Aug 1, 2013

நம்பிக்கை மூலம் நோய் குணமடையுமா?

தெய்வ நம்பிக்கை மூலமாகவும், சமைய சார்புள்ள நோம்புகளை கடைபிடிப்பதாலும் நோய்களிலிருந்து நிவாரணம் பெற முடியுமென்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.

இது வளர்ந்துவரும் விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்துறை கோட்ப்பாடுகளுக்கும் முரணானதாக தோன்றினாலும், அண்மைக்காலத்தில் தோன்றிய உள்ளமும் உடலும் சார்ந்த மருத்துவம் ( Psychosonatic Medicine ) பண்டைக்கால நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இதன் அடிப்படை மன ஆற்றல் உடல் ஆற்றலைக் கட்டுப்படுத்தவல்லது என்பதாகும். நாட்பட்ட நோயுடையவர்களுக்கு அந்திமகாலத்தில் மருந்து கொடுப்பது (use of placebo) நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆகும்.

நோயாளிகளுக்கு தாம் மருந்து உட்கொள்ளுவதால் நோய் தீரும் என்ற நம்பிக்கையே பெரும்பாலோருக்கு குணமளித்துவிடுகிறது. இதன் அடிப்படையில் ஆழ்துயிலுட்டி (Hypnotism) மனதை ஒருமுகப்படுத்தி நோயை குணப்படுத்துவதும் அடங்கும்.

0 comments:

Post a Comment