Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Nov 6, 2013

தயிர் எப்படி ஆகிறது?

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.

இப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக்டீரியாக்கள் எங்கிருந்து வருகின்றன?

நாமே நிறைய பாக்டீரியாக்களை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் தயிர். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுடனும், மற்றொரு பொருள் சேரும்போது வேதிவினை நடக்கிறது. அதேபோல, பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை ஊற்றும் போது பாலில் வேதிவினைதான் நடக்கிறது. (சமைப்பதே ஒரு வேதியியல்தான்). பொதுவாக, பாலில் புரதச் சத்து அதிகம். இந்தப் புரதச்சத்துதான் நமது எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால் தயிராகும்போது, இந்தப் புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடுதான் நடக்கிறது.

ஏற்கனவே உறைந்த தயிரில் "லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ்' (Lactobacillus acidophilus) என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும்போது, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைப் பொருளை இந்தப் பாக்டீரியா நொதிக்கச் செய்கிறது. இதன்மூலம் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர்மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின் புரதப் பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் ஈர்க்கின்றன. இதன் காரணமாக புரதப் பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு கெட்டியாகி உறைந்துவிடுகின்றன.

லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதன் காரணமாகத்தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.

உடலில் உணவு செரிக்கவும், நோய்கள் குணமாகவும் லாக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தேவை. இதை உணர்ந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் தயிர், மோரை அதிகம் சாப்பிடச் சொன்னார்கள். நம் வயிற்றுக்குள் செல்லும் உணவை செரிக்க வைப்பதற்கான சில நொதிகளை, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தருகின்றன.

Oct 31, 2013

வீடு கட்டப்போகிறீர்களா?

வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!
நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.jsp)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும்

இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென் பொருளின் சிறப்பாக சொல்லலாம்.
கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்த வித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் சென்டி மீட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செ.மீ.

மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம்.

Oct 22, 2013

2032–ம் ஆண்டில் உலகம்...?

2032–ம் ஆண்டில் பூமியின் மீது இராட்சத விண்கல் மோதி உலகம் அழியும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மாயன் காலண்டர் முடிவுக்கு வந்ததால் கடந்த ஆண்டில் (2012) உலகம் அழியும் என்ற   பீதி எழுந்தது. ஆனால் அது போன்று எதுவும் நடைபெறவில்லை.

ஆனால், இன்னும் 19 ஆண்டுகளில் உலகம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஜோதிடம் தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின் மேதாவிகளான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டவெளியில் எரிகல் எனப்படும் ஆயிரக்கணக்கான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன.

ஆனால், அவற்றில் ஒரு சில இராட்சத கற்கள் பல துண்டுகளாக சிதறி பூமியில் விழுந்துள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல் விழுந்து சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்னும் 19 ஆண்டுகளில் மற்றொரு இராட்சத விண்கல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளது. 1300 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.

அது 2032–ம் ஆண்டு ஆகஸ்ட் 26–ம் திகதி பூமியை தாக்கும் ஆபத்து உள்ளது. இதை உக்ரைன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு வேளை இக்கல் பூமியை தாக்கினால் ஒரு மிகப் பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்பை விட இது 50 மடங்கு கூடுதலாகும்.

அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என பெயரிடப்பட்டுள்ளது.

இதே போன்று மற்றொரு இராட்சத விண்கல் விண்வெளியில் சுற்றி வருவதாகவும், பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

130 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலுக்கு 2007 வி.கே 184 என பெயரிடப்பட்டுள்ளது.

முத்தமிழன்.

Aug 12, 2013

வர்மக்கலை

வர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு ``அடவு வர்மம்'' என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், வர்ம நிலைகளில் அடிபட்டு அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை நீக்கும் உடல் இயக்க ரகசிய முறைகளையும் பற்றி பயிற்சி கொடுத்தார். இந்த வர்ம சிகிச்சை, குருகுல வழி முறையில் கொடுக்கப்பட்டது. அதற்காக அகத்தியர் "வர்மக் குடில்'' என்பதை உருவாக்கிவைத்திருந்தார்.

அகத்தியரின் தன்னலம் கருதாத சேவையின் காரணமாக அவரின் வர்மக் குடில் பயிற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அகத்தியரின் மருத்துவ சேவையை கண்டு உணர்ந்த பாண்டிய மன்னர் வீரத்தளபதிகளுக்கும், இளவரசர்களுக்கும் வர்மக்கலையின் ரகசியங்களை கற்றுக் கொடுக்கும்படி கேட்டு கொண்டார். இதன் மூலமாக தமிழகத்தின் தென்பகுதியில் அகத்தியரின் தமிழ் வர்மக்கலை கொடி கட்டி பறந்தது.

நமது உடலில் 7 விதமான சக்கரங்கள் இயங்குவது போல் நம்முடைய நாடி, நரம்புகளில் 126 சக்கரங்கள் அதாவது வர்ம நிலைகள் உள்ளன.

அவை:

* தொடுவர்மம் - 96

* படுவர்மம் - 12

* தட்டுவர்மம் - 8

* அடங்கல்வர்மம் - 6

* நக்குவர்மம் - 4

இந்த வர்ம நிலைகளை மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்குகின்றன. மனிதர்களின் உடல் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டு அந்த இடத்தில் உள்சதை முறிவு ஏற்பட்டால் வலி உருவாகும். இந்த வலியை நீக்குவதற்கு முதல் கட்டமாக அடிபட்ட வர்ம நிலையை கலைக்கவேண்டும். பின்பு இளக்கு முறை செய்து விறைப்பாக இருக்கும் தசை பகுதியை தளர்த்தி விடவேண்டும். அதன் பிறகு ஒரு துண்டு சுக்கு, வெற்றிலை, 5 மிளகு ஆகியவைகளை வாயில் போட்டு மென்று, அடிபட்டவரின் மூக்கு துவாரங்களிலும், காது துவாரங்களிலும் ஊதவேண்டும். இப்படி செய்வதன் மூலமாக மூளை பகுதியில் உள்ள நியூரான்கள் இயக்கப்பட்டு, மின் அஞ்சல் செய்தி போல் சமிக்ஞை பெறப்பட்டு, அடிபட்ட இடத்தில் தேங்கி நிற்கும் ரத்தம் வாயு மூலமாக தள்ளப்படும். அதனால் பாதிக்கப்பட்ட இடம் சீராகி, பாதிக்கப்பட்டவர் வலியின் பிடியில் இருந்து விடுபடுவார்.

``வர்மம்'' என்ற நான்கு எழுத்துக்குள் பல்வேறு மர்மங்கள் பொதிந்துள்ளன. வர்மம் என்பது, நமது உடலில் உள்ள 126 உயிர் நிலைகளை குறிக்கிறது. மூளைப்பகுதியில் உள்ள நியூரான்களின் கட்டளைப்படி இயங்கும் இந்த உயிர்நிலைகள் தான் மனிதர்களை நோய்களில் இருந்து பாதுகாத்து மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

மொத்தமுள்ள ஐந்து வகை வர்மங்களில், படுவர்மம் என்பது நமது உடலில் மிகவும் ஆழமாக குடியிருக்கிறது. தொடு வர்மம் மனித உடலில் மிகவும் மேலோட்டமாக இருக்கிறது. மேற்கண்ட இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் தட்டுவர்மம் குடி கொண்டுள்ளது.

வர்மக்கலையில் மிகவும் மர்மமானது, அடங்கல் வர்மமாகும். சாலையில் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரே போதை ஆசாமி ஒருவர் வருகிறார். அவர், அந்த அப்பாவி மனிதரை மூர்க்கத்தனமாக தாக்குகிறார் என வைத்துக்கொள்வோம். வர்மப் பகுதியில் அவருக்கு அடிபட்டிருந்தால், அந்த அப்பாவி உடனே மயங்கிவிழுந்துவிடுவார்.

இந்த நிலையில் அடங்கல் வர்மங்களின் குணநலன்கள் தெரிந்த வர்மக்கலை நிபுணர் ஒருவர் அங்கு வந்தால், அவரால் அந்த அப்பாவியின் உடலில் உள்ள உயிர் அடங்கல் வர்மங்களில் ஏதாவது ஒருவர்மம் தூண்டப்படுமானால் அவர் மயக்கம் நீங்கி எழுந்துவிடுவார். இந்த செய்கையைத்தான் வர்ம ஆசான்மார்கள் உயிர் அடங்கல் வர்மம் என்று குறிப்பிடுகின்றனர். உயிர் அடங்கியிருக்கும் வர்மம் அடங்கல் வர்மம் எனப்படுகிறது.

மனித உடலில் விரல்கள் பட்டால் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வர்ம நிலைகளும் அனேக இடங்களில் உள்ளன. அந்த மாதிரி இடங்களில் உள்ள பாதிப்பை நக்கு வர்மம் மூலமாக இளக்கி குணப்படுத்த வேண்டும். இது மிக மென்மையான மருத்துவ அணுகுமுறையாகும்.

மணிபந்த வர்மம் என்ற தொடுவர்மப்புள்ளி நமது கைகளில் மணிக்கட்டு பகுதியிலிருந்து 2 விரல் அளவு தள்ளி கையின் உள்பக்கம் உள்ளது. ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் இந்த வர்மப்புள்ளி குடி கொண்டுள்ளது. இந்த வர்ம புள்ளிகளில் மிதமான முறையில் அடிபட்டால்கூட உளைச்சல் எடுத்து வலி பரவும். இதே வர்ம புள்ளியில் முழு மாத்திரை அளவு அடிபடுமானால், அடிபட்ட கை அப்படியே கீழே தொங்கி விடும். மேலும் விரல்களில் இருந்து முழங்கை வரை பயங்கரமாக உளைச்சல் எடுக்கும். மயக்கமாகி கீழே விழுந்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அப்போது வியர்வை கொட்டும். உடம்பெங்கும் ஒருவிதமான சூடு பரவி காய்ச்சல் அடிப்பது போல் இருக்கும்.

அந்த வர்ம புள்ளிகளில் அடிபடுவதால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைப்படும். அப்போது இதய பகுதியை 10 விரல்களால் பிசைவது போல் தோன்றும். அதனால்தான் பாதிக்கப்பட்டவருக்கு மயக்கமும், வியர்வை வழிதலும் அறிகுறியாகிறது.

இப்படி வர்ம நிலையில் அடிபட்டு மயங்கி கிடப்பவரை எழுப்புவதற்கு அவரது சிரசு பகுதியில் வர்மக்கலை நிபுணர் நின்றுகொள்வார். அவரது, இடது கையால் பாதிக்கப்பட்டவரின் உச்சி முடியை பிடித்து தூக்கி உட்கார வைத்து, மிக பலமாக 3 முறை அவரது உச்சி முடியை பிடித்து உலுக்குவார். பின்பு இன்னொருவரை பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு, சிகிச்சை அளிப்பவர் அவரது முன்பக்கமாக வருவார். வந்து அவரது இடது உள்ளங்கையை பாதிக்கப்பட்டவரின் உச்சந்தலையில் தட்டையாக விரித்து வைத்து, முஷ்டி பிடித்த மறுகையால் 3 முறை மிதமான முறையில் தட்டுவார். இப்படி தட்டிவிட்ட பின்பு, சிரசின் கீழ்ப்பகுதியில் சிறிய குழி போல் உள்ள இடத்தில் வலது கையின் பெருவிரலின் முனைப்பகுதியில் 5 தடவை வட்டமான முறையில் தடவி சரி செய்ய வேண்டும்.

மேற்கண்ட முறையில் வர்ம அழுத்தம் செய்த உடன் மயக்கத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபட்டு விழிகளை திறப்பார். வர்மத்தால் பாதிக்கப்பட்டவர் சுய நினைவுக்கு வந்தவுடன் அவரின் விரல்கள் அனைத்தையும் நெட்டி (சொடக்கு) வாங்கி விட்டு, அடிப்பட்ட பகுதியில் காயத்திருமேனி தைலத்தாலோ, நல்லெண்ணெய்யாலோ பூசவேண்டும். பின்பு மேலிருந்து கீழாக வலக்கையின் கட்டை விரலால் 18 தடவை அழுத்தமான முறையில் நீவவேண்டும்.

நீவி முடித்த உடன் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தீ மூட்டி, அது நன்கு சூடான பின்பு ஒரு காட்டன் துணியை சதுரமாக மடித்து எடுத்துக்கொண்டு தோசைக்கல்லில் ஒற்றியெடுத்து அடிப்பட்ட இடத்தில் ``அனல் சிகிச்சை'' என்ற வறத்துணி ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை 6 நாட்கள் கடைப்பிடித்து வந்தால் வர்மம் இளகி குணம் கிடைக்கும். இதற்கு கூடுதலாக சில மருத்துவ சிகிச்சை முறைகளும் உள்ளன.

தெய்வீக கலையான வர்மக்கலையை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும் அதே நேரத்தில் அதை பயன்படுத்தி, வாழ்க்கையை இன்பமாக அனுபவிக் கவும் முடியும். தாம்பத்ய சிக்கல்களை வர்மக்கலை மூலம் குணப் படுத்தி, மகிழ்ச்சியாக இளமை உணர்வோடு வாழலாம்.

இதன் மூலம் ஆரோக்கியமும் பெருகும். அதுபோல் பெண்களும், ஆண்களும் வர்மக்கலையின் அடிப்படையை கற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, வர்மப் புள்ளிகளில் தாக்குதல் தொடுத்து தங்கள் உயிரையும், உடமையையும் காப்பாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.


நன்றி:  டிராகன் டி.ஜெய்ராஜ், வர்மக்கலை நிபுணர், கோவை.

Aug 11, 2013

அதிசய குழந்தை!

மருத்துவ துறையில் ஓர் அதிசயம்…
குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரியுமா?

தமிழக மக்களை மட்டுமல்ல உலகத்தையே வியக்க வைக்கும் ஆபூர்வ சம்பவம் இது…

பிறந்த குழந்தையின் உடலில் எப்படி தீப்பிடிக்கும் என்ற சந்தேகமும், ஆச்சர்யமும் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்தது. இது நம்ம விட்டலாச்சர்யா படம் அல்ல… மாயாஜாலம் அல்ல. உண்மை சம்பவம்.

இரண்டரை வயது ஆண் குழந்தைக்குதான் இப்படிப்பட்ட அபூர்வ நோய்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (26). மனைவி ராஜேஸ்வரி (23). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு முதலில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக கர்ப்பம் தரித்த ராஜேஸ்வரிக்கு கடந்த மே மாதம் 22–ந்தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தை கனவோடு இருந்த அந்த தம்பதிக்கு நினைத்தபடி ஆண் மகன் பிறந்ததால் ராகுல் எனவும் பெயர் சூட்டினார்.

ஆண் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அந்த தம்பதிக்கு 7–வது நாளில் அதிர்ச்சி ஏற்பட்டது.

ராகுலின் உடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பதறினார்கள். பச்சிளங் குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உடலில் பல இடங்கள் தீக்காயங்கள் ஏற்பட்டன. எதனால் குழந்தையின் உடலில் தீப்பற்றுகிறது என்று தெரியாமல் பெற்றோர் கதறியபடி பல இடங்களுக்கு தூக்கி சென்றனர்.

இறுதியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு 11–வது நாளில் குழந்தைக்கு உடல் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் குளம் சென்று பரிகாரம் தேடியும், ஆனாலும் அவர்களின் வேண்டுதலுக்கு விடை கிடைக்கவில்லை. கண் கலங்கிய பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

அதற்குள் குழந்தை தீப்பிடித்தும் எரியும் செய்தி எல்லா இடமும் பரவியது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் உடலில் இருந்து மண்எண்ணை வாசனை வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அதிசய குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. குழந்தை தீப்பற்றி எரிவது குறித்து பெற்றோர் கூறிய தகவல் சென்னை டாக்டர்களையும் மிரள வைத்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் ராகுல் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது.

குழந்தைகள் நல வார்டில் சிறப்பு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தைகள் நலம், சிறுநீரகம் துறை மற்றும் தோல் நோய் துறை டாக்டர்கள் முழுமையாக இன்று பரிசோதனை செய்தனர். குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் அதிசயம். இப்படிப்பட்ட குழந்தைகள் அரிதாகத்தான் பிறக்கும். அப்படித்தான் ராகுலும் பிறந்துள்ளான்.

இந்த குழந்தை அதிசய குழந்தை என்றே கூறலாம். தமிழ்நாட்டில் முதன் முதலாக இப்போதுதான் இதுபோன்று அதிசய குழந்தை பிறந்து இருக்கிறது என்று ராகுல்உடலை பரிசோதித்த குழந்தைகள் நல பேராசிரியர் நாராயணபாபு தெரிவித்தார்.

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை, குறித்தும் நாராயணபாபு மாலைமலர் நிருபரிடம் கூறியவதாவது:–

குழந்தை ராகுலுக்கு ஏற்பட்டுள்ள நோயின் பெயர் தானாக தீப்பற்றி எரியும் நோயாகும். மருத்துவ உலகில் இது வினோதமான குழந்தை. 300 வருடத்தில் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் வந்துள்ளது. தமிழகத்தில் முதல் குழந்தை இதுதான்.

குழந்தையின் உடலில் வெளியேறும் வாயு (ஆல்கஹால்) வியர்வையினால் உடலில் தீப்பற்றிக் கொள்ளும். திடீர் திடீரென உடல் தீப்பிடித்து கொண்டு எரிவதால் மிகவும் கவனமாக குழந்தையை கண்காணிக்க வேண்டும்.

ராகுலுக்கு இப்போது 2 1/2 வயது ஆகிறது. அவனுக்கு இதுவரை 4 முறை உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அவனது உடல் முழுவதும் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நோய்க்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சியில்தான் உள்ளது. உடலில் தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாக குழந்தையை வைத்திருக்க வேண்டும்.

தீ எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் குழந்தை இருக்கும் இடத்தில் வைக்க கூடாது. மண்எண்ணை, பெட்ரோல், டீசல், கியாஸ், அடுப்பு போன்றவற்றின் அருகே வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

காற்றோட்டமான குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்க கூடிய உடைகளை அணிவிக்க கூடாது. சில நேரம் உடலுக்கு உள்ளேயும் எரிந்து செல்லும். அதனால் குழந்தையை நன்கு கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

ராகுலை பொறுத்தவரை நன்றாக இருக்கிறான். அவன் உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் தீக்காயங்கள், வடு போன்றவை ஆறிவிடும்.

அமெரிக்காவில் 73 வயதான ஒருவர் இந்நோயால் தாக்கப்பட்டு உயிர் இழந்தார்.

ராகுலுக்கு தீக்காயத்திற்கான பொதுவான சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டுள்ளது. உடலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வார்டில் வைத்திருக்கிறோம். ஒரு டாக்டர் மற்றும் நர்சு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிகிச்சை பெறும் ராகுல் அருகில் தாயும் தந்தையும் இருந்து வருகிறார்கள். அதிசய குழந்தையை பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

Aug 10, 2013

அழிந்து போன நம் குமரிக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். 1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா 4. தொலை கிழக்கில் – சீன நாடு 5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன்.

அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

Aug 8, 2013

தாஜ்மஹால் புராதன சிவன் கோவில்!!!

காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ்மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
[படம்: தாஜ் மகாலில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம் மற்றும் நந்தி வடிவத்தில் உள்ள சிலை ]

தாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.

இச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரியர்.

தாஜ்மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்கவேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.

தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான்–மும்தாஜ் காதல் கதை என் கின்றார். நியூயோர் க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓர் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திரு ந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில்லை.

ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலைநயம் பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படு கின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.
தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக் கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹா லினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெ ளிவாக தெரிகின்றது என்கிறார்.

பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாஜ் மஹால்–உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர்.