Oct 22, 2013

செவிடாக இருங்கள்...

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.

அவை மலையேற ஆரம்பிக்கும்
போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள்
பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் கூறியதைப் புரிந்துக் கொண்ட தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

மச்சத்தின் பலன் தெரியுமா உங்களுக்கு?

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை – பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

மூவரில் யார் வருவது?

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..

அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..

அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?

நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

Oct 18, 2013

ஓர் உண்மை

ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?

இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.


மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

Source :- ஆனந்தம்

மன்னிக்க முடியாத கோபம்

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.

எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒருவன் 'பத்து' என்றான்; அடுத்தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.

இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார். மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.

அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்,தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.

Oct 17, 2013

கடவுளை காணவேண்டுமா?

ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் டாக்டர் ஒருவர் வந்தார்.
“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?” என கேள்வி கேட்டார். “ஓ! பார்த்திருக்கிறேனே!! காலையில் கூட அவளிடம் பேசினேன்” என்று பரமஹம்சர் பதிலளித்தார்.

“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”
சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்வார் என ஆவலோடு காத்திருந்தனர்.அப்போது சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று வினவினார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.

“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”
“அப்படியானால் டாக்டர் தொழில் நன்றாகத் தெரியும் தானே?”
“நன்றாகத் தெரியும்”
“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”
“அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே?”
“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப்படித்திருக்கிறேன்.நீங்களும் அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்றார் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்.

எல்லோரும் வியந்து மகிழ்ந்தனர்.

யட்சன் கொடுத்த தங்க ஜாடிகள்

ஒரு ஊரில் ஒரு மரம் இருந்தது;அந்த மரத்தில் யட்சன் ஒருவன் வசித்து வந்தான்.யட்சன் என்றால் குபேரன் என்று பெயர்.ஒரு நாள் அந்த மரத்தின் அருகே நாவிதன் ஒருவன் போனபோது, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்ற குரல் கேட்டது.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த அவன் மனிதர்கள் யாரும் இல்லாததால் சற்றுக் குழம்பிப் போனான்.இருந்தபோதிலும் ஏழு ஜாடித் தங்கம் என்ற வார்த்தை அவனுக்குள் ஆசையைத் தூண்டிவிட்டதால் “ஆமாம்,வேணும்”என்றான் பெருத்த எதிர்பார்ப்போடு!

“நீ உனது வீட்டுக்குப் போ.ஜாடிகளை உன் வீட்டில் வைத்துவிட்டேன்” என்று யட்சன் பதில் அளித்தான். அதைக் கேட்ட உடனே அந்த நாவிதன் வேகவேகமாக தனது வீட்டிற்குச் சென்றான்.அங்கே கண்ட காட்சி அவனை திகைக்க வைத்தது.ஏழு ஜாடிகள் அங்கே இருந்தன.
மூச்சிரைக்க ஓடி வந்த நாவிதன் அவசரமாக ஜாடிகளைத் திறந்து பார்த்தான்.எல்லாவற்றிலும் தங்கக் காசுகள் ஜொலித்தன.ஆறு ஜாடிகளில் தங்கம் நிறைந்திருந்தது.ஆனால்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிற்குத் தான் தங்கக்காசுகள் இருந்தன.ஆறு ஜாடிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்த நாவிதன்,ஏழாவது ஜாடியைப் பார்த்ததுமே அவனது மகிழ்ச்சி காற்று போனபலூனாகச் சுருங்கிப் போனது.

ஆறு ஜாடி தங்கத்தை செலவழித்து வாழ்க்கையை நிறைவாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்குப் பதிலாக,ஏழாவது ஜாடி குறைவாக இருக்கிறதே;அதை எப்பாடு பட்டாவது நிரப்பவேண்டும் என்ற தணியாத ஆர்வம் அந்த நாவிதனுக்கு ஏற்பட்டது.மனித மனத்தின் சுபாவங்களில் இதுவும் ஒன்று.

அந்த பாவப்பட்ட நாவிதனும் தன்னிடம் இருந்த பொன்,வெள்ளி,நகைகள் எல்லாவற்றையும் விற்று அதனை தங்கக்காசுகளாக்கி ஏழாவது ஜாடியில் போட ஆரம்பித்தான்;ஆனால்,எத்தனை காசுகள் போட்டாலும் அந்த மாய ஜாடி முன்பு போலவே குறைவாகவே இருந்தது. மேற்கொண்டு என்ன செய்து இந்த ஏழாவது ஜாடியை நிரப்பலாம் என்று நாவிதன் இரவும் பகலும் யோசிக்க ஆரம்பித்தான்.

சாப்பாட்டிற்காக தனது குடும்பத்திற்கு அதிக செலவாகிறது என்று அவனுக்குத் தோன்றியது.அதனால்,தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்து மீதிப்பணத்தைச் சேர்த்து, அவைகளை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடிக்குள் போட்டு வந்தான். அவன் அரண்மனையில் வேலை பார்த்து வந்தான்; அந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தையும் ஏழாவது ஜாடிக்குள் போட்டான். என்ன செய்தாலும் ஏழாவது ஜாடி நிரம்பவில்லை;
அந்தக் கவலையின் காரணமாக அவன் உடல் இளைக்க ஆரம்பித்தது;தாடி மீசையோடு நீண்ட நாள் நோயில் இருந்தவனைப் போன்ற தோற்றமடைந்தான்.

ஒரு நாள் அரசனைப் பார்த்து அவன், “குடும்பத்தை நடத்துவதற்கு பணம் போதவில்லை; ஆகவே, எனக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக்கித் தாருங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.அரசன் மிகவும் நல்லவன். நாவிதனுக்கு இரண்டு மடங்காக சம்பளத்தை உயர்த்தினான்.வருமானம் அதிகரித்தப்பிறகும் நாவிதன் தன் குடும்பத்திற்காக செலவு செய்யாமல் தங்கக்காசுகளாக்கி அந்த ஏழாவது ஜாடியில் போட்டுக்கொண்டே வந்தான். ஆனால், ஜாடி நிரம்பவில்லை; மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஓய்வு நேரங்களில் பிச்சை எடுக்கத் துவங்கினான்.அதில் வருகின்ற பணத்தையும் ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான்.ஜாடி நிரம்பவில்லை;

இப்படியே சில மாதங்கள் ஓடின. நாவிதனுடைய நிலைமை வரவர மோசமாகிக் கொண்டே வந்தது. அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது;ஒரு பிச்சைக்காரனைப் போலவும், பைத்தியம் பிடித்தவனைப் போலவும் அவன் காணப்பட்டான்.அவனது குழந்தைகள் போதிய சாப்பாடு இல்லாமல் எலும்பும் தோலுமாக இளைத்துப்போய்விட்டன. அவன் மனைவி வறுமையாலும், பசிக்கொடுமையாலும் நோயாளியாக மாறிவிட்டான்.


இதை எல்லாம் கவனித்து வந்த மன்னன், ஒரு நாள் நாவிதனை அழைத்து, “உனக்கு என்ன ஆயிற்று?நான் தரும் இரட்டிப்பு சம்பளத்தில் நீயும் உன் குடும்பத்தினரும் மிகவும் வசதியாக வாழ்க்கை நடத்தலாமே. அப்படியிருக்க உன் நிலைமை அதற்கு எதிர்மறையாக அல்லவா இருக்கிறது? நீ இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதி அளவு வாங்கும்போது திருப்தியோடும், மகிழ்ச்சியோடும் இருந்தாயே? இப்போது உன் முகத்தில் கவலையும், உன் வீட்டில் வறுமையும் நிரந்தரமாகத் தங்கிவிட்டதே! ஏழு ஜாடித்தங்கத்தை வாங்கிக் கொண்டாயா?” என்று கேட்டான்.
நாவிதன் அதிர்ந்து போனான். “ராஜாவே உங்களுக்கு இந்த உண்மை எப்படித் தெரியும்? யார் சொன்னார்கள்?” என்று கேட்டான்.
உடனே அரசன் நடந்தவற்றை புரிந்து கொண்டான்.

 “அடப்பாவி, தங்கத்திற்கு ஆசைப்பட்டு தங்கமான வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாயே.யாரிடம் யட்சனின் செல்வம் வந்திருக்கிறதோ அவன் இப்படிப்பட்ட நிலைக்கு வந்துவிடுவான் என்பது உனக்குத் தெரியாதா?”
இதே யட்சன் ஒரு நாள் ஏழு ஜாடித் தங்கத்தை எனக்குத் தருவதாகச் சொன்னான். இது வரவுப் பணமா? அல்லது செலவுப் பணமா? என்று கேட்டேன். அதாவது அந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டியதா? அல்லது புதைத்து வைக்க வேண்டியதா? என்று தெரிந்துகொள்ளவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்.

உடனே யட்சன் ஒரு பதிலும் சொல்லாமல் ஓடிப்போய்விட்டான்.அந்தப் பணத்தை(தங்கத்தை) யாராலும் செலவழிக்க முடியாது என்பது உனக்குத் தெரியாதா?

மஹாலட்சுமி தரும் ஐஸ்வர்யத்திற்கும், யட்சனாகிய குபேரன் தரும் ஐஸ்வர்யத்திற்கும் வித்தியாசம் உண்டு.மஹாலட்சுமி தரும் பணத்தை(தங்கத்தை & செல்வ வளத்தை) செலவழிக்க முடியும்.ஆனால், யட்சனாகிய குபேரன் தரும் பணத்தை உன்னால் செலவழிக்க முடியாது; அது மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தான் தரும்.உடனே போய் யட்சனிடம் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடு” என்று ஆலோசனை தந்தான்.


அதைக் கேட்டதும் நாவிதனுக்குப் புத்தி வந்தது. உடனே அவன் யட்சன் வாழும் மரத்தின் அருகே சென்றான். “யட்சனே, உன் தங்க ஜாடிகள் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்” என்றான்.
“நல்லது அப்படியே ஆகட்டும்” என்று யட்சன் பதிலளித்தான். அடுத்த நிமிடமே நாவிதன் அவசரமாக தன் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தான்.மாயமாக வந்த ஜாடிகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.

நாவிதன் தலையில் கைவைத்துக் கொண்டு அழுதான். ஜாடிகள் மட்டுமா மறைந்தன; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடு பட்டு சேர்த்து வைத்த அத்தனை செல்வமும் அல்லவா கையை விட்டுப்போய்விட்டது.அவைகளை மறுபடியும் சேர்க்க இன்னும் எத்தனை வருடங்கள் தானும் தன் குடும்பத்தாரும் கடினமாக உழைக்க வேண்டுமோ? என்ற கவலையும் பயமும் அவனை மிகவும் வாட்டியது.பேராசை பெருநஷ்டம்;கடினமான உழைப்பினால் அடைந்த செல்வம் தான் தங்கும்;மற்றவை மழையில் நனையும் மண்கட்டியைப் போல கரைந்துவிடும் என்ற உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.

தங்கத்தின் மீது ஆசை வந்துவிட்டால் தூக்கம் போய்விடும்;சாப்பாடு பிடிக்காது;மனம் வேறு எந்த ஒன்றிலும் லயிக்காமல் போய்விடும்;என்ற உண்மையை இந்த நிஜச்சம்பவத்தின் மூலமாக ராமக்ருஷ்ண பரமஹம்சர் விவரித்திருக்கிறார்.

எழுந்தவுடன் தண்ணீர் அருந்துபவரா நீங்கள்?

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!

பல பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளின் மூலமும் நாம் அனைவரும் அறிந்தது அதிகாலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவது மிகவும் சிறந்தது என்று???பொய் இப்படி இருக்க உண்மை யாதெனில் வெறும் வயிற்றில் கட்டாயம் யாரும் சிறிதளவு கூட தண்ணீர் அருந்த கூடாது?

இப்போது சற்று அறிவியல் ரீதியான விளக்கத்தினை பார்ப்போம்.    
நாம் இரவில் உறங்கும் போது வளர்சிதை மாற்றம் நடைபெறுவதை அறிவோம். இந்த வளர் சிதை மாற்றத்தின் போது நமது மண்ணீரல், கல்லீரலில்   மற்றும் வயிற்றில் பல விதமான வேதி பொருட்கள் உருவாகிறது.
 
நீன நீரானது ஒரு வகை அமிலமே . இது நமது உடலில் உள்ள ஒரு  மசகுப் பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு (எண்ணெய்).

ஜீவ நீர் ஹைட்ரோ குளோரிக் அமிலமும், நைட்ரிக் அமிலம்  - நொதித்தளுக்கு பயன்படும் வேதி பொருள் - இந்த இரண்டு அமிலமும் கலந்த கலவைக்கு பெயர் ஜீவ நீர். இந்த ஜீவ நீரானது நமது உடலில் நீர்ம நிலையில் இருக்கும் ஒரு நெருப்பு. இதை தான் பெரியோர்கள் ஜடராக்னி என்று அழைப்பர்.  

இந்த  இரண்டு  நீர் மட்டுமே ஜீரணத்திற்கு  அதாரம். ஜீரணத்தினால் மட்டுமே நாம் உயிர் வாழ்கிறோம். இந்த இரண்டு நீரினால் மட்டுமே உணவானது நொதித்தளுக்கு உட்பட்டு உணவு செரிகப்படுகிறது. ஜீவ நீர் என்ற ஜடராக்கினி[இது ஒரு நீர்ம நிலையில் உள்ள ஒரு தீ ] உணவை எரித்து சாம்பலை மலமாகவும், நீராவியை சிறு நீராகவும் வெளி தள்ளுகிறது. இந்த இரு வேலைக்கும் நின நீரானது உதவுகிறது.  
[குறிப்பு: நமது வயிற்றில் மிச்சியோ , கிரைண்டரோ உணவை அரைப்பது இல்லை]    

மற்றும் பல விதமான சுரபி நீர்களும் உற்பத்தியாகிறது. இவை அனைத்தும் உடலிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. மேலும் இவை அனைத்தும் சேர்ந்து வேதிவினை புரிய தயாராகி  இருக்கும் நிலையில் நாம் அருந்தும் நீரானது வேதித் தன்மையை குறைத்து நச்சு பொருளாக மாறுகிறது. [ இதன் விளைவாக நம் உடலில் நாற்பத்தி இரண்டு வகையான வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. மேலும் பித்த வியாதிகளான நீரழிவு மற்றும் மேக நோய்(மோக நோய்) ஏற்படுகிறது.

இந்த ஒரு அறியா பழக்கத்தினால் பல பேர் நோயில் சிக்குண்டு கொள்கிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் விரைவில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வெளிப்படும்.  

காலங் காலமாக  நாம் பழகிவரும் இத்தவறான இச்செயலை நாம் நிறுத்தவேண்டும். இது வியாபாராம் நோக்கில் இச்செய்தியை பரப்பி இருக்கிறாக்கள்.ஏனென்றால் நாம் உறங்கும் நேரத்தில்  நம்  உறுப்புக்கள் சாந்தமாக இருப்பதால் மொத்த உடலிலுமே வெப்ப சக்தி குறைந்துகாணப்படும். இப்படி இருக்க நமது  உடலில்  முன்று  முக்கிய உறுப்புகளான இருதயம், சிறு குடல், கல்லீரல் வெப்ப சக்தியால் மட்டுமே இயங்க கூடியது.  காலையில் இந்த முன்று உறுப்புகளிலும் வெப்ப சக்தி மிகவும் குறைந்து காணப்படும். மேலும் தண்ணீர் அருந்துவதில் மொத்த உறுப்புகளும் பாதிப்பு அடைகிறது.                                                                                                                            
இப்படி காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் அனைத்து அமிலங்களும் நீர்த்து போய் உணவு பாதையில்  அசிடிட்டி ஏற்படுவதற்கு ஏதுவாகிறது. மேலும் சிறு நீரக நோய்களை உருவாகுகிறது.

தண்ணீர் அருந்தும் போது வேகமாக அருந்தாதிர்கள். வேகமாக அருந்துவதனால் நாம் இரைப்பைகள்   பாதிப்பு அடைகிறது. நம் இரைப்பைகள்   மற்ற  உறுப்புக்கள்  விட மிகவும் மென்மையானது. நமது இரைப்பைக்கும் நீன நீருக்கும் [பல விதமான அமிலங்கள்] இடையில் முயுகஸ் என்ற ஜெல் தன்மையால்] ஒரு பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. நீரை வேகமாக அருந்துவதால் இந்த மண்டலம் பாதிப்படைந்து நம் இரைபைகள்  துவாரம்  அடைகிறது  அதனால் அல்சர்   ஏற்படுகிறது.

தாகம் எடுத்தால்  மட்டுமே நீர் அருந்த வேண்டும்.

சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பும், உண்ணும் போதும், உண்ட அரை மணி நேரம் மட்டும் நீர் அதிகம் அருந்த கூடாது. வேண்டும்  என்றால்  ஓரிரு வாய் நீர் அருந்தலாம்.    

காலையில் வெறும் வயிற்றில் டி, பால், பழ ரசம், சூப், கசாயம், மூலிகை டி, நீராகாரம், இளநீர் வேண்டுமென்றால்  அருந்தலாம். அல்லது நேரிடையாக உணவு உண்ண தொடங்கலாம்.

Oct 9, 2013

தண்ணீர் தனியார்மயம்

“தண்ணீர் தனியார்மயம்” என்ற நிபந்தனையின் பெயரில் கடன்களையும் மானியங்களையும் வழங்கும் உலகவங்கி(அமெரிக்காவின் அடிமை),ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட நாடு சுதாரித்துக்கொண்டால்,தன் உண்மை முகத்தைக் காட்டுகிறது. ‘என்னையே எதிர்க்கிறாயா?அப்படினா,மொத்தக் கடனையும் வட்டியும் முதலுமா திருப்பிக் கொடு’ என கழுத்தில் கத்தி வைக்கிறது.இல்லை எனில்,அந்த நாட்டில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த முதலீடுகளும் உடனே திரும்ப பெறப்படும் என மிரட்டுகிறது.முழுக்க முழுக்க தன்னையே சார்ந்திருக்கும் நிலைமையை உருவாக்கியப் பிறகு இப்படி கொடூரவில்லனாகத் திரும்புகின்றனர்.

ஒரு நாட்டில் செய்யப்பட்ட தன் முதலீட்டை எந்த நஷ்டமும் இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை, ஒரு பன்னாட்டு தண்ணீர் கம்பெனிக்கு உண்டு.ஆனால்,தன் நாட்டு மக்களின் நலனுக்காக,ஒரு கம்பெனியை வெளியேறச் சொல்லும் உரிமை அரசாங்கத்துக்கு இலை;இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.நம் ஊரில்,நம் வரிப்பணத்தில் சலுகைகளைப் பெற்று தொழில் நடத்தும் இந்த நிறுவனங்களை,நம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியாது.அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நம் அரசாங்கம் செயல்படுகிறது.வால்மார்ட் வாலாட்டினாலும்,என்ரான் என்ன செய்தாலும் இவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போவதற்கான காரணம் இதுதான்.ஆனால்,ஈழத்தமிழர்களின் நலனுக்காக இரண்டு வார்த்தை கூடுதலாகப் பேசினால் மட்டும் ‘இறையாண்மை’யை இழுத்துவந்து ஒப்பாரி வைப்பார்கள்.

அதே நேரம் உலகவங்கியோ பன்னாட்டு நிறுவனங்களோ,வீழ்த்தமுடியாத விஸ்வரூபப் படைப்புகள் அல்ல;உலகம் எங்கும் எத்தனையோ நாடுகலில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.2000 ம் ஆண்டில் ஆந்திராவில்,தனியார்மய ஆதரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் அப்போதைய உலகவங்கியின் தலைவர்,ஜேம்ஸ் உலஃபென்சன்.பல்லாண்டுகளாக நஷ்டத்தையே சந்தித்து வந்த ஆந்திரவிவசாயிகள்,உலக வங்கியின் தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்தி துரத்தியடித்தனர்.
முதலீட்டு சர்ச்சைகளுக்கான சர்வதேச மத்தியஸ்த அமைப்பு(International centre for settlement of investment disputes)என்பது உலக வங்கியின் ஓர் அங்கம்.தண்ணீர் கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு நாடு ரத்து செய்தால்,அந்த நாட்டிடம் பஞ்சாயத்து செய்து,நஷ்ட ஈடு வாங்கித்தரும் அமைப்பு இது.தண்ணீர் தனியார் மயத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகள்,இதிலும் ஓர் உறுப்பினராக வேண்டும்.இந்த நிலையில் தான்,லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த தண்ணீர் கம்பெனிகள் நடத்திய பகாசுரக்கொள்ளைக்குப் பிறகு,பொலிவியா,நிகரகுவா,வெனிசூலா போன்ற நாடுகள் இந்த அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டன.ரோஷமுள்ள நாடு அப்படித்தான் செய்யும்.ஆனால், இந்தியா என்ன செய்கிறது?

தொடர்ந்து தன் வளங்களை எல்லாம் பெருமாள் கோவில் சுண்டல்போல,பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தருகிறது.சொந்த மக்கள் சாகும்போது,பொறுப்பற்ற முறையில் தண்ணீரை வீணடிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தனது வரலாற்றில் மிக மோசமான வறட்சியை இந்த ஆண்டு சந்தித்திருக்கிறது.தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்த வேளையில், “அணையில் தண்ணீர் இல்லாத போது எங்கிருந்து தண்ணீர் விட முடியும்? நாங்கள் சிறுநீர் கழிக்கவா முடியும்? எங்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை.அதனால் சிறுநீர் கூட சீக்கிரத்தில் வராது” என்று திமிரின் உச்சத்தில் பேசினார் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.

அவர் இப்படிப் பேசிய கடந்த ஏப்ரல் மாதத்தில் தான்,நாடுமுழுவதும் ஐ.பி.எல்.போட்டிகளின் ஆறாவது சீஸன் நடந்துகொண்டிருந்தது.அதில் மஹாராஷ்டிராவின் இருபெரும் நகரங்களான மும்பை மற்றும் புனேநகரங்களில் மொத்தம் 16 போட்டிகள் நடைபெற்றன.போட்டி நடைபெறும்போது கிரிக்கெட் மைதானங்களின் பசுமையை பாதுகாக்க,அரசு சலுகைவிலையில் தண்ணீர் வழங்கியது.ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.400வீதம் நாள் ஒன்றுக்கு25,000 முதல் 26,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்,மாநிலம் முழுக்க விவசாயிகள் கருகும் தங்கள் விளைப்பயிரைப் பாதுகாக்க,ஒரு டேங்கர் லாரி  தண்ணீரை ரூ.1500 முதல் ரூ.3000 வரை விலை கொடுத்து வாங்கினர்.இந்த விவரங்கள் முன்கூட்டியே வெளியேவந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும்,கிரிக்கெட் மைதானத்துக்குத் தாராளத் தண்ணீர் விநியோகம் தடைபடவில்லை;

துணிக்கடை பொம்மைக்கு ஆபாசமாக துணி அணிவிப்பதைக் கண்டித்து போராடும் அமைப்புகளுக்கு,மக்கள் தாகத்தில் சாகும்போது விளையாட்டுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் இந்த கொடுஞ்செயல்,ஆபாசமாகத் தெரியவில்லை;பெயரளவுக்கு ஓர் அறிக்கையை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர்.கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல;ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் நட்சத்திரவிடுதிகளில் வீணடிக்கப்படும் தண்ணீரைக்கொண்டு பல லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்க முடியும்.ஏழை மக்கள் சமைக்கவும் குளிக்கவுமே தண்ணீர் இல்லாமல் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும்போது,ஸ்டார் ஹோட்டல்களின் நீச்சல் குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்பதும்,அதில் ஆனந்தமாக நீந்தித் திளைப்பதும் ஆபாசம் இல்லையா?
சென்னை நகரத்தில் அனைத்து சொகுசு விடுதிகளையும் மொத்தமாகக் கணக்கிட்டால் 4,656 அறைகள் உள்ளன.ஒரு நட்சத்திரவிடுதியின் அறைக்கு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த நட்சத்திர ஹோட்டல்கள் ஒரு நாளைக்கு உறிஞ்சி ஏப்பம்விடும் தண்ணீரின் அளவு 50,00,000 லிட்டர்கள்.இதை நுகரும் மக்களின் எண்ணிக்கையோ சில ஆயிரம் பேர்.இதைவிட எண்ணிக்கையில் குறைவான கோடீஸ்வரர்கள் புழங்கும் இடம் கோல்ஃப் மைதானம்.சென்னையில் மட்டும் மூன்று கோல்ஃப் மைதானங்கள் உள்ளன.இவற்றைப் பசுமையாகப் பராமரிக்க,ஒரு நாளைக்கு சராசரியாக 60,00,000 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது.எங்கிருந்து வரும் இந்தத் தண்ணீர்? எல்லாம் மக்களுக்கு வர வேண்டிய தண்ணீர் தான்.நான்கு குடம் தண்ணீருக்காக குழாயடியில் வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கிறார்களே. . . அவர்களின் தண்ணீர்தான்.இதுபோக சென்னையிலும் இதர நகரங்களிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான நீச்சல் குளங்களையும்,வாரம் தோறும் அதில் மாற்றப்படும் தண்ணீரையும் கணக்கிட்டால்,ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு உதவலாம்.

குடிக்கும் தண்ணீரில் மட்டும் இத்தகைய நிலை இல்லை;ஊரே வறட்சியில் தத்தளிக்கும்போது இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள் எதையும் விட்டுவைக்காமல் அங்கு நட்சத்திர விடுதிகள் கட்டுகின்றனர்.ஆறுகள்,குளங்கள்,அருவிகள்,மலைகள் என எந்த நீர்நிலையையும் விடுவதில்லை;எங்கேனும் இயற்கை கொஞ்சம் மிச்சம் இருப்பதாகத் தெரிந்தால்,அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிடுகின்றனர்.பிறகு,கழிவுகளை ஆற்றில் கொட்டி,ஊரெல்லாம் ப்ளாஸ்டிக்கை வீசி,வாகனங்களால் சூழலை மாசுபடுத்தி,அதை ஒரு சாக்கடையாக மாற்றிவிட்டு,வேறு இடம் தேடி கிளம்பிவிடுகின்றனர்.

இப்படி நட்சத்திரவிடுதிகளில்,தீம் பார்க்குகளில்,நீச்சல் குளங்களில்,கோல்ஃப் மைதானங்களில்,கிரிக்கெட்மைதானங்களில் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை இரக்கம் இல்லாமல் வீணடிக்கும் இவர்கள்,கடைசியில் தண்ணீர் பஞ்சம் முற்றியவுடன் ‘மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று கூசாமல் அறிவுரை சொல்கின்றனர்.உண்மையில் இந்த அறிவுரையை ஆளும் வர்க்கம் தன்னை நோக்கியே சொல்லிக் கொள்ள வேண்டும்.ஏனெனில்,ஏழைகள் ஒருபோதும் தண்ணீரை வீணடிப்பதில்லை.தண்ணீர் எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு அடிகுழாயில் தண்ணீர் அடிக்கும் பெண்ணிடம் சென்று,தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிப்பாருங்கள். . . பதில்,வார்த்தைகளில் வராது.

நன்றி: ஜீனியர் விகடன்

தமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு

எழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், நெய்தல், தமிழோசை, தளிரகம்,
தமிழ்த்தென்றல், தமிழோசை, தமிழ்மனை, தென்றல், பொதிகை, மறைமலையகம், முத்தமிழ்இல்லம், பூம்பொழில், தொல்காப்பியர் குடில், ஔவை இல்லம், சாரலகம், தாமரை இல்லம், வைகறை இல்லம், தந்தை திருவிடம், தாய் திருவிடம், முல்லை வாயில், அன்புரு இல்லம், யாழிசை இல்லம், அகம், அடுக்ககம், இல்லம், குடில், நிலையம், மனை, மாளிகை, முன்றில், வீடு எனப் தங்கள்பெயர்த் தேர்வுக்கு ஏற்றவாறு மேற்கண்ட சொற்களை சேர்த்துக்கொள்ளலாம்.