Showing posts with label உங்களுக்கு தெரியுமா?. Show all posts
Showing posts with label உங்களுக்கு தெரியுமா?. Show all posts

Jan 31, 2014

சி.எஃப்.எல். பல்பு - சில தகவல்கள்


'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.

சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.

வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.

சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.

சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

Jan 19, 2014

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

நினைவாற்றல் குறைபாடு நோயா?

இயற்க்கை அன்னையின் இயல்பிற்கு மாறாக இருப்பின் எல்லாமே நோயே.

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..!

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.
பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்;

புகார் கொடுக்கலாம்:

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால்,

எண்.914,

பூந்தமல்லி நெடுஞ்சாலை,

அரும்பாக்கம்

என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Jan 3, 2014

டை அடிப்பவரா நீங்கள்?

பலர் தவிர்க்கமுடியாத ஒரு விஷயம் ஹேர் டை. ஆம் எனக்கு 17 வயதில் இருந்து தேவை பட்டது. பலருக்கு 30 வயதில் ஆரம்பித்து 45 வயதிற்குள் கண்டிப்பாக நரை என்ற விஷயம் தவிர்க்கமுடியாமல் போகிறது. இதில் என்னை பொறுத்த வரை 75% சதவிகித ஆண் பெண் ஹேர் டை உபயோகத்திற்க்கு ஆளாகின்றனர். இதில் சில பேர் தலைக்கு மட்டும், சிலர் மீசைக்கு, சிலர் தாடிக்கு, சிலர் நெஞ்சு முடிகளுக்கு என்று ஹேர் டை உபயோகம் நம் உடம்பில் ஒரு அங்கமாகிறது. சில பெண்கள் நரை அவ்வளவு இல்லாதவர்கள் மருதாணி அரைத்து போட்டுகொண்டு இருந்ததும் இப்பொழுது அதுவும் ஹேர்டை கம்பெனிகள் மருதாணி, நெல்லிக்காய், என்று எல்லாம் இயற்கை வடிவில் என நமக்கு கெமிக்கல் கலவைதான் கொடுக்கின்றனர்.

இதில் இப்ப நம்மவர்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாகி சார் எனக்கு டை பற்றி இப்ப நல்லா தெரியும் அதனால் " நான் அம்மோனியா" தான் போடுவேன் என்று பெருமையாக கூறுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு அம்மோனியா நான் அம்மோனியா வித்தியாசம் தெரிவதில்லை. தெரிந்தாலும் 50% சதவிகிதம் தான் நீங்கள் ரிஸ்க்கை தவிர்க்கலாம். முதலில் அம்மோனியா டைதான் முன்னைய காலத்தில் பிரபலம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் இந்த அம்மோனியா டை அடித்தால் கலர் போகவே போகாது. ஆனால் புது முடி வரும்போது கீழே வெள்ளைமுடி தெரியும். அதுபோக அம்மோனிய டை மிக மோசமானது. தொடர்ந்து 10 வருடங்கள் உபயோகித்தால் ஆஸ்மாவும் 15 வருடத்தில் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது. அதனால் நான் அம்மோனியா உபயோகித்தால் மட்டும் நல்லது என நினைக்கவேண்டாம். நான் அம்மோனியாவில் தாக்கம் கொஞ்சம் தான் குறைவு மற்றபடி நான் அம்மோனியா டையும் இதே பிரச்சினைகள் தான். மருதாணி நீங்கள் அரைத்து போட்டால் தான் சேஃப், ஆனால் கடையில் விற்கும் ஹென்னா, நெல்லிகாய் ஹேர் டை இதெல்லாம் நமக்கு நாமே நாள் குறிக்கும் ஸ்லோ பாய்ஸன். ஆம் இந்த ஹேர் டையில் முக்கிய நச்சு பொருள் "ஃபீனலியின்டைலமின்" எனும் (Para-Phenylenediamine - PPD ) பொருள் மிக மோசமான ஒரு விஷயம். ஹென்னா எனப்படும் மருதாணி கொடுக்கும் நிறம் சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு தான். அதனால் ஹென்னா போட்டு கருப்பு நிறம் ஆனால் கண்டிப்பாக அது பிபிடி உள்ள ஹேர் டைதான். 100% இயற்கை ஹேர் டை என்று ஒரு ஹேர் டை உலகத்தில் இல்லை. இதில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன் தெரியுமா - இந்தியர்கள் தான் " நேச்சுரல் பிளாக்" ஃபுல் பிளாக் வண்ணத்தை உபயோகிக்கிறோம். இதில் அதிகமாக கெமிக்கல் கலக்கபடுவதால் ரிஸ்க் அதிகம். நார்மலாக ஒரு சராசரி மனிதன் 10 - 12 முறை டை அடிக்கிறான். இது மிகவும் ஆபாத்தான விஷயம். மீசைக்கு அடிப்பது, நெஞ்சு முடிக்கு அடிப்பது மிக மிக ஆபத்தானது. சிலருக்கு மிக ஸ்லோவாக மூச்சு விட சிரமம் ஆரம்பித்து பிறகு அது ரெகுலர் பிரச்சினையாகிவிடும்.

நிறைய நாடுகளில் இந்த பிபிடியை தடுக்க ஹெல்த் மினிஸ்ட்ரி போராடினாலும் இந்த சலூன்கள் இதை பெருமளவில் மறைத்து டை போடுகின்றனர். டை போடுவதால் முடி கொட்டும் மற்றும் அதிக க்ருப்பு ஷேடுகளை தவிருங்கள். ஒரு பூத கண்ணாடியை வைத்து என்ன கெமிக்கல் உள்ளது என பாருங்கள். ஏன் என்றால் அவ்வளவு சிறிதாக தான் கெமிக்கல் டீட்டெயில் பற்றி போட்டிருப்பார்கள் அந்த கெமிக்கல் டீட்டெயிலை பற்றி கூகுள் செய்யுங்கள் வாழ்க்கையில் டை அடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள். சரி டை போடுவது நம் வெள்ளை முடியை மறைக்கத்தான் சரி என்ன செய்வது என டை போடும் மனிதர்களை வேண்டுமானால் பார்த்து பரிதாப படலாம் ஆனால் நல்லா கருப்பாய் இருக்கும் முடியை பான் பராக், காரக்குழம்பு தலையாக்கும் இளைஞன் இளைஞிகளை நினைத்தால் தான் மிக பரிதாபம். ஏன் என்றால் அவர்கள் ஒரு தடவை பயன்படுத்தினால் வாழ்க்கை முழுவது அந்த கலரை போட வேண்டும் இல்லையெனில் அதை விட்டால் நான் கடவுள் ஆர்யா போலத்தான் ஆகவேண்டும். முழுவதும் விட மொட்டை அடித்து புது முடி வளர்ப்பதை தவிர வேறு ஒன்றும் பண்ணமுடியாது. ஆண்கள் பரவாயில்லை பெண்கள் தான் பாவம் மொட்டையும் அடிக்கமுடியாது, கலர் பண்னும் பழக்கத்தையும் விட முடியாது. நிறைய பேர் கல்யானத்திற்க்கு முன் இந்த தவறை செய்வதால் கல்யானம் ஆன பிறகு கணவர்களின் முக்கிய முகம் சுழிப்பு இந்த விஷயம் தான் அதுவும் கூட்டு குடும்பத்தில் சான்ஸே இல்லை. முடிந்த அளவு டை உபயோகத்தை கட்டுபடுத்துங்கள். இரண்டாவது வெளியே செல்லும் நாட்களில் மட்டும் பழைய டெக்னிக் "ஐடெக்ஸ்" கண்மை போட்டு போங்கள் சிலர் வெள்ளை முடியுடன் இருக்க பழகி கொள்ளுங்கள் இல்லையெனில் அட்லிஸ்ட் மாதம் ஒரு முறை என்பதை தவிர்த்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றினால் பிரச்சினையை தள்ளிப்போடலாம். கர்ப்பிணி பெண்கள் பத்து மாதம் தயவு செய்து போடவே வேண்டாம். இரண்டு கலவை மிக்ஸ் பன்னும் ஹேர் டை 100% பயன்படுத்துவதை தவிருங்கள் இதில் கண்டிப்பாக பிபிடி இருக்கும்

Nov 6, 2013

எச்சரிக்கை..! குடிநீர் பாட்டில்கள்..!

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

வருமான வரி சோதனையை தவிர்க்க..!

வருமான வரி சோதனையை தவிர்க்க..!

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.

* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது இ.டி.எஃப்.களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.

ஃபேஸ் புக்கால் ஏற்பட்ட விபரீதம்

உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களால் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவம் கூட நொடிப் பொழுதில் உலகம் முழுவதும் பரவுகிறது.  இது மக்களிடையே விரைவாக விழிப்புணர்வு ஏற்படுத்த உதவினாலும், இந்த வலைதளங்களால் ஏற்படும் விபரீதங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.

இந்தியா – ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன் கிஷோர்சிங்(29). சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.  அதே நிறுவனத்தில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சந்தியா(25) என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்தார்.    பெற்றோர்கள், இவர்களின் காதலை ஏற்கவில்லை.     ஒரு வழியாக, பெண் வீட்டார் சம்மதித்தனர்.   சந்தன் பெற்றோர் கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலர்கள் 3 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். தேன் நிலவுக்காக பெல்ஜியம், ஹங்கேரி நாடுகளுக்கு சென்றனர். வெளிநாடு சென்றது, பதிவுத் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்களை சந்தியா தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டார்.

இது சந்தனுடைய பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரை தொடர்பு கொண்டு ‘நாங்கள் உனக்கு திருமணம் ஆகவில்லை என்று எல்லோரிடமும் சொல்லி வருகிறோம். அவசரப்பட்டு உனது மனைவி திருமண புகைப்படத்தை பேஸ் புக்கில் போட்டுள்ளார். இது எங்களுக்கு அவமானமாக உள்ளது. உடனே அவற்றை எடுக்கச் சொல்’ என்றனர்.

இதுபற்றி மனைவியிடம் சந்தன் தெரிவித்த போது, அவர் பேஸ்புக்கிலிருந்து படங்களை எடுக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சந்தனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு கடைசியில் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

சந்தனுக்கு அவரது பெற்றோர் ஆஸ்திரேலியாவில் பெண் பார்த்துள்ளனர். இது சந்தியாவுக்கு தெரிய வந்ததால்தான் அவர் பேஸ்புக்கில் போட்ட தனது திருமண படத்தை எடுக்கவில்லை என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். காதல் திருமணம் செய்தபின், சந்தனால் பெற்றோரை சமாதானப்படுத்த முடியவில்லை.

இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்திருக்கலாம். ஆனால், சந்தியாவுக்கு தன்னை விட்டு சந்தன் பிரிந்து விடுவாரோ என்ற பயம். இந்த சூழ்நிலையில்தான் சந்தனுக்கு எமனாக பேஸ்புக் வந்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களால் தினம்தினம் நடக்கும் விபரீத சம்பவங்களை இவற்றை பயன்படுத்துவோர் உணர்ந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Oct 22, 2013

மச்சத்தின் பலன் தெரியுமா உங்களுக்கு?

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை – பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

Aug 19, 2013

வீர மங்கை வேலு நாச்சியார்

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவார் . சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.

முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள். நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.

நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார்
நாடினார் :

வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.

வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

அலுவலகம் செல்பவர்களுக்கு...

காலை உணவைத் தவிர்க்காதீர்!
பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!
காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்
வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்
டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி
அலுவலக வேலை செய்யவே நேரம் இல்லை என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

மறைக்கபட்ட உண்மைகள்

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..?!

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது.

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .

Aug 17, 2013

முல்லைப் பெரியாறு பற்றி...

அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?
தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும். பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கிநிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும். சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாககிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.
விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.
வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.

நன்றி,
கோபிநாத்

Aug 14, 2013

எச்சரிக்கை...!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே
கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.
இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

Aug 10, 2013

வீரபாண்டிய கட்டபொம்மன் அல்ல, கெட்டி பொம்மு நாயக்கன்.!!!

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது . வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம், நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் .

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும் !

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுதுவதே
ஒரு வரலாற்று பிழையாகும் . மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளத் தளைப்பட்ட பொது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன . இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?
ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் . முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் . அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வற்புறுத்திப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான், அவர்களை சாட்டையால் அடித்தும், கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும், நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும், சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழகவராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும்.

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே ! அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் . ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம்அறியலாம்.

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799-ல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான் . ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும் , அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 05.08.1799-ல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார், 07.08.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம், தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, அழகாபுரி, நாகலாபுரம், காடல்குடி, குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை, கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி, ஆவுடயாபுரம், தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

சங்ககால முருகன் கோவில்

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.


தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (சங்க காலம்) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்

அழிந்து போன நம் குமரிக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான்.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். 1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா 4. தொலை கிழக்கில் – சீன நாடு 5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன்.

அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

கேன் வாட்டர் - ஒரு எச்சரிக்கை

வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

Aug 9, 2013

தெரிந்து கொள்வோம் வாங்க!

அறிவுக்கு சின்ன சின்ன தகவல்கள்!

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

பெர்முடா முக்கோணம்

நீங்கள் ஒரு வரைபடத்தில் இதைக் காண முடியாது என்றாலும், பெர்முடா முக்கோணம் உண்மையாகவே உள்ளது. கடந்த காலத்தில் நிறைய கப்பல்கள், விமானங்கள் மற்றும் மக்கள் பலரும் காணமால் போய் உள்ளனர். பல சம்பவங்களுக்கு நம்பும்படியான விளக்கம் இருந்தாலும் , அங்கு நடந்த பல சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இன்று வரை எந்த அறிவியல்ரீதியான விளக்கமும் இல்லை !

பெர்முடா முக்கோணம் மியாமி, போர்டோ ரிகோ மற்றும் பெர்முடாஸ் இடையே புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் 500 000 சதுர மைல்களை உள்ளடக்கியது. பெர்முடா முக்கோணத்தை, சாத்தானின் முக்கோணம் என்று கூட அழைப்பர் , ஏனெனில் பெர்முடாவை முற்காலத்தில் சாத்தானின் தீவு என்று அழைத்தனர் !

தீவை சுற்றிலும் பவளபாறைகள் அமைந்துள்ளதால் , பல நூற்றாண்டு காலமாக அந்த கடல் வழியை மிகவும் ஆபத்தானதாக கருதினர் கப்பலோட்டிகளும், மாலுமிகளும். பெர்முடா முக்கோணம் பற்றிய அசாதாரண நிகழ்வுகள் கிறிஸ்டோபர் கொலம்பஸ் காலத்தில் இருந்து உள்ளது . அவர் சில நேரங்களில் திசைகாட்டி தாறுமாறாக சுற்றியது என்று தனது அறிக்கையில் கூறி உள்ளார். பல பத்திரிகையாளர்கள் இந்த பகுதியில் நடந்த விபத்துக்கள் அனைத்தும் அசாதாரண விஷயங்கள் என்று நிரூபிக்க முயற்சி செய்து தோற்றனர் . சில சம்வத்தில் எந்த விதமான துப்பும் கிடைக்காமல் கூட போனது !

நன்கறியப்பட்ட சம்பவங்களில் ஒன்று அமெரிக்க கடற்படை பயிற்சி விமானம் பிளைட் 19 காணாமல் போனது !. டிசம்பர், 1945 , ஐந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் வழக்கமான பயணத்தை ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் இருந்து தொடங்கியது. பல வானொலி செய்திகளை அனுப்பிய பின்னர் , அந்த விமானத்தில் இருந்த 14 குழு உறுப்பினர்களும் விமானத்தோடு காணாமல் போயினர். அந்த விமானத்தை தேடி சென்ற இன்னொரு மீட்பு விமானமும் காணமல் போனது !

என்ன தவறு நடந்தது என்று முழுமையாக தெரியவில்லை.திசைகாட்டிகள் தவறான திசைகளை காட்டியது மற்றும் தெரிவுநிலை மோசமாக இருந்தது, அதனால் விமான ஓட்டி கீழே தெரியும் அடையாளங்களை வைத்து விமானத்தை செலுத்த முயற்சி செய்தார் என்பது மட்டுமே தெரியும் !

பின்னர் ஒரு திடீர் புயயலினால் வானொலி தொடர்பு இல்லாமல் போனது . கப்பல்கள் இந்த பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போயுள்ளன. மேரி செலஸ்டி, ஒரு அமெரிக்க வணிக கப்பல், 1872 ஆம் ஆண்டில் காணாமல் போனது . அந்த கப்பல் நியூயார்க்கில் இருந்து ஜெனோவாவை நோக்கி சென்று கொண்டிருத்த போது அது மாயமானது . ஆனால் பின்னர் அந்த கப்பல் , எந்த குழு உறுப்பினர்களும் இல்லாமல் ஆப்ரிக்கா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது . மேரி செலஸ்டி கப்பல் பெர்முடா முக்கோணத்தில் பயணித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் , அந்த கப்பலின் பணிக்குழு என்ன ஆனது என்பது இன்று வரை புரியாத புதிரே !

ஏன் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போகின்றன என்பதற்கு பல கோட்பாடுகள் மற்றும் காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர் கூறுகின்ற காரணமானது , மிகவும் பலம் வாய்ந்த மின்காந்த புலன் [Magnetic Field] . அழிந்து போன அட்லாண்டிஸ் என்னும் தீவு தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று பலர் வாதிடுகின்றனர் !. பெர்முடா முக்கோண கடலில் பலவகையான ரசாயனம் உள்ளது என்றும் , அதனால்தான் இவ்வளவு பிரச்னை என்று சில சாரார் வாதிடுகின்றனர் !

கரீபிய கடல் மிகவும் ஆபத்தானது என்றும் , அங்கு சீதோசன நிலை ஒரே மாதிரி இருப்பது கிடையாது என்றும் , கடல் மட்டம் ஒரே மாதிரி இருபது இல்லை என்றும் , திடீர் என்று பல பகுதிகளில் தாழ்வான தரைமட்டம் வரும் என்றும் . இது போன்ற பல காரணங்களை முன் வைக்கின்றனர் !!!

இந்த 20ஆம் நூற்றாண்டில் மட்டும் சுமார் 1000 பேருக்கு மேல் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போகினர் !

பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் , சம்பவங்களுக்கும் , அறிவியில்ரீதியான விளக்கம் கண்டிப்பாக இருக்கும் என்று அனைத்து விஞ்ஞானிகளும் கூறி கொண்டிருந்தாலும் , இன்று வரை அது ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!

Aug 8, 2013

பெற்றோர்களின் கவனத்திற்கு.

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!