Aug 19, 2013

தெரிந்துகொள்ளுங்கள்

மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன்?
திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது.

மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம்.  வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.

கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.

ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் 
என்பதற்காகவே இவ்வாறு ஆரத்தி எடுக்கப்படுகிறது.  சரஸ்வதியின் நிறம் வெண்மை, லட்சுமியின் நிறம் மஞ்சள். எனவே, சுண்ணாம்பும் மஞ்சளும், அதாவது வெள்ளையும் மஞ்சளும் கலந்து சிவப்பு என்கிற ஆரத்தி உண்டாகிறது.  எனவே, ஆரத்தி கொண்டு சுப நிகழ்ச்சிகள் முடிந்தவுன் 
சம்பந்தப்பட்டவர்களை வரவேற்கும்போது அவர்கள் மீது கண் திருஷ்டி விழுவதில்லை. 

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

1 comment: