Aug 2, 2013

இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்

1.7.2013ந் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் திரு வெள்ளையப்பன் பஸ் நிலையம் அருகில் பட்டப் பகலில் 23 வெட்டுக்களுடன் படு கொலை செய்யப்பட்டார்.  வெள்ளையப்பன் கொலையை போலவே,

19.7.2013ந் தேதி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஆடிட்டர் ரமேஷ் இரவு 10 மணியளவில் தனது ஆலுவலகத்திற்கு வெளியே பயங்கரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

நடந்த இரண்டு சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமில்லாமல், 1980 முதல் இன்று வரை தமிழகத்தில் கொல்லப்பட்ட இந்து இயக்களின் பொறுப்பளார்களை கணக்கில் கொண்டால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறித் தாக்குதல் எந்தளவிற்கு இருந்ததே அதே அளவிற்கு தமிழகத்திலும், இந்து இயக்கங்களின் சொந்தங்களை வெட்டி சாய்த்த  கொடுமை சொல்லி  மாளாது.  இவ்வாறு நடக்கும் பயங்கரவாத செயல்களை  ஆளும் கட்சியினர் கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமில்லாமல, கொலையாளிகளை பிடிப்பதில் கூட அக்கறை காட்டுவதில்லை.


1967க்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கதினர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததின் காரணமாகவே, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது முறையான சட்டபடியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை.

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.  இஸ்லாமிய பாதுகாப்புப் பேரவை, அல்-உம்மா, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி), ஜமாத்அத-இ-இஸ்லாமி-இந்த், எஸ்.ஐ.ஓ. ( மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பு) , தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அகில இந்திய ஜிகாத் கமிட்டி, தேசிய பாதுகாப்புப் பேரவை, மனுநீதி பாசறை , ட்ரூத் வாய்ஸ் போன்றவற்றுடன்,  1998-ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்கு பின் அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது, தடை செய்யப்பட்டவுடன் மனித நீதி பாசறை என்ற பெயரில் ஒரு புதிய இயக்கம் துவங்கப்பட்டது.  

கேரளத்தின் எல்லையில் அமைந்துள்ள கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மனித நீதி பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருந்தன.  இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரளத்தில் உள்ள என்.டி.எஃப்பிடமிருந்து கிடைத்தன.   மனித நீதி பாசறையில் செயல்படும் இரண்டு முக்கிய அமைப்புகள் ஒன்று அறிவகம்  மற்றது தமிழ்நாடு டெவலப்மென்ட் பவுண்டேஷன் டிரஸ்ட் என்பதாகும்.  இந்த இரண்டு அமைப்புக்கள் பற்றியும், மனித நீதி பாசறையைப் பற்றியும் துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் திரு. சஞ்சய் அரோரா தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும்.  மனித நீதி பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  மேலும் இந்த அமைப்பில் உள்ள இரண்டு அமைப்புகளும் மனித நீதி பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகிறது.  

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தை கூறி இந்த கருத்தை தெரிவித்தார்.  நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்துகளை இஸ்லாமாக மதம் மாற்றி அவ்வாறு மதம் மாறியவர்களை தேனி மாவட்டத்தில் உள்ள முத்துதேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்பபட்டு , அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்கு பயிற்சி எனும் பெயரில் முளை சலவை செய்வது முக்கிய கடமையாகும்.  இதில் இவர்களுக்கு 1992ல் நடந்த அயோத்தி சம்பவம், 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரம் போன்றவற்றின் காட்சிகள் அடங்கிய சி.டியை காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது.  இதன் காரணமாக நெல்லிக்குப்பத்தில் சில வீடுகளில் சோதனை நடத்திய போது பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆகவே தமிழகத்தில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாத செயல்களை செய்யும் அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது அரசுக்கும், காவல் துறையினருக்கும் நன்கு தெரிந்தும், நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டும் மர்மம் என்ன என்பது தெரியவில்லை.

நன்றி: தமிழ்ஹிந்து.


0 comments:

Post a Comment