Showing posts with label இந்துமதம். Show all posts
Showing posts with label இந்துமதம். Show all posts

Feb 24, 2014

வம்பு பேசாதீர்கள்.... ஆப்பு காத்திருக்கிறது!

ஒரு துறவி காட்டில் நிஷ்டையில் இருந்தார்.அவர் சுரதலப்பிட்சை எடுத்துச் சாப்பிடுவார்.(சுரதலப்பிட்சை என்றால் கையை நீட்டியபடி தவத்தில் இருப்பார்;அவர் கையில் யார் எதை வைக்கிறார்களோ அதுதான் அவருக்கு அன்றைய உணவு!அதைத்தான் சாப்பிட வேண்டும்;)


ஒருநாள்,வேட்டையாட வந்த அந்தப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் அந்த துறவி தவம் செய்து வந்த இடத்திற்கு வந்தான்;வேட்டையாடிக் களைத்துப் போன அந்த மன்னனுக்கு தாகம் எடுக்கவே இந்த துறவியைப் பார்த்து தண்ணீர் கேட்டான்.தன்னை மறந்து தவத்தில் இருந்த அந்த துறவிக்கு மன்னன் கேட்டது காதில் விழவில்லை;மன்னனுக்கோ வேட்டையாடிய களைப்பில்,இந்தச் சாமியார் தன்னை மதிக்கவில்லை; என்று நினைத்து,கோபத்தில் குதிரைச் சாணத்தை அந்த துறவியின் கைகளில் வைத்துவிட்டு குடிநீர் தேடி வேறு இடம் போய்விட்டான்.


துறவி கண்விழித்துப் பார்த்தபோது,தனது கையில் குதிரைச்சாணம் இருந்ததைக் கண்டு,அதையே அன்றைய உணவாகச் சாப்பிட்டுவிட்டார்.யார் எதை அவர் கையில் வைத்தாலும் அதைச் சாப்பிட வேண்டும் என்பது அவர் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆயின.மன்னன் இந்த சம்பவத்தை மறந்தே போனான்.


மன்னனின் மகள் பருவமடைந்து,பல ஆண்டுகள் ஆகியும் திருமணம் ஆகவில்லை;சரியான வரன் அமையவேயில்லை;மன்னன் தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, ‘இளவரசிக்கு ஏதாவது தோஷம் இருக்கிறதா? என்று பாருங்கள்’ என்று தனது மகளுடைய ஜாதகத்தைக் கொடுத்தான்.ஜோதிடர் அதை ஆராய்ந்து, “தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக யாகம் ஒன்று நடத்துங்கள்;அவ்வாறு செய்தால் இளவரசியின் திருமணதோஷம் நீங்கிவிடும்” என்று கணித்துச் சொன்னார்.அதன்படி,தேவர்களை மகிழ்ச்சிப்படுத்துவிதமாக யாகம் ஒன்றை நடத்தினார் மன்னன்.


துறவிக்கு மன்னன் செய்த பாவச்செயலை அறிந்த தேவர்கள்,காட்டுக்குப்போய் அந்த துறவியைச் சந்தித்தார்கள்.அவர்கள் நடந்ததை துறவியிடம் தெரிவித்தனர். “மன்னன் எங்களைக் குறித்து யாகம் நடத்தினான்.யாகத்தின் பலனை நாங்கள் தரவேண்டியது எங்கள் கடமை ஆகும்.ஆனால்,அதற்கு முன் உங்களை குதிரைச்சாணம் சாப்பிட வைத்த பாவத்தைப்போக்கினால் தான் நாங்கள் தரும் வரம் பலிதமாகும்;எனவே,இதற்குத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று விவரித்தனர்.துறவியும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.


துறவி ,மன்னனின் அரண்மனைக்குச் சென்று, மன்னன் தனக்குச் செய்த இழிசெயலை நினைவூட்டினார். ‘நான் உனக்கு எந்த சாபத்தையும் கொடுக்கவில்லை;நீ செய்த வினையின் பலனை நீ அறுவடை செய்து கொண்டிருக்கிறாய்.இதிலிருந்து தப்பிக்க நான் உனக்கு ஒரு வழி சொல்கிறேன்;கொஞ்ச காலத்திற்கு அரசாங்கத்தை உனது மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு.நீயும் உன் மகளும் காட்டிற்குச் சென்று அங்கு ஆசிரமம் கட்டிக்கொண்டு இருங்கள்;நான் பட்ட துயரங்களை நீயும் அனுபவிக்கும் போது தான் என்னைப் போன்ற துறவிகள் படும் கஷ்டங்கள் உனக்கும் புரியும்.உனது பாவமும் மன்னிக்கப்படும்;தினமும் நீ என்னைப் போன்று பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும்;’ என்று உபதேசம்  செய்தார்.


மன்னனும் துறவியிடம் ஆசி பெற்று,தனது மகளுக்குத் திருமணம் ஆனால் போதும் என்பதற்காக அவரது வார்தைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கினான்.(பரிகாரங்களை எப்போதும் ரகசியமாகவே செய்ய வேண்டும்;பகிரங்கப்படுத்தினால்,பலன்கள் கிடைக்காமலேயே போய்விடும்)இதைப் பற்றி அறியாத அவனது நாட்டு மக்கள் மன்னன் மீதே அவச்சொல்லாகப் பேசினார்கள்.பேசக்கூடாத விதங்களில் மன்னனையும்,அவரது மகளையும் இணைத்து வைத்துப் பேசினார்கள்.இப்படி நாட்டு மக்கள்,அவர்களின் மன்னனைப் பற்றிப் பேச,பேச பேசியவர்களிடம் மன்னனின் பாவங்கள் ஒட்டிக்கொண்டன.மலை போல இருந்த பாவச்சுமையானது,நாடு முழுக்க இருந்த மக்களின் அவச்சொற்களால் விலகிவிட்டது.


ஒருநாள்,ஒரு பார்வையில்லாத கணவனும்,அவனது மனைவியும் அந்த காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.அந்த பார்வையில்லாத கணவன்,தனது மனைவியிடம், “இன்று நமக்கு யார் உணவு தருவார்?” என்று கேட்டான்.
அதற்கு அவன் மனைவியோ, “தன் மகளுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான லட்சியத்திற்காக, ராஜ்ஜியத்தையே தியாகம் செய்துவிட்டு,காட்டில் தவசியாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு உன்னதமான மன்னனின் ஆசிரமத்தில் தான் நமக்கு இன்று உணவு!!!” என்று கூறினாள்.இருவரும் மன்னனின் ஆசிரமத்தை அடைந்து இளவரசி அளித்த உணவைச் சாப்பிட்டனர்.


இளவரசியிடம், ‘என் புருஷன் பார்வையற்றவர்;இவருக்காக வாழ்நாள் முழுவதும் நான் தியாகம் செய்திருக்கிற பலனில் உனக்கு ஆசிர்வாதம் செய்கிறேன்.உனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்’ என்று இளவரசிக்கு குங்குமம் வைத்து ஆசி கூறினாள்.இந்த ஆசியாலேயே அடுத்து வந்த சில மாதங்களில் இளவரசிக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்தது.

இந்த உண்மைச்சம்பவம் தெரிவிப்பது என்ன?
தப்பு செய்பவருக்குத் தண்டனை நிச்சயமாக உண்டு;அந்த தண்டனை எப்படி கழியும்?
தப்பு செய்தவரின் கர்மாவை வேறு யாராவது வாங்கிக் கொண்டால் தான் போகும்.
யார் அடுத்தவரின் தப்புக்களை வாங்கிக் கொள்கிறார்கள்?
பிறரின் வாழ்க்கையில் நடந்த உண்மைநிலையை அறியாமல் வம்பு பேசுபவர்கள்தான் அடுத்தவரின் தப்புக்களின் கர்மவினைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.இவன் இப்படி,அவன் அப்படி,அவளைப் பற்றி எனக்குத் தெரியாதாக்கும்;இவளைப்பற்றி எனக்கு அப்பவே தெரியுமே என்று வம்பு பேசுபவர்களே அடுத்தவர்களின் கர்மச்சுமைகளை சுமக்கிறார்கள்.

நன்றி:ஜோதிடபூமி

Dec 8, 2013

குங்குமம்

இந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.

சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

இந்த குங்குமம் நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லதாகும்.அதேபோல் குங்குமம் வைத்த பெண்களை யாரும் ஹிப்னாட்டிஸம்,வசியம் செய்ய முடியாது.அதை முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.

Dec 3, 2013

தெவசம் (பித்ரு பரிகாரம் - II)

தெய்வத்தின் வசம் என்பதன் சுருக்கமே தெவசம் ஆகும்.நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி,பட்சம்,தமிழ்மாதம் அறிந்து,ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே தெவசம் அல்லது சிரார்த்தமாகும்.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் சக்தி உடையது பித்ரு தர்ப்பணம் ஆகும்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள்,ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று(ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையகளையும்,அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

தெவச தினம் அன்று ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யலாம். அது மிகப்பெரிய புண்ணியமாகும்.


Oct 23, 2013

ஏன் இத்தனை கடவுள்…

உங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனை தான் நீங்கள் வழிபடுவீர்கள்?

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறார்கள்.
— with Drravi Varshan.

Oct 17, 2013

யட்சன் கொடுத்த தங்க ஜாடிகள்

ஒரு ஊரில் ஒரு மரம் இருந்தது;அந்த மரத்தில் யட்சன் ஒருவன் வசித்து வந்தான்.யட்சன் என்றால் குபேரன் என்று பெயர்.ஒரு நாள் அந்த மரத்தின் அருகே நாவிதன் ஒருவன் போனபோது, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்ற குரல் கேட்டது.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த அவன் மனிதர்கள் யாரும் இல்லாததால் சற்றுக் குழம்பிப் போனான்.இருந்தபோதிலும் ஏழு ஜாடித் தங்கம் என்ற வார்த்தை அவனுக்குள் ஆசையைத் தூண்டிவிட்டதால் “ஆமாம்,வேணும்”என்றான் பெருத்த எதிர்பார்ப்போடு!

“நீ உனது வீட்டுக்குப் போ.ஜாடிகளை உன் வீட்டில் வைத்துவிட்டேன்” என்று யட்சன் பதில் அளித்தான். அதைக் கேட்ட உடனே அந்த நாவிதன் வேகவேகமாக தனது வீட்டிற்குச் சென்றான்.அங்கே கண்ட காட்சி அவனை திகைக்க வைத்தது.ஏழு ஜாடிகள் அங்கே இருந்தன.
மூச்சிரைக்க ஓடி வந்த நாவிதன் அவசரமாக ஜாடிகளைத் திறந்து பார்த்தான்.எல்லாவற்றிலும் தங்கக் காசுகள் ஜொலித்தன.ஆறு ஜாடிகளில் தங்கம் நிறைந்திருந்தது.ஆனால்,ஏழாவது ஜாடியில் பாதி அளவிற்குத் தான் தங்கக்காசுகள் இருந்தன.ஆறு ஜாடிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்த நாவிதன்,ஏழாவது ஜாடியைப் பார்த்ததுமே அவனது மகிழ்ச்சி காற்று போனபலூனாகச் சுருங்கிப் போனது.

ஆறு ஜாடி தங்கத்தை செலவழித்து வாழ்க்கையை நிறைவாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்குப் பதிலாக,ஏழாவது ஜாடி குறைவாக இருக்கிறதே;அதை எப்பாடு பட்டாவது நிரப்பவேண்டும் என்ற தணியாத ஆர்வம் அந்த நாவிதனுக்கு ஏற்பட்டது.மனித மனத்தின் சுபாவங்களில் இதுவும் ஒன்று.

அந்த பாவப்பட்ட நாவிதனும் தன்னிடம் இருந்த பொன்,வெள்ளி,நகைகள் எல்லாவற்றையும் விற்று அதனை தங்கக்காசுகளாக்கி ஏழாவது ஜாடியில் போட ஆரம்பித்தான்;ஆனால்,எத்தனை காசுகள் போட்டாலும் அந்த மாய ஜாடி முன்பு போலவே குறைவாகவே இருந்தது. மேற்கொண்டு என்ன செய்து இந்த ஏழாவது ஜாடியை நிரப்பலாம் என்று நாவிதன் இரவும் பகலும் யோசிக்க ஆரம்பித்தான்.

சாப்பாட்டிற்காக தனது குடும்பத்திற்கு அதிக செலவாகிறது என்று அவனுக்குத் தோன்றியது.அதனால்,தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்து மீதிப்பணத்தைச் சேர்த்து, அவைகளை தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது ஜாடிக்குள் போட்டு வந்தான். அவன் அரண்மனையில் வேலை பார்த்து வந்தான்; அந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தையும் ஏழாவது ஜாடிக்குள் போட்டான். என்ன செய்தாலும் ஏழாவது ஜாடி நிரம்பவில்லை;
அந்தக் கவலையின் காரணமாக அவன் உடல் இளைக்க ஆரம்பித்தது;தாடி மீசையோடு நீண்ட நாள் நோயில் இருந்தவனைப் போன்ற தோற்றமடைந்தான்.

ஒரு நாள் அரசனைப் பார்த்து அவன், “குடும்பத்தை நடத்துவதற்கு பணம் போதவில்லை; ஆகவே, எனக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக்கித் தாருங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.அரசன் மிகவும் நல்லவன். நாவிதனுக்கு இரண்டு மடங்காக சம்பளத்தை உயர்த்தினான்.வருமானம் அதிகரித்தப்பிறகும் நாவிதன் தன் குடும்பத்திற்காக செலவு செய்யாமல் தங்கக்காசுகளாக்கி அந்த ஏழாவது ஜாடியில் போட்டுக்கொண்டே வந்தான். ஆனால், ஜாடி நிரம்பவில்லை; மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஓய்வு நேரங்களில் பிச்சை எடுக்கத் துவங்கினான்.அதில் வருகின்ற பணத்தையும் ஏழாவது ஜாடியில் போட்டு வந்தான்.ஜாடி நிரம்பவில்லை;

இப்படியே சில மாதங்கள் ஓடின. நாவிதனுடைய நிலைமை வரவர மோசமாகிக் கொண்டே வந்தது. அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது;ஒரு பிச்சைக்காரனைப் போலவும், பைத்தியம் பிடித்தவனைப் போலவும் அவன் காணப்பட்டான்.அவனது குழந்தைகள் போதிய சாப்பாடு இல்லாமல் எலும்பும் தோலுமாக இளைத்துப்போய்விட்டன. அவன் மனைவி வறுமையாலும், பசிக்கொடுமையாலும் நோயாளியாக மாறிவிட்டான்.


இதை எல்லாம் கவனித்து வந்த மன்னன், ஒரு நாள் நாவிதனை அழைத்து, “உனக்கு என்ன ஆயிற்று?நான் தரும் இரட்டிப்பு சம்பளத்தில் நீயும் உன் குடும்பத்தினரும் மிகவும் வசதியாக வாழ்க்கை நடத்தலாமே. அப்படியிருக்க உன் நிலைமை அதற்கு எதிர்மறையாக அல்லவா இருக்கிறது? நீ இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதி அளவு வாங்கும்போது திருப்தியோடும், மகிழ்ச்சியோடும் இருந்தாயே? இப்போது உன் முகத்தில் கவலையும், உன் வீட்டில் வறுமையும் நிரந்தரமாகத் தங்கிவிட்டதே! ஏழு ஜாடித்தங்கத்தை வாங்கிக் கொண்டாயா?” என்று கேட்டான்.
நாவிதன் அதிர்ந்து போனான். “ராஜாவே உங்களுக்கு இந்த உண்மை எப்படித் தெரியும்? யார் சொன்னார்கள்?” என்று கேட்டான்.
உடனே அரசன் நடந்தவற்றை புரிந்து கொண்டான்.

 “அடப்பாவி, தங்கத்திற்கு ஆசைப்பட்டு தங்கமான வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாயே.யாரிடம் யட்சனின் செல்வம் வந்திருக்கிறதோ அவன் இப்படிப்பட்ட நிலைக்கு வந்துவிடுவான் என்பது உனக்குத் தெரியாதா?”
இதே யட்சன் ஒரு நாள் ஏழு ஜாடித் தங்கத்தை எனக்குத் தருவதாகச் சொன்னான். இது வரவுப் பணமா? அல்லது செலவுப் பணமா? என்று கேட்டேன். அதாவது அந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டியதா? அல்லது புதைத்து வைக்க வேண்டியதா? என்று தெரிந்துகொள்ளவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்.

உடனே யட்சன் ஒரு பதிலும் சொல்லாமல் ஓடிப்போய்விட்டான்.அந்தப் பணத்தை(தங்கத்தை) யாராலும் செலவழிக்க முடியாது என்பது உனக்குத் தெரியாதா?

மஹாலட்சுமி தரும் ஐஸ்வர்யத்திற்கும், யட்சனாகிய குபேரன் தரும் ஐஸ்வர்யத்திற்கும் வித்தியாசம் உண்டு.மஹாலட்சுமி தரும் பணத்தை(தங்கத்தை & செல்வ வளத்தை) செலவழிக்க முடியும்.ஆனால், யட்சனாகிய குபேரன் தரும் பணத்தை உன்னால் செலவழிக்க முடியாது; அது மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தான் தரும்.உடனே போய் யட்சனிடம் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடு” என்று ஆலோசனை தந்தான்.


அதைக் கேட்டதும் நாவிதனுக்குப் புத்தி வந்தது. உடனே அவன் யட்சன் வாழும் மரத்தின் அருகே சென்றான். “யட்சனே, உன் தங்க ஜாடிகள் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்” என்றான்.
“நல்லது அப்படியே ஆகட்டும்” என்று யட்சன் பதிலளித்தான். அடுத்த நிமிடமே நாவிதன் அவசரமாக தன் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தான்.மாயமாக வந்த ஜாடிகள் மாயமாக மறைந்து விட்டிருந்தன.

நாவிதன் தலையில் கைவைத்துக் கொண்டு அழுதான். ஜாடிகள் மட்டுமா மறைந்தன; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடு பட்டு சேர்த்து வைத்த அத்தனை செல்வமும் அல்லவா கையை விட்டுப்போய்விட்டது.அவைகளை மறுபடியும் சேர்க்க இன்னும் எத்தனை வருடங்கள் தானும் தன் குடும்பத்தாரும் கடினமாக உழைக்க வேண்டுமோ? என்ற கவலையும் பயமும் அவனை மிகவும் வாட்டியது.பேராசை பெருநஷ்டம்;கடினமான உழைப்பினால் அடைந்த செல்வம் தான் தங்கும்;மற்றவை மழையில் நனையும் மண்கட்டியைப் போல கரைந்துவிடும் என்ற உண்மையை அவன் உணர்ந்து கொண்டான்.

தங்கத்தின் மீது ஆசை வந்துவிட்டால் தூக்கம் போய்விடும்;சாப்பாடு பிடிக்காது;மனம் வேறு எந்த ஒன்றிலும் லயிக்காமல் போய்விடும்;என்ற உண்மையை இந்த நிஜச்சம்பவத்தின் மூலமாக ராமக்ருஷ்ண பரமஹம்சர் விவரித்திருக்கிறார்.

Aug 19, 2013

பித்ரு பரிகாரம்

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால் இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல்,  திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.

சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை குறைவுடன் செய்தல் காரணமாகும்.

ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.

முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.

 இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.


அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.


திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.


மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.


மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.

இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

தெரிந்துகொள்ளுங்கள்

மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன்?
திருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது.

மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம்.  வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும்.

கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.

ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் 
என்பதற்காகவே இவ்வாறு ஆரத்தி எடுக்கப்படுகிறது.  சரஸ்வதியின் நிறம் வெண்மை, லட்சுமியின் நிறம் மஞ்சள். எனவே, சுண்ணாம்பும் மஞ்சளும், அதாவது வெள்ளையும் மஞ்சளும் கலந்து சிவப்பு என்கிற ஆரத்தி உண்டாகிறது.  எனவே, ஆரத்தி கொண்டு சுப நிகழ்ச்சிகள் முடிந்தவுன் 
சம்பந்தப்பட்டவர்களை வரவேற்கும்போது அவர்கள் மீது கண் திருஷ்டி விழுவதில்லை. 

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

சந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...!

'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம
ராசியாகும்.

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.உதாரணமாக மேச ராசிக்கு,விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும்,விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில்(விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேச ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும்.

தேவையில்லாத அலைச்சல்கள்,வீண் தகராறுகள்,காரியத்தில் தோல்வி போன்றவை ஏற்படலாம்.சந்திராஷ்டம் அன்று அந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்ப்பது நன்று.அதேபோல் வாகன பயணங்களை தவிர்க்கலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.


நமது ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. முகூர்த்தம் வைக்கும் பொழுது, தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும்.

சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும். இருப்பினும், விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர்.

இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்.

Aug 8, 2013

சிவலிங்க வழிபாடு

அறிவியல் சொல்லும் உண்மையும் :

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது
உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

அறிவியலும் இந்து மதமும் -

அறிவியலும் இந்து மதமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பிட்யூட்டரி சுரப்பி. பிட்டியூட்டரி சுரப்பி முதன்மையான சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சுரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.

படங்களும் அதன் விரிவாக்கமும்

1. கோவிலின் அமைப்பு
2. பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம்
3.பிட்யூட்டரி சுரப்பி
4.மனித மூளையில் பிட்யூட்டரி சுரப்பியின் இடம்.

தகவல்: மதன் கண்ணன்

Aug 6, 2013

தீர்த்தம்...

இந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல்நோயும் ,உளநோயும் நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்

ஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம்அணிதல், திருத்துழாய்(துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் ,உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.

ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.

வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.

சைவத்திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.

ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.

நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

புனித தீர்த்தம்

1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.

Jul 29, 2013

ஒரு கன்னத்தில் அறைந்தால்.....?

இந்துமதத்தில் ஒரு முக்கியமான விசயம் இருக்கிறது அதனைப் பற்றி கண்டிப்பாக நாம் அறிந்துகொள்ளவேண்டும். 

ஒருவனுக்கு நீங்கள் தீங்கு செய்தால், கண்டிப்பாக அந்த பாவத்தை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். அதே உங்களுக்கு பல மடங்கு தீமையாக திரும்பிவரும். இந்துமதத்தில் பாவமன்னிப்பு என்பது கிடையாது. ஒரு ஏழையை ஒருவன் வஞ்சித்தால் அவனை அவன் வணங்கும் கடவுள்  திரும்பி வஞ்சிப்பேன் என்று தான் கையில்ஆயுதத்தோடு இருக்கிறது. ஒவ்வொரு கடவுள் கையில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம் தன் பக்தனை காப்பாற்ற நான் வைத்திருக்கிறேன் என்ற அர்த்தத்துடன் தான் இருக்கிறது. 

இயேசுநாதர் சொல்லிருப்பார் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னோரு கன்னத்தை திருப்பிகாட்டு என்பார். இயேசு சொன்ன வார்த்தையை நம்ம ஆளுங்க எடுத்துக்கொண்டு இவர்களை யார் தாக்கினாலும் 'இயேசு சொல்லிருக்கிறார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும்' என்று அதனால் நான் அடிப்பவனை எதிர்காமல் மறுகன்னத்தை காட்டுகிறேன் என்பான். இங்கு உள்ள ஞானிகள் சொன்ன கருத்து இவன் காதுக்கு கேட்காது. அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு நம்ம ஆளுங்க சொன்ன கருத்தை விட்டுவிட்டார்கள். 

நம்ம ஆளுங்க கருத்தை அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தாக்கியதற்க்கு ஒரு நாட்டையை அழிக்கவேண்டும் என்று முடிவு எடுத்து அழிக்கிறான் அமெரிக்கா காரன். அவன் இயேசு சொன்ன கருத்தை எடுத்துக்கொள்ளவில்லையே. அவன் நமது ராமனோடு கருத்தை எடுத்துக்கொண்டு செயல் புரிந்தான். ராமனோடு மனைவியை ஒருவன் கடத்திக்கொண்டு சென்றதால் ஒரு நாட்டையை அழித்தான் ராமன். அதனை எடுத்துக்கொண்டு அமெரிக்காகாரன் செயல்பட்டான். 

நம்ம ஆளுங்க இயேசுவோடு கருத்தை எடுத்துக்கொண்டு அடிவாங்கிக்கொண்டு இருக்கிறான். இன்னும் புரியும் படி சொல்லவேண்டும் என்றால், உங்களின் மனைவியை ஒருவன் கையை பிடித்து இழுக்கும்பொழுது அவனை நீங்கள் அடிப்பீர்களா அல்லது அவன் செய்கின்ற செயல் தீயவை அந்த கர்மத்தை அவன் அனுபவிப்பான் என்று ஏண்டா ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கிறாய் இன்னோரு கையும் நீங்களே பிடித்து அனுப்பிவீர்களா?   

உயர்ந்த ஞானியோடு கருத்தை எடுத்துக்கொண்டு இல்லறத்தில் வாழ்பவன் வாழமுடியாது. அவதார புருஷனாக வந்து வாழ்ந்து காட்டிய மகான்கள் பாரததேசத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை நோக்கினால் தெய்வம் நின்று கொல்லும் என்பதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை. 

உன் கையை ஒருவன் வெட்டினால் அவனின் கையை நீ வெட்டு அல்லது கடவுளாக நான் வந்து வெட்டுவேன் என்று தான் மதத்தில் சொல்லிருக்கிறார்களே ஒழிய. ஒரு கையை வெட்டினால் இன்னோரு கையையும் வெட்டுங்கள் என்று திரும்பி நிற்க சொல்லவில்லை. 

Jul 18, 2013

இந்துமதம் தோற்றம் பெற்றது எங்கே?

இந்தமதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும் 

“இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..”  என்ற எண்ணம் தோன்றுகிறதா? 

ஆம்! 
ஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம்.
அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்!!!
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.
அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன???

சைவத்தின் தலைமைக் கோவில் : சிதம்பரம் - தமிழகத்திலேயே இருக்கின்றது.

வைணவத்தின் தலைமைக் கோவில் : திருவரங்கம் -இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.

தலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…!!!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

மேலும்,சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.

வைணவம் வளர்த்த
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.

சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!!

சமஸ்கிருதத்தால் வட நாட்டில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏனென்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் உண்மை புரியும்.

சமஸ்கிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமஸ்கிருதம் பேசப்பட்ட இடத்தில் சமஸ்கிருதத்தில் பேசியவர்களால் சமஸ்கிருதத்தால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்?

ஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின?

கடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன?  யோசியுங்கள்..................