Aug 5, 2013

டெஸ்ட் டியூப் பேபி

இயற்கையாக குழந்தைப் பேரு இல்லாத பெண்களுக்கு, இந்த சோதனை குழாய் மூலம் குழந்தைப் பேரு அடையும் விதத்தை இந்த உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் டாக்டர். ராபர்ட் எட்வர்ட்ஸ்.

அறிவியல் ஆச்சரியங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது டெஸ்ட் டியூப் பேபி எனப்படும் சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த டாக்டர். ராபர்ட் எட்வர்ட்ஸ் தன்னுடைய 87 வயதில் மரணம் அடைந்துவிட்டார்.

எட்வர்ட்ஸ் அன்று ஆரம்பித்து வைத்த இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை உலகம் முழுவதும் இன்று வெகு பிரபலமாக உள்ளது. உலகில் இன்று கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ராபர்ட். உலகின் முதல் சோதனைக் குழாய் முறை குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்தது. அது ஒரு பெண் குழந்தையாகும். அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். தற்போது 34 வயதாகிறது லூயிஸ் பிரவுனுக்கு.

2010ம் ஆண்டு ராபர்ட்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 2011ல் இங்கிலாந்தின் நைட் பட்டம் கிடைத்தது. உலகம் முழுவதும் இயற்கையான குழந்தைப் பேறை அடைய முடியாத பெண்களுக்கு தெய்வம் போல இன்று துணை நிற்பது இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறைதான்.

இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment