுவார்கள். நம் சட்டமும் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு விவாகரத்தை பெற்று தருகிறது. வேண்டுமென்றே மனைவிக்கு தெரியும் படி ஏமாற்றி, அவளை எரிச்சலடைய செய்து தானாக விவாகரத்து கேட்க வைப்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். இவ்வகை ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இவ்வகை ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்று எண்ணும் போது ஆண்கள் ஏமாற்றுவார்கள்

தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்ற உணர்வு ஒரு ஆணுக்கு எப்போது எழுகிறதோ, அப்போதே அவளைப் புரிந்து கொண்டு தலையில் வைத்து தாங்கும் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். இந்த புது உறவு ஏற்பட்ட காரணத்தினால் தான், எதிர்பார்த்ததை புதிதாக வந்த பெண்ணிடம் இருந்து பெறுவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக கிடைக்காத இந்த கவனிப்பு திடீரென்று வேறு ஒரு பெண்ணின் மூலமாக கிடைப்பதால், அந்த புது உறவுடன் ஐக்கியமாகி விடுவார்கள்.

Aug 20, 2013

SSI - Easy Survey Job - Instant Payment

நீங்க ஆன்லைன் ஜாப் தேடித் தேடி அழுத்துப் போனவராக இருந்தால் கண்டிப்பாக, ஆன்லைன் சர்வே ஜாப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் எத்தனை சர்வே ஜாப் சைட்டில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள் என்ற விவரத்தினை நீங்கள் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால், நான் பெற்ற அனுபவம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை, நான் சொல்கிறேன் நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

அனுபவம் என்பது தோல்வியாகவும் இருக்கலாம், வெற்றியாகவும் இருக்கலாம். ஆன்லைன் வேலை என்ற டாபிக்கினை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்களின் ஆரம்பக்கட்ட அனுபவம் என்பது தோல்விகளாகத்தான் இருக்கும்.

தோல்வி என்பதனைக் கடந்து வெற்றிக் கனியினைப் பறிக்க உதவுவதுதான் அனுபவம். அந்த அனுபவம் தோல்வியாக கிடைத்தால் என்ன வெற்றியாக கிடைத்தால் என்ன, நல்ல பாடத்தினை நமக்குக் கொடுத்ததே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாக கருத வேண்டும் என்றே, என்னைக் கேட்டால் நான் சொல்வேன். இதில் உங்களது கருத்து வேறுபாடக இருக்கலாம், ஆனால் விடா முயற்சி என்பது எங்கும் வேண்டும்... அதற்கு தோல்விகளைப் புறந்தள்ள சொல்லப்படும் வார்த்தைகளில், அனுபவம் என்பதோடு, வாய்ப்புகள் காத்திருக்கிறது என மேலும் பயணிப்பதில் தவறில்லையே!!!

மேலும் பயணிக்கலாம் தவறில்லை. தெற்கால இருக்கும் திருஞ்செந்தூருக்குச் செல்ல, மேற்காலப் பயணிப்பது என்பதனை இங்கு நான் சொல்ல வரவில்லை. தொலைவில் இருக்கும் திருஞ்செந்தூர்க்குச் செல்வது என முடிவெடுத்துவிட்டு, ஏன் இடையிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே கேட்கிறேன்... ஆறுபடை முருகனை தரிசிக்கும் வாய்ப்பினை ஏன் தவறவிட வேண்டும் என்று கேட்கிறேன்.

அவ்வளவு தொலைவில் இருக்கும் ஆறுமுகனை, இவ்வளவு கஷ்டப்பட்டு போய் பார்க்க வேண்டுமா? அம்புட்டு கஷ்டத்தினையும் காலத்தினையும் செலவழித்துப் போனால், அவர் என்னக் கொடுத்திடப் போறாரு என்று நீங்கள் சிந்திப்பீர் என்றால் நான் பொறுப்பாக மாட்டேன்.

ஆனால், ஆன்லைன் ஜாப் என்ற நெடுத்தூர பயணத்தினைத் தொடங்கியவர்கள் சின்னஞ்சிறு தோல்விகளைக் கண்டு ஏன் ஒதுங்க வேண்டும்?

தொலைவினை அடைந்துவிட்டால் பொன் முட்டையிடும் வாத்து கையினுள் கிடைக்கும் எனும் பொழுது எதற்காக இத்தனை தூரம் வந்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

வாருங்கள்.... ஆன்லைன் ஜாப் உங்களை ஏமாற்றாது.

ஆனால், ஆன்லைன் ஜாப் செய்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால், அதற்கு ஆன்லைன் ஜாப் பொறுப்பாகாது. ஏனெனில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது கண்டிப்பாக எல்லோர்க்கும் கிடைக்கும். தைரியமாக தங்களது பணிகளைச் செய்யுங்கள்.

குறிப்பாக நாங்கள் சொல்லும் சில தளங்களில் செயல்பட்டால் உறுதியாக பணம் கிடைக்கும். உடனுக்கூடன் கிடைக்கும்.

பணிகளும் மிகவும் எளிதான பணிகள் என்பதோடு மட்டுமின்றி கிடைக்கும் வருவாயும் மிகவும் அதிகம்.

அத்தோடு அல்லாமல் படுகை உங்களுக்கு அப்ளிகேட் மார்கெட்டிங்க் பிசினஸ் பற்றிக் கற்றுத் தருவதோடு, வீட்டிலிருந்தே சுமால் பிசினசாக செய்து சம்பாதிக்க அனைத்து டிப்ஸ்சும் வழங்குவதோடு, செயல்படத் தேவையான அடிப்படைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது. ஆகையால், உங்களது பணி, படுகையில் இணைவதும்... ஒரே மாதத்தில் ஆன்லைன் ஜாப் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதும், இரண்டாவது மாதத்திலிருந்தே செயல்பட்டு சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.

என்ன ரெடியா... வாங்க  எனது அப்ளிகேட் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.


Aug 19, 2013

பித்ரு பரிகாரம்

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால் இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல்,  திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.

சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை குறைவுடன் செய்தல் காரணமாகும்.

ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.

முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.

 இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.


அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.


திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.


மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.


மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்

மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன்?
திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது.

மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம்.  வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.

கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.

ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் 
என்பதற்காகவே இவ்வாறு ஆரத்தி எடுக்கப்படுகிறது.  சரஸ்வதியின் நிறம் வெண்மை, லட்சுமியின் நிறம் மஞ்சள். எனவே, சுண்ணாம்பும் மஞ்சளும், அதாவது வெள்ளையும் மஞ்சளும் கலந்து சிவப்பு என்கிற ஆரத்தி உண்டாகிறது.  எனவே, ஆரத்தி கொண்டு சுப நிகழ்ச்சிகள் முடிந்தவுன் 
சம்பந்தப்பட்டவர்களை வரவேற்கும்போது அவர்கள் மீது கண் திருஷ்டி விழுவதில்லை. 

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

சந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...!

'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம
ராசியாகும்.

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.உதாரணமாக மேச ராசிக்கு,விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும்,விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில்(விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.

தேவையில்லாத அலைச்சல்கள்,வீண் தகராறுகள்,காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம்.சந்திராஷ்டம் அன்று அந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்ப்பது நன்று.அதேபோல் வாகன பயணங்களை தவிர்க்கலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.


நமது ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. முகூர்த்தம் வைக்கும் பொழுது, தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும்.

சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும். இருப்பினும், விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர்.

இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்.

வீர மங்கை வேலு நாச்சியார்

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவார் . சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.

முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள். நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.

நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார்
நாடினார் :

வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.

வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

அலுவலகம் செல்பவர்களுக்கு...

காலை உணவைத் தவிர்க்காதீர்!
பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!
காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்
வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்
டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி
அலுவலக வேலை செய்யவே நேரம் இல்லை என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

மறைக்கபட்ட உண்மைகள்

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..?!

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது.

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .

Aug 17, 2013

முல்லைப் பெரியாறு பற்றி...

அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?
தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கிநிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாககிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.

நன்றி,
கோபிநாத்

Aug 14, 2013

எச்சரிக்கை...!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே
கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.
இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

இரகசியம்...

எது இரகசியம் ? பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். பேசாமலேயே இருந்தால் ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆக மௌனம் இரகசியத்தை நன்கு காக்கிறது என்பது புலனாகிறது. மௌனம் எத்தன்மையுடையது ? சப்தம் செய்யாமல் இருப்பது மௌனம்.

பூரண அமைதியே அதன் தன்மை. எது அசைகிறதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுவதும் அசைகிறது. எனவே பிரகிருதியினிடத்தில் அமைதியில்லை. அதனால் அதனிடம் மௌனமில்லை. ஆனால் மனம் அடங்க அடங்க அது மௌனத்தில் நிலை பெறுகிறது.

முற்றிலும் மனம் அடங்கி, ஒடுங்கினால் என்ன நடக்கும் ? ஆன்ம சொரூபம் மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த ஆன்மா அசையாதது. அதில் சப்தமில்லை. எனவே ஆன்மா மௌன சொரூபமாகும். மேலும் இந்த ஆன்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கிவிட முடியாது. எது விளக்கத்துக்கு வரவில்லையோ அது இரகசியமாகும். ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆன்மாவாகும். அதனால் தான் எனது முக நூல் பக்கங்களுக்கு மௌனத்தின்(ஆத்மாவின்) நாதம், மௌனத்தின்(ஆத்மாவின்) குரல், மௌனத்தின் (ஆத்மாவின்) அலைகள் என்று பெயர் சூட்டினேன்.

இந்த ஆன்மா பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். நமக்கு ஐந்து வகையான சரீரங்கள் உண்டு. அவை 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞானமய கோசம், 5. ஆனந்தமய கோசம் என்பனவாம். அதைப் போல ஐந்து அவஸ்தைகளும் உண்டு. அவற்றை உபாதிகள் என்றும் கூறுவார்கள். அவை 1. நனவு, 2. கனவு, 3. உறக்கம், 4. பேருறக்கம், 5. உயிர்படக்கம் என்பவைகளாம். இந்த ஐந்து அவத்தைகளும் நம் உடலில் அன்றாடம் ஏறியும், இறங்கியும் வருவதை நாம் உள் முகமாக கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

நம் உயிரானது அன்னமய கோசம் என்ற பரு உடம்பைப் பற்றித் தொழிற்பட்டு வினைப்பயனை நுகரும் நிலையே நனவு அல்லது சாக்கிரம் எனப்படும். அதைவிட்டுப் பிராணமய கோசம் என்கிற சூக்கும சரீரத்தைப் பற்றி நினைவுணர்வுகளோடு கூடி, சூக்கும வினைப் பயன்களை நுகரும் நிலை கனவு அல்லது சொப்பனம் எனப்படும். அவ்விரண்டையும் விட்டு மனோமய கோசம் என்கிற சித்தத்தைப் பற்றி நின்று முந்தைய வியாபாரங்களிலிருந்து நீங்கி ஒடுக்கமுறும் நிலை உறக்கம் அல்லது சுழுத்தி எனப்படும். இந்த மூன்றையும் விட்டு விஞ்ஞானமய கோசம் எனப்படும் கஞ்சுக சரீரத்தைப் பற்றி, அறிவு நிகழ்ச்சி சிறிதும் இன்றி உயிர்ப்பு முதலிய செயல்களை மாத்திரம் உடையதாய் நிற்கும் நிலை பேருறக்கம் அல்லது துரியம் எனப்படும். இனிக் கஞ்சுக சரீரத்தின் தொழிற்பாடும் நிகழாமல்ஆனந்தமய கோசம் எனப்படும் காரிய மாயையின் செயல் ஒன்றே நிகழப் பெற்று உயிர்ப்பும் அடங்கி நிற்கும் நிலை உயிர்ப்படக்கம் அல்லது துரியாதீதம் எனப்படும்.

இப்படி அசுத்த மாயை காரியங்களாகிய ஐங்கோசங்களை பற்றி, அவ்வவற்றால் விளங்கும் உணர்வுகளையே தன் இயல்பாகக் கொண்டு விளங்கி, அவத்தை வேறுபாடு அடைவதாய், இவ்வைங் கோசங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உள்ள தன்னோக்கு உணர்வே ''ஆன்மா'' எனப்பட்டது. எனவே ஆன்ம தத்துவங்கள் இருபத்தி நான்கும், வித்யா தத்துவங்கள் ஏழும் கூடிய ஐங்கோசங்களையும் கடந்து, சிவ தத்துவம் ஐந்தையும் உணர்ந்து, கடந்தால் மட்டுமே ஆன்மாவை உணர முடியும். இதுவே தன்னை உணர்தல் ஆகும்.
தத் என்றால் அது. துவம் என்றால் தன்மை. அதாவது தன் தன்மை மாறாதது தத்துவம். அதாவது படைப்பு காலம் முதல் ஊழிக்காலம் வரை தன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும் பொருள்கள் தத்துவங்கள். மேலே கூறிய மூவகை தத்துவங்களின் செயலே உயிர்களை உலக போகத்தில் அழுந்துப்படி செய்வது. எனவே இந்தத் தத்துவங்களை உணர்ந்தவன் அதைக் கடந்து ஆன்மாவைக் கண்டு கொள்வான்.

பழிவாங்கும் ஆவி!

தர்மபுரி மாவட்ட எல்லையாக இருப்பது தொப்பூர் கணவாய். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு இருபுறமும் மலையால் சூழப்பட்ட இந்த பகுதி, அடர்ந்த மரங்கள், செடி கொடிகள் நிறைந்து பார்ப்பதற்கே திகிலூட்டும்படி இருக்கிறது. இந்த கணவாய் பகுதிக்குள் நுழையும் ஆண்கள் பலர் அகோராமாய் இறப்பதாகவும், அதற்கு ஆண்களை பழிவாங்கும் பெண்ணின் ஆவிதான் காரணம் என அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பல ஆண்கள் அந்த கணவாய் பகுதியில் பலியாகி இருப்பதும், ஆவியின் கையில் சிக்கி நூலிழையில் தப்பியதாக கூறும் சிலரின் வாக்குமூலங்களும் பயத்திற்கு அச்சாரமாக உள்ளது.

சில வருஷங்களுக்கு முன்பு வேடியப்பன், பரமன் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேர் வெளியூர் போய்விட்டு தர்மபுரிக்கு ஒரு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அமாவாசை என்பதால் கும்மிருட்டாக இருந்தது. தொப்பூர் கணவாயை கடந்துதான் செல்ல வேண்டும். அப்பகுதியில் மோகினி நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுவதால் வேடியப்பனுக்கு பயம் உச்சத்தில் இருந்தது.

கணவாய் வளைவு நெருங்க நெருங்க அவருக்கு உடல் வெடவெடத்தது. முன்னால் உட்கார்ந்திருந்த பரமனும், பின்னால் உட்கார்ந்திருந்த செல்வமும் எதையும் கண்டு கொள்ளாமல் ஜாலியாக பேசியபடி வந்தனர். கணவாய் பகுதிக்குள் நுழைந்ததும் பாதை மேடாக இருந்ததால் கீழே இறங்கி சைக்கிளை தள்ளியபடி வந்தனர். அப்போது திடீரென மூன்று பேருக்கும் மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. எப்படியோ சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து நடந்தனர்.

சிறிது நேரத்தில் கமகமவென மல்லிகை வாசம் வீசியது. அப்போது மரத்தடிக்கு அருகில் பெண் உருவம் நிற்பது போன்று தெரிந்தது. அதை பார்த்ததும் பரமனும், செல்வமும் பரவசமடைந்து வேடியப்பனிடம் சைக்கிளை நிறுத்த சொன்னார்கள். ஆனால் பேய் பயத்தில் இருந்த அவர் நிறுத்தவில்லை. ஆனாலும் பரமனும், செல்வமும் சைக்கிளை இழுத்து நிறுத்தினார்கள். ‘நாங்க பாத்துட்டு வரோம்’னு சொல்லிவிட்டு போனார்கள். பெண் உருவம் காட்டுக்குள் மறைய இரண்டு நண்பர்களும் காட்டுக்குள் சென்றனர். அங்கு ஆக்ரோஷ உருவம் காட்டி சிரித்த பேயை பார்த்து விட்டு, பீதியில் அலறியடித்து ஓடி வந்தவர்களின் உயிரை, கணவாய் ரோட்டில் வந்த ஒரு லாரி பறித்துக் கொண்டு போய்விட்டது. வேடியப்பன் மட்டும் தப்பி வந்துவிட்டார் என்று சம்பவத்தை விவரிக்கும் மக்களின் பேச்சில் கலக்கம் அப்பட்டமாய் தெரிகிறது.

இதுபோல ஒன்றிரண்டு அல்ல. பல சம்பவங்கள் நடந்திருக்கு என்று சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

தர்மபுரியை சேர்ந்த லாரி டிரைவர் செல்லமாதுவும், கிளீனர் தீத்தானும் கணவாய் கட்டமேடு பகுதியில் விபத்துக்குள்ளாகி அகோரமாக பலியானாங்க. இதுமாதிரி நிறைய ஆம்பிளைங்க தொப்பூர் கணவாய் கட்டமேடு, கணவாய் வளைவு பகுதியில செத்துபோயிருக்காங்க.. மாசத்துக்கு 8 அல்லது 10 தடவை விபத்து நடக்குது. அதில் பலர் பலியாகிடுறாங்க. ஆவி குறுக்கே போகும்போது நேர்பட்டுதான் அவங்க செத்து போறாங்க. தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள மூலிகை பண்ணையில சில வருஷத்துக்கு முன்னால வயசு பொண்ணு ஒருத்தி இருந்தா, கொள்ளை அழகு. அவளை ரவுடி பசங்க பலாத்காரம் செய்து கொன்னு வீசிட்டு போயிட்டானுங்க. அந்த பெண்ணோட ஆவிதான் கொலைவெறியுடன் ஆண்களை பழிவாங்குது‘ என்று ஊர் பெரியவர்கள் சொல்கின்றனர். பேய் நம்பிக்கை ஆட்டிப்படைப்பதால், தொப்பூர் கணவாயில் செல்லும் ஆண்கள் பீதியுடனே கடக்கின்றனர்.

Aug 12, 2013

வர்மக்கலை

வர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு ``அடவு வர்மம்'' என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த வர்ம சிகிச்சை, குருகுல வழி முறையில் கொடுக்கப்பட்டது. அதற்காக அகத்தியர் "வர்மக் குடில்'' என்பதை உருவாக்கிவைத்திருந்தார்.

அகத்தியரின் தன்னலம் கருதாத சேவையின் காரணமாக அவரின் வர்மக் குடில் பயிற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அகத்தியரின் மருத்துவ சேவையை கண்டு உணர்ந்த பாண்டிய மன்னர் வீரத்தளபதிகளுக்கும், இளவரசர்களுக்கும் வர்மக்கலையின் ரகசியங்களை கற்றுக் கொடுக்கும்படி கேட்டு கொண்டார். இதன் மூலமாக தமிழகத்தின் தென்பகுதியில் அகத்தியரின் தமிழ் வர்மக்கலை கொடி கட்டி பறந்தது.

நமது உடலில் 7 விதமான சக்கரங்கள் இயங்குவது போல் நம்முடைய நாடி, நரம்புகளில் 126 சக்கரங்கள் அதாவது வர்ம நிலைகள் உள்ளன.

அவை:

* தொடுவர்மம் - 96

* படுவர்மம் - 12

* தட்டுவர்மம் - 8

* அடங்கல்வர்மம் - 6

* நக்குவர்மம் - 4

இந்த வர்ம நிலைகளை மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்குகின்றன. மனிதர்களின் உடல் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டு அந்த இடத்தில் உள்சதை முறிவு ஏற்பட்டால் வலி உருவாகும். இந்த வலியை நீக்குவதற்கு முதல் கட்டமாக அடிபட்ட வர்ம நிலையை கலைக்கவேண்டும். பின்பு இளக்கு முறை செய்து விறைப்பாக இருக்கும் தசை பகுதியை தளர்த்தி விடவேண்டும். அதன் பிறகு ஒரு துண்டு சுக்கு, வெற்றிலை, 5 மிளகு ஆகியவைகளை வாயில் போட்டு மென்று, அடிபட்டவரின் மூக்கு துவாரங்களிலும், காது துவாரங்களிலும் ஊதவேண்டும். இப்படி செய்வதன் மூலமாக மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்கப்பட்டு, மின் அஞ்சல் செய்தி போல் சமிக்ஞை பெறப்பட்டு, அடிபட்ட இடத்தில் தேங்கி நிற்கும் ரத்தம் வாயு மூலமாக தள்ளப்படும். அதனால் பாதிக்கப்பட்ட இடம் சீராகி, பாதிக்கப்பட்டவர் வலியின் பிடியில் இருந்து விடுபடுவார்.

``வர்மம்'' என்ற நான்கு எழுத்துக்குள் பல்வேறு மர்மங்கள் பொதிந்துள்ளன. வர்மம் என்பது, நமது உடலில் உள்ள 126 உயிர் நிலைகளை குறிக்கிறது. மூளைப்பகுதியில் உள்ள நியூரான்களின் கட்டளைப்படி இயங்கும் இந்த உயிர்நிலைகள் தான் மனிதர்களை நோய்களில் இருந்து பாதுகாத்து மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

மொத்தமுள்ள ஐந்து வகை வர்மங்களில், படுவர்மம் என்பது நமது உடலில் மிகவும் ஆழமாக குடியிருக்கிறது. தொடு வர்மம் மனித உடலில் மிகவும் மேலோட்டமாக இருக்கிறது. மேற்கண்ட இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் தட்டுவர்மம் குடி கொண்டுள்ளது.

வர்மக்கலையில் மிகவும் மர்மமானது, அடங்கல் வர்மமாகும். சாலையில் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரே போதை ஆசாமி ஒருவர் வருகிறார். அவர், அந்த அப்பாவி மனிதரை மூர்க்கத்தனமாக தாக்குகிறார் என வைத்துக்கொள்வோம். வர்மப் பகுதியில் அவருக்கு அடிபட்டிருந்தால், அந்த அப்பாவி உடனே மயங்கிவிழுந்துவிடுவார்.

இந்த நிலையில் அடங்கல் வர்மங்களின் குணநலன்கள் தெரிந்த வர்மக்கலை நிபுணர் ஒருவர் அங்கு வந்தால், அவரால் அந்த அப்பாவியின் உடலில் உள்ள உயிர் அடங்கல் வர்மங்களில் ஏதாவது ஒருவர்மம் தூண்டப்படுமானால் அவர் மயக்கம் நீங்கி எழுந்துவிடுவார். இந்த செய்கையைத்தான் வர்ம ஆசான்மார்கள் உயிர் அடங்கல் வர்மம் என்று குறிப்பிடுகின்றனர். உயிர் அடங்கியிருக்கும் வர்மம் அடங்கல் வர்மம் எனப்படுகிறது.

மனித உடலில் விரல்கள் பட்டால் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வர்ம நிலைகளும் அனேக இடங்களில் உள்ளன. அந்த மாதிரி இடங்களில் உள்ள பாதிப்பை நக்கு வர்மம் மூலமாக இளக்கி குணப்படுத்த வேண்டும். இது மிக மென்மையான மருத்துவ அணுகுமுறையாகும்.

மணிபந்த வர்மம் என்ற தொடுவர்மப்புள்ளி நமது கைகளில் மணிக்கட்டு பகுதியிலிருந்து 2 விரல் அளவு தள்ளி கையின் உள்பக்கம் உள்ளது. ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் இந்த வர்மப்புள்ளி குடி கொண்டுள்ளது. இந்த வர்ம புள்ளிகளில் மிதமான முறையில் அடிபட்டால்கூட உளைச்சல் எடுத்து வலி பரவும். இதே வர்ம புள்ளியில் முழு மாத்திரை அளவு அடிபடுமானால், அடிபட்ட கை அப்படியே கீழே தொங்கி விடும். மேலும் விரல்களில் இருந்து முழங்கை வரை பயங்கரமாக உளைச்சல் எடுக்கும். மயக்கமாகி கீழே விழுந்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அப்போது வியர்வை கொட்டும். உடம்பெங்கும் ஒருவிதமான சூடு பரவி காய்ச்சல் அடிப்பது போல் இருக்கும்.

அந்த வர்ம புள்ளிகளில் அடிபடுவதால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைப்படும். அப்போது இதய பகுதியை 10 விரல்களால் பிசைவது போல் தோன்றும். அதனால்தான் பாதிக்கப்பட்டவருக்கு மயக்கமும், வியர்வை வழிதலும் அறிகுறியாகிறது.

இப்படி வர்ம நிலையில் அடிபட்டு மயங்கி கிடப்பவரை எழுப்புவதற்கு அவரது சிரசு பகுதியில் வர்மக்கலை நிபுணர் நின்றுகொள்வார். அவரது, இடது கையால் பாதிக்கப்பட்டவரின் உச்சி முடியை பிடித்து தூக்கி உட்கார வைத்து, மிக பலமாக 3 முறை அவரது உச்சி முடியை பிடித்து உலுக்குவார். பின்பு இன்னொருவரை பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு, சிகிச்சை அளிப்பவர் அவரது முன்பக்கமாக வருவார். வந்து அவரது இடது உள்ளங்கையை பாதிக்கப்பட்டவரின் உச்சந்தலையில் தட்டையாக விரித்து வைத்து, முஷ்டி பிடித்த மறுகையால் 3 முறை மிதமான முறையில் தட்டுவார். இப்படி தட்டிவிட்ட பின்பு, சிரசின் கீழ்ப்பகுதியில் சிறிய குழி போல் உள்ள இடத்தில் வலது கையின் பெருவிரலின் முனைப்பகுதியில் 5 தடவை வட்டமான முறையில் தடவி சரி செய்ய வேண்டும்.

மேற்கண்ட முறையில் வர்ம அழுத்தம் செய்த உடன் மயக்கத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபட்டு விழிகளை திறப்பார். வர்மத்தால் பாதிக்கப்பட்டவர் சுய நினைவுக்கு வந்தவுடன் அவரின் விரல்கள் அனைத்தையும் நெட்டி (சொடக்கு) வாங்கி விட்டு, அடிப்பட்ட பகுதியில் காயத்திருமேனி தைலத்தாலோ, நல்லெண்ணெய்யாலோ பூசவேண்டும். பின்பு மேலிருந்து கீழாக வலக்கையின் கட்டை விரலால் 18 தடவை அழுத்தமான முறையில் நீவவேண்டும்.

நீவி முடித்த உடன் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தீ மூட்டி, அது நன்கு சூடான பின்பு ஒரு காட்டன் துணியை சதுரமாக மடித்து எடுத்துக்கொண்டு தோசைக்கல்லில் ஒற்றியெடுத்து அடிப்பட்ட இடத்தில் ``அனல் சிகிச்சை'' என்ற வறத்துணி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை 6 நாட்கள் கடைப்பிடித்து வந்தால் வர்மம் இளகி குணம் கிடைக்கும். இதற்கு கூடுதலாக சில மருத்துவ சிகிச்சை முறைகளும் உள்ளன.

தெய்வீக கலையான வர்மக்கலையை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும் அதே நேரத்தில் அதை பயன்படுத்தி, வாழ்க்கையை இன்பமாக அனுபவிக் கவும் முடியும். தாம்பத்ய சிக்கல்களை வர்மக்கலை மூலம் குணப் படுத்தி, மகிழ்ச்சியாக இளமை உணர்வோடு வாழலாம்.

இதன் மூலம் ஆரோக்கியமும் பெருகும். அதுபோல் பெண்களும், ஆண்களும் வர்மக்கலையின் அடிப்படையை கற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, வர்மப் புள்ளிகளில் தாக்குதல் தொடுத்து தங்கள் உயிரையும், உடமையையும் காப்பாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.


நன்றி:  டிராகன் டி.ஜெய்ராஜ், வர்மக்கலை நிபுணர், கோவை.

ஆடி அமாவாசை...

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்” என்றும் அழைக்கப்படுகிறது.

புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் எனவும், இதனால்தான் இந்த மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக புராணம் சொல்கிறது. துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான் ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது.

ஆடி அமாவாசையில் பித்ருக்களை நினைக்க வேண்டும்

சூரியனை பிதுர்காரகன் அதாவது தந்தையின் நிலை, தந்தை வழி முன்னோர்களை அறிவது, என்றும் சந்திரனை மாதுர்காரகன் அதாவது தாயின் நிலை, மற்றும் தாய் வழி முன்னோர்களை அறிவது என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அமாவாசையில் முன்னோர்களை வணங்கினால் நன்மை ஏற்படும். அதிலும் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு குடும்பத்தை சார்ந்த இறந்து போன முன்னோர்கள், தம் குடும்பத்தினரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் இறைவன், ஆடி மாதத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் என்கிறது புராணம்.

இதற்கு ஒரு புராண சம்பவம் இருக்கிறது.

திரேதா யுகத்தில் ஒரு மகரிஷி இருந்தார். இவர் தாய் – தந்தை இழந்த ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த மகன் வளர்ப்பு, தந்தையான மகரிஷி மேல் அதிக பாசத்துடன் இருந்தான். காலங்கள் ஒடியது. மகரிஷி அதிக வயது காரணமாக இயற்கை ஏய்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த மகன், ’இதற்கு காரணம் சூரியேனே. சூரிய பகவான்தான் இறந்த ஆத்மாக்களை பித்ரு தேவதையிடம் சேர்ப்பார். அதனால் சூரியனை பிடித்து பழி வாங்க வேண்டும்’ என்று எண்ணி தன் தவ வலிமையால் சூரியனையும் பிடித்து வைத்தது கொண்டார்.

சூரியன் தன் வேலையை செய்யாததால் சந்திரனால் இயங்க முடியவில்லை. இதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. தேவர்களாலும் சரியாக வேலை செய்ய இயலவில்லை. இனி பொறுமையாக இருந்தால் உலகமே அழிந்துவிடும் என்பதை உணர்ந்த ஈசனும், மகாவிஷ்ணுவும், பிரம்மன் மற்றும் தெவர்களும் அந்த மகரிஷயின் புதல்வனிடம் சமாதானம் பேசினார்கள்.

’உயிர் ஒருநாள் பூலோகத்தைவிட்டு சென்றுவிடும். இது இயற்கைதான். அதை நீ புரிந்துக்கொள்ள வேண்டும்.’ என்று அனைவரும் பேசியதால், மகரிஷியின் மகன் சமாதானம் அடைந்தார். அத்துடன் “என் தந்தையை நான் அவ்வப்போது பார்க்க வேண்டும்.” என்று கேட்டதற்கு, ”நீ உன் தந்தையை எப்போதெல்லாம் நினைக்கிறாயே அன்று உன் தந்தையின் ஆத்மா பூலோகாத்திற்கு வரும். அத்துடன் ஆத்மாக்கள் வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் இறந்த நாள் அன்று பூலோகத்திற்கு அனுப்பப்படும். அந்த நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமானதை கொடுத்து மகிழ்வித்து அனுப்பினால், இந்த ஆத்மாக்களின் ஆசியால் அவரவர் குடும்பத்திற்கு சுபிச்சம் ஏற்படும்.” என்று ஆசி வழங்கினர் மும்மூர்த்திகள்.

பித்ரு உலகம் தென்பகுதியில் இருக்கிறது. திதி கொடுக்கும்போது தென்பகுதியை பார்த்து திதி கொடுத்தால், பித்ருக்களை எளிதில் சென்றடையும். அவர்களும் மகிழ்ச்சியோடு சூரியபகவானிடம் சென்று அவர் அனுமதியை வேண்டி பெற்று அவரின் விமானம் மூலமாக மகிழ்ச்சியுடன் தன் வம்சத்தினரை காணப்போகிறோம் என்ற ஆவலோடு வருவார்கள். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கினால் நமது வம்சத்திற்கே எந்த தீங்கும் ஏற்படாது. "திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாத நிலை, நோய், வறுமை போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது முன்னோர்களை வணங்காமல் இருப்பதே என்கிறது கருட புராணம்".

பித்ரு பூஜை முறைகள்

பித்ருபூஜைக்கு மிக பெரிய செலவு என்பதெல்லாம் இல்லை. காய்கறிகளை தானம் தர வேண்டும். அதில் முக்கியமாக பூசணிக்காயை தானம் செய்தே ஆக வேண்டும். அப்படி செய்வதால் துஷ்டசக்திகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடை பெற வழி பிறக்கும். பூசணிக்காய்குள் அசுரன் இருப்பதால் பூசணிக்காயை தானம் செய்யும் போது அசுரன் நம்மை விட்டு விலகுவதாக ஐதீகம். அதுவும் ஆடி அமாவாசை அன்று இவ்வாறு பூஜையில் தானம் செய்வது விசேஷம்.

இயற்கை மரணம் இல்லாமல் ஏதாவது ஒரு துர்மரணத்தால் எவரேனும் இறந்து போய் இருந்தால், அந்த ஆத்மா இறைவனடி சேராமல் அவதிப்படும், அல்லாடும். முறைப்படி வழிபாடு செய்து தம் ஆத்மாவை இறைவனடி சேர வைக்காத தன் குடும்பத்தினர் மீது கோபம் கொண்டு தீங்கு செய்ய கூட துணிந்து விடும். அதனால் அப்பேர்பட்ட ஆத்மாக்களை சாந்தப்படுத்தி இறைவனடி சேர வைக்க, ஆடி அமாவாசை அன்று தர்பணம் செய்தால் அந்த ஆத்மா சாந்தியாகும். ஸ்ரீமன் நாராயணனே அந்த ஆத்மாவை சாந்தப்படுத்தி உதவி செய்வதாக கருடபுராணத்தில் இருக்கிறது.

கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து அவர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபுரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனமார வாழ்த்துவார்கள்.

இறந்தவர்களின் புகைப்படம் இல்லாதவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து வணங்கலாம். நாம் பூஜையில் வைக்கும் முகம் பார்க்கம் கண்ணாடியில் பித்ருக்கள் தங்கள் முகத்தை பார்த்து மகிழ்சியடைவார்கள். தங்களின் புகைப்படத்தை வைத்துதான் வணங்குகிறார்கள் என்று எண்ணுவார்கள். அதனால்தான் முகம் பார்க்கும் கண்ணாடியை அமாவாசை, பித்ருக்கள் திதி அன்று வைத்து வணங்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

அத்துடன் - முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு உணவு தானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன் பெறும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற எளிய தர்பணம் செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

Aug 11, 2013

அதிசய குழந்தை!

மருத்துவ துறையில் ஓர் அதிசயம்…
குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரியுமா?

தமிழக மக்களை மட்டுமல்ல உலகத்தையே வியக்க வைக்கும் ஆபூர்வ சம்பவம் இது…

பிறந்த குழந்தையின் உடலில் எப்படி தீப்பிடிக்கும் என்ற சந்தேகமும், ஆச்சர்யமும் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்தது. இது நம்ம விட்டலாச்சர்யா படம் அல்ல… மாயாஜாலம் அல்ல. உண்மை சம்பவம்.

இரண்டரை வயது ஆண் குழந்தைக்குதான் இப்படிப்பட்ட அபூர்வ நோய்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (26). மனைவி ராஜேஸ்வரி (23). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு முதலில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக கர்ப்பம் தரித்த ராஜேஸ்வரிக்கு கடந்த மே மாதம் 22–ந்தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தை கனவோடு இருந்த அந்த தம்பதிக்கு நினைத்தபடி ஆண் மகன் பிறந்ததால் ராகுல் எனவும் பெயர் சூட்டினார்.

ஆண் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அந்த தம்பதிக்கு 7–வது நாளில் அதிர்ச்சி ஏற்பட்டது.

ராகுலின் உடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பதறினார்கள். பச்சிளங் குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உடலில் பல இடங்கள் தீக்காயங்கள் ஏற்பட்டன. எதனால் குழந்தையின் உடலில் தீப்பற்றுகிறது என்று தெரியாமல் பெற்றோர் கதறியபடி பல இடங்களுக்கு தூக்கி சென்றனர்.

இறுதியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு 11–வது நாளில் குழந்தைக்கு உடல் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் குளம் சென்று பரிகாரம் தேடியும், ஆனாலும் அவர்களின் வேண்டுதலுக்கு விடை கிடைக்கவில்லை. கண் கலங்கிய பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

அதற்குள் குழந்தை தீப்பிடித்தும் எரியும் செய்தி எல்லா இடமும் பரவியது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் உடலில் இருந்து மண்எண்ணை வாசனை வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அதிசய குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. குழந்தை தீப்பற்றி எரிவது குறித்து பெற்றோர் கூறிய தகவல் சென்னை டாக்டர்களையும் மிரள வைத்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் ராகுல் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது.

குழந்தைகள் நல வார்டில் சிறப்பு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தைகள் நலம், சிறுநீரகம் துறை மற்றும் தோல் நோய் துறை டாக்டர்கள் முழுமையாக இன்று பரிசோதனை செய்தனர். குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் அதிசயம். இப்படிப்பட்ட குழந்தைகள் அரிதாகத்தான் பிறக்கும். அப்படித்தான் ராகுலும் பிறந்துள்ளான்.

இந்த குழந்தை அதிசய குழந்தை என்றே கூறலாம். தமிழ்நாட்டில் முதன் முதலாக இப்போதுதான் இதுபோன்று அதிசய குழந்தை பிறந்து இருக்கிறது என்று ராகுல்உடலை பரிசோதித்த குழந்தைகள் நல பேராசிரியர் நாராயணபாபு தெரிவித்தார்.

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை, குறித்தும் நாராயணபாபு மாலைமலர் நிருபரிடம் கூறியவதாவது:–

குழந்தை ராகுலுக்கு ஏற்பட்டுள்ள நோயின் பெயர் தானாக தீப்பற்றி எரியும் நோயாகும். மருத்துவ உலகில் இது வினோதமான குழந்தை. 300 வருடத்தில் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் வந்துள்ளது. தமிழகத்தில் முதல் குழந்தை இதுதான்.

குழந்தையின் உடலில் வெளியேறும் வாயு (ஆல்கஹால்) வியர்வையினால் உடலில் தீப்பற்றிக் கொள்ளும். திடீர் திடீரென உடல் தீப்பிடித்து கொண்டு எரிவதால் மிகவும் கவனமாக குழந்தையை கண்காணிக்க வேண்டும்.

ராகுலுக்கு இப்போது 2 1/2 வயது ஆகிறது. அவனுக்கு இதுவரை 4 முறை உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அவனது உடல் முழுவதும் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நோய்க்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சியில்தான் உள்ளது. உடலில் தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாக குழந்தையை வைத்திருக்க வேண்டும்.

தீ எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் குழந்தை இருக்கும் இடத்தில் வைக்க கூடாது. மண்எண்ணை, பெட்ரோல், டீசல், கியாஸ், அடுப்பு போன்றவற்றின் அருகே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

காற்றோட்டமான குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்க கூடிய உடைகளை அணிவிக்க கூடாது. சில நேரம் உடலுக்கு உள்ளேயும் எரிந்து செல்லும். அதனால் குழந்தையை நன்கு கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

ராகுலை பொறுத்தவரை நன்றாக இருக்கிறான். அவன் உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் தீக்காயங்கள், வடு போன்றவை ஆறிவிடும்.

அமெரிக்காவில் 73 வயதான ஒருவர் இந்நோயால் தாக்கப்பட்டு உயிர் இழந்தார்.

ராகுலுக்கு தீக்காயத்திற்கான பொதுவான சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டுள்ளது. உடலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வார்டில் வைத்திருக்கிறோம். ஒரு டாக்டர் மற்றும் நர்சு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிகிச்சை பெறும் ராகுல் அருகில் தாயும் தந்தையும் இருந்து வருகிறார்கள். அதிசய குழந்தையை பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

பிராத்தனை

நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்ததில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்து ஒரு தீவில் ஒதுங்கினார்கள். அங்கே மனித நடமாட்டமே இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. உண்ண உணவு எதுவும் இல்லை. ஒதுங்க ஒரு நல்ல இடம் இல்லை.

கடுமையாக அலைந்து ஒன்றும் பயனில்லாது போகவே இருவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்று முடிவு செய்தனர். ஒருவன் இறைவனிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்தான். மற்றொருவனோ ஒரே நிமிடத்தில் தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டான். பிரார்த்தனை முடிந்து அவர்கள் சிறிது தூரம் நடந்தபோது அங்கே ஒரு நீரூற்று தென்பட்டது. தாகம் தீர அதில் அவர்கள் தண்ணீர் பருகினார்கள்.

இப்போது பசி வந்து காதை அடைத்தது. மீண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இப்போதும் ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொண்டான். சிறிது தூரம் சென்றதும் ஒரு பழ மரத்தைக் கண்டு ஆவலுடன் பழங்களைத் தின்று பசியாறினார்கள்.

அந்தத் தீவில் வாழ வழியில்லை என்பதை உணர்ந்து மறுபடியும் அந்தத் தீவிலிருந்து வெளியேறி ஊர் போய்ச் சேர வேண்டும் என்று இருவரும் இறைவனைப் பிரார்த்தித்தார்கள். வழக்கம்போல ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டான். என்ன ஆச்சரியம். அப்போது அத்தீவின் பக்கம் ஒரு கப்பல் வந்தது. இவர்கள் கூச்சல் போட்டதும் கப்பலில் இருந்தவர்கள் இவர்களைக் கவனித்து, வந்து இருவரையும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தவனின் மனதில் ஒரு வஞ்சக எண்ணம் உருவானது. அவன் மற்றவன் கப்பலில் ஏற கூடாது என்று தடுத்தான். ஏன் என்று அனைவரும் கேட்க,

அவன் சொன்னான், ''ஒவ்வொரு முறையும் நான் நீண்ட நேரம் வேண்டி உருகிக் கடவுளை வழிபட்டு ஒவ்வொன்றையும் அடைந்தேன். இவனோ பேருக்குப் பிரார்த்தனை செய்தவன். இவனுக்கு இந்த பலனை அடையத் தகுதியில்லை,''.

அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது, ''மூடனே, உன்னால் தான் எல்லாம் நடந்தது என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் உன் நண்பனின் பிரார்த்தனைக்குத் தான் எல்லாமே கிடைத்தது. ஒரு நிமிடம்தான் வேண்டினாலும் அவன் என்ன வேண்டினான் தெரியுமா? 'இறைவனே, என் நண்பன் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்து கொடுங்கள்," என்பது தான். அவனுடைய உண்மையான பிரார்த்தனைக்கு செவி சாய்த்துத் தான் நான் எல்லா உதவிகளையும் செய்தேன்,''.

முதலாமவன் வெட்கித் தலை குனிந்து தன் நண்பனிடம் மன்னிப்புக் கோரினான்.

காப்பி பேஸ்ட் ஜாப்.. இணைந்துகொள்ளுங்கள்

இணையத்தில் உலா வரும் பெண்கள் பலரும் நாமும் ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது. தினமும் ஆன்லைனில் வேலை தேடுபவர்களில் 52% பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.


கணவன் கொண்டு வரும் பணத்தினை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதும்... சின்னச் சின்ன ஆசைச் செலவுக்காக பணத்தினைக் கேட்கும் பொழுது, அது கணவனுக்கு பிடிக்காத ஆசையாக இருக்கும் பொழுது வீண் செலவு என்று தட்டிக் கழிப்பதும், பெண்கள் மனதில் சிறு நெருடல் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கணவர்மார்கள், மனைவியை சமாதானம் செய்ய, மறுப்புக்குப் பின் ஏற்றுக் கொண்டாலும்... இவை, மனைவிமார்களை, நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது.
இந்த மன உறுதியினை திடமாகக் கொடுத்தது, கணவன்மார்கள் இல்லைஎன்பது எல்லோர்க்கும் தெரியும். ஏனெனில், அவர்கள் மனைவி விருப்பத்திற்கே சென்றுவிடுவார்கள். ஆனால் பாருங்க, இந்த மீடியா இருக்கே மீடியா!!! நீங்க என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீங்க என்ற கேள்வியினை எழுப்புவதும்... ஹவுஸ் வொய்ப் என்றால்... ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்களைப் போல ஒர் பார்வையை காட்டியும் காட்டாதது போல மறைப்பதும். நடு நடுவே... நான் இங்கே வேலை செய்கிறேன்... இவ்வளவு சம்பாதிக்கிறேன்.. என்று பெண்கள் கூறுவதனையும் கேட்பதுதான்... இந்த உறுதியான வேலை தேடுதலுக்கான காரணம்.

பெண்களுக்கு வீட்டிலேயே சரியாக வேலை இருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருந்தாலும்.... ஏதோ சின்னச் சின்னச் செலவுக்காக கைக்காசு சம்பாதித்தால்... அதனைக் கொண்டு சுற்றுலா செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். அதற்காக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கைத்தொழில்கள் பல இருந்தாலும்... எல்லாமே கணணி உலகமாகிவிட்ட நிலையில், இன்றைய பெண்டீர்கள் பலரும், இணைய உலகத்திற்குள் வந்துவிட்டதால், அதில் கிடைக்கும் வருவாய்ப்பினை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.


ஆன்லைன் வேலை என்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியான ஒர் பணி. என்னும் சொல்லப்போனால்.... காலை 9 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் கிடையாது. வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும் என்ற நிலையும் கிடையாது. பகலில் தான் செய்ய முடியும் என்ற நடைமுறையும் கிடையாது.

விரும்பும் நேரத்தில், கிடைக்கும் ஓய்வில், நினைத்த நேரத்தில் செய்து கொடுக்கும் பணி தான் ஆன்லைன் ஜாப். ஆமாங்க, 10 நிமிடம் செய்துவிட்டு, ஓடிப்போய், சோற்றை வடிச்சிக்கலாம். 

பள்ளிக்கூடத்திலிருந்து வரும், குழந்தைக்கு ஒர் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, படிக்க வைத்துவிட்டு சாவகாசமாக வந்து உட்கார்ந்து இரவு செய்யலாம். கொஞ்சம் போரடிச்சா... டீவி கூடப் போட்டுப் பார்த்துக்கலாம். யாரும் கேட்கப் போவதில்லை.

அதற்காக, பணம் யாருங்க என்று கேட்காதீங்க. நீங்கள் செய்தது வேலைதான்னா.... செய்த 10 நிமிட வேலைக்கும் பலன் கிடைக்காது போகாது. அப்படி 10...10...10... 1 மணி நேரம்... 1 மணி நேரம்... 100 மணி நேரம் ... என கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம்.

ஏற்கனவேச் சொன்ன மாதிரி... சுற்றுலாப் பணம் உங்க வீட்டுக்கு வந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஆமாங்க... நீங்க உண்மையாக, சரியாக, மனசாட்சியின்படி வேலை செய்தால்... 10 ஆயிரம் என்ன, 1 இலட்சம் கூட சம்பாதிக்க முடியும்.

இவ்வளவு சொல்றேன்.... ஆனால், இம்புட்டு சொல்லியும் அது என்ன ஆன்லைன் ஜாப்புன்னு மட்டும் சொல்லவே இல்லையே என்று வருத்தம் கொள்ளாதீர்கள்... நீங்க ஏன் வருத்தம் கொள்ளப் போகிறீர்கள்... என்னத் திட்டிக் கொண்டு இருப்பீர்கள்.. அப்படித்தானே!! ( சரி, திட்டுனவங்க மன்னிப்பு கேட்காமலா போகப் போறீங்க.. அப்பப் பார்த்துக்கிறேன்)

ஆன்லைன் ஜாப்பில் பல வகையானது இருக்கிறது. அவை ஒவ்வொன்றினையும் சொல்லணும்னா... ஒர் பதிவில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒர் 3 ஆர்ட்டிகள். சொன்னதில் ஆயிரம் டவுட் வரும்... அதனை நீங்கள் கேட்க, நான் சொல்ல... என அதற்கு 3 நாட்கள். இப்படி ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் பற்றியும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தரவே 1 + மாதம் ஆகிவிடும். 

அவ்வாறு 1 மாதம் ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொண்டீர்கள்... அப்புறம் என்ன, நீங்களும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

எவ்வளவோ செலவு செய்து, பிள்ளைகளை ப்ரீ கேஜில சேர்க்கிற நாம ஒர் ரூ.1500/- செலுத்தி ஆன்லைன் ஜாப் பயிற்சி எடுத்துக்க மாட்டோமா!! அதுவும், ஒரே மாதத்தில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்... இது ஒன்றும், டிகிரி படிச்சிட்டு வேலை தேடி அழைகிற படிப்பு அல்ல. உடனுக்கூடன் செய்து பணம் சம்பாதிக்கக்கூடிய பயிற்சி. அதாவது, வொர்க் ஷாப் மாதிரி. படிக்கிறது எல்லாம் கிடையாது. நேரடியாக வேலையில் இறங்கிட வேண்டியதுதான். ஆரம்பத்தில் கொஞ்சம் தவறுகள் நேர்ந்தாலும்... போகப் போக தவறுகள் திருந்த... வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஆகையால், வேலை தேடி அழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள், பயிற்சியே செய்யக்கூடிய வேலைக்குத்தான். சேர்ந்தவுடனே வேலை செய்ய ஆரம்பிப்பதுடன்.... வருவாயும் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

பின்னே என்ன...இப்பவே சேர்ந்துவிடலாம் தானே!!..

இதோ என் ரெபரல் லிங்க்... இந்த லிங்க் மூலமாக ஆன்லைன் ஜாப் தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகள் எடுத்துக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

இன்னும் என்ன வேலை என்று கேட்டால், ஒர் எளிமையான பணியினை எப்படி செய்வது என்ற பயிற்சி விடியோ கீழே கொடுத்திருக்கிறேன் பார்த்துவிட்டும், மேல் உள்ள எனது லிங்க் வழியாகவே படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

Aug 10, 2013

வீரபாண்டிய கட்டபொம்மன் அல்ல, கெட்டி பொம்மு நாயக்கன்.!!!

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது . வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம், நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் .

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும் !

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுதுவதே
ஒரு வரலாற்று பிழையாகும் . மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளத் தளைப்பட்ட பொது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன . இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?
ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் . முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் . அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வற்புறுத்திப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான், அவர்களை சாட்டையால் அடித்தும், கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும், நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும், சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழகவராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும்.

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே ! அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் . ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம்அறியலாம்.

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799-ல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான் . ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும் , அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 05.08.1799-ல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார், 07.08.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம், தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, அழகாபுரி, நாகலாபுரம், காடல்குடி, குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை, கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி, ஆவுடயாபுரம், தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.