Aug 5, 2013

‘லூயிஸ் பிரவுன்’ - முதல் டெஸ்ட் டியூப் பேபி

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் வசித்து வந்தவர் லெஸ்லி பிரவுன். இவருக்கும் ஜான் என்பவருக்கும் 1969-ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 9 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அந்த சமயத்தில்தான், மருத்துவ விஞ்ஞானிகள் ராபர்ட் எட்வார்ட்ஸ் மற்றும் மகப்பேறு நிபுணர் பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோர் செயற்கை கருவூட்டல் முறையை உருவாக்கி இருந்தனர். 1978-ல் ஓல்டுஹாம் மருத்துவமனையில் இரு ஆராய்ச்சியாளர்கள் அளித்த செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் லெஸ்லி பிரவுன் கருவுற்றார்.

செயற்கை முறையில் கருத்தரிப்பது சிசுவுக்கு நல்லதல்ல. குழந்தை ஊனத்துடன் பிறக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். அதை தவிடுபொடியாக்கும் வகையில், முழு ஆரோக்கியத்துடன் கொழுகொழுவென பெண் குழந்தை பிறந்தது. இது அப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயற்கையாக குழந்தை பெற முடியாதவர்கள் டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெறலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. முதல் டெஸ்ட் டியூப் பேபிக்கு ‘லூயிஸ் பிரவுன்’ என்று பெயர் வைத்தார்கள். உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் பேபியை பெற்றவர் என்ற பெருமை லெஸ்லிக்கு கிடைத்தது.

அதன்பிறகு நடேலியா என்ற இரண்டாவது குழந்தையையும் அவர் டெஸ்ட் டியூப் முறையிலேயே பெற்றார். என்பது கூடுதல் தகவல்.

 உலகின் முதல் சோதனைக் குழாய் முறை குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்தது. அது ஒரு பெண் குழந்தையாகும். அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன்.
தன்னுடைய கண்டுபிடிப்பால் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் பிரவுன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் ராபர்ட். தனது குழந்தை போலவே அதை பாசத்துடன் கவனித்து வந்தார். லூயிஸ் பிரவுனுக்கும், வெஸ்லி முலிந்தருக்கும் திருமணம் நடந்தபோது கூடவே இருந்தார். லூயிஸ் பிரவுனுக்கு 2006ம் ஆண்டு இயற்கையான முறையில் மகன் பிறந்தான். அந்த பிரசவத்தின்போதும் ராபர்ட் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment