Aug 2, 2013

காய்கறிகளின் மகத்துவம் - 1

புடலை: 

இது சற்று நீரோட்டமுள்ள காய். ஆகை யினால் இது சூட்டு உடம்புக்கு ஏற்றதாகும். உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். குளிர்ந்த தேகத்துக்கு ஆகாது.
இது ஒரு சத்துள்ள உணவாகையால் கிடைத்தபோது வாங்கி சமைத்து உண்ணலாம்.

மேலும் இது பத்தியத்துக்கு மிகவும் சிறந்த காய். எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திhpதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீர்ய புஷ்டியைக் கொடுக்கவல்லது. இதனால் ஏற்படும் தீமைக்கு கடுகுப் பொடி, கரம் மசாலா மாற்றாகும். இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்.

பப்பாளி: 

ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம்.
பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.

முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமையான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.

சுரைக்காய்: 

குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது.
கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜPரணத்தை உண்டாக்கி விடும்.

  •  பெண்களுக்கு பால் சுரப்பில் நல்ல பலன் தரும்.
  • உடல்சூடு, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்றுப் புண் சரியாகும்.
  • உடல் குளிர்ச்சி பெறும்.
  • மூல வியாதி விலகும்.
  • இரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
  • உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவைகளுக்கு அருமையான மருந்து.
  • உடல் பருமன், அதிக கொழுப்பு இவைகளுக்கு சுரைக்காய் சாறு அருந்த வேண்டும்.

சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீர்ய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.







0 comments:

Post a Comment