Dec 1, 2013

பெண்கள் மூக்குத்தி அணிவதால்....

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன.

Nov 16, 2013

அம்மா...!


Nov 14, 2013

எது என்னுடையது.....?


தீபத்திருநாள்

கார்த்திகை நட்சத்திற்கு முதல் நாள் தீபம்.
மறுநாள் கார்த்திகை தீபம். தீபம் இருளை நீக்கி பேரொளியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும்.பௌர்ணமி தினத்தன்று சந்திரன் கிருத்திகா நக்ஷத்திரத்தில் இருக்கும் போது கொண்டாடப் பட்டது.அன்று மகாபலி சக்ரவர்த்தி முக்தி அடைந்த தினம் என்பார்கள். கார்த்திகையில் நெற்பொறி நைவேத்தியம் செய்ய வேண்டும். இவை முக்தி பெற்றவருக்கு மறுபிறவி இல்லை என்பதை காட்டுகிறது.

கார்த்திகைத் தீபத் திருவிழா பண்டையக் காலந்தொட்டு நம்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமது தொல்காப்பிய உரையில், நச்சினார்க்கினியர், ‘கார்த்திகை திங்களில் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு’ என்று கார்த்திகைத் தீபத்தைக் குறிப்பிடுகிறார். ‘கார் நாற்பது’ என்ற நூலிலும் கார்த்திகை தீபம் பற்றிய விரிவான விளக்கம் கிடைக்கிறது. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ‘தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்று கார்த்திகை விளக்கு பற்றி பாடி மகிழ்கிறார்.
தமிழர்களிடையே வழங்கும் பழமொழிகளிலும் கார்த்திகை தீபம் ஒளி பரப்புகிறது. ‘குன்றில் இட்ட விளக்குபோல்’ என்று சாதாரணமாகத் தமிழ் மக்கள் பேசிக்கொள்வதுண்டு. திருவண்ணாமலையில் ஏற்றி வைக்கும் ஜோதி சொரூபமான மகாதீப தரிசனத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய பழமொழியாக இருக்கலாம் என்பார்கள். ‘மலை விளக்கு’ என்பதும் அண்ணாமலைக் கார்த்திகைத் தீபத்தைக் குறித்தே.

சிவபெருமான் மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் ஜோதிப் பிழம்பாய் விஸ்வரூப தரிசனம் கொடுத்து மலையாய் குளிர்ந்த நாளே கார்த்திகை பௌர்ணமி தினம். எனவே இந்நாளில் சிவன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் அண்ணாமலையாரின் ஜோதி தரிசனம் கண்ட பலன் ஏற்படும் என்பர். இந்நாளில் அன்னாபிஷேகம் செய்வது மிக விசேஷம். இந்நாளில் ஈசனின் பன்னிரு ஜோதிர் லிங்க வடிவங்களை தரிசிப்பது மகத்தான பலன் தரும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டிய கருத்தை வலியுறுத்தி சிவபெருமான் கடுந்தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி தேவிக்கு கார்த்திகை பௌர்ணமி நாளில்தான் உடலின் இடப்பாகத்தைக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரரானார். இந்நாளில் லிங்காஷ்டகம் சொல்வதும் கேட்பதும் தீராத வினை தீர்த்து நீங்காத செல்வமும் நிலைத்த ஆயுளும் தரும்.

கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியில் (பிருந்தாவன துவாதசி) துளசி தேவி மகாவிஷ்ணுவை மணந்ததாக ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசி தளத்திற்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். துளசி மணிமாலை அணிபவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசி பூஜை நடத்துவதும் சிறப்பானதே. இதனால் லட்சுமி தேவி இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள். இந்நாளில் அன்னதானம் செய்தால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.

இந்த கார்த்திகைத் திருநாளில், மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து தாமரை இதழ்களால் அர்ச்சித்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூடப் பெறலாம். இதே நாளில், பெருமாள் கோயிலில் விஷ்ணு சந்நதிக்கு எதிரே அமர்ந்துகொண்டு பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் நம்மை வந்து சேரும். கார்த்திகை மாத சுத்த பஞ்சமி திருநாள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் திருமகள் சேர்ந்த புண்ணிய தினமாகும். இந்நாளில் காவிரியாற்றிலும் புனித தீர்த்தங்களிலும் நீராடி திருமாலையும் திருமகளையும் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேரும் என்கின்றன சாஸ்திரங்கள்.

நவகிரக நாயகர்கள் பிரம்மாவின் சொற்படி கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரு வாரங்கள் நோன்பு நோற்று சாப விமோசனம் பெற்றனராம். கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு மட்டுமாவது உணவு உண்ணாமல் உபவாசமிருந்து, சிவாலயம் சென்று வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் சிவசக்தியின் பேரருளால் நீங்கி நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெருகும். இம்மாதத்தில் விளக்கு தானம் செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும். கார்த்திகை சோம வார (திங்கட்கிழமை) விரதம் அனுஷ்டிப்பவர்கள் சகல மேன்மைகளையும் பெறுவர். இவ்விரதத்தை 12 வருடங்களாகக் கடைப்பிடித்து நாரதர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.

உலக கதாபாத்திரங்கள்

உலகிலே காணப்படுகின்ற அத்தனை விதமான மனிதர்களையும் கதாப்பாத்திரங்களாகக் கொண்டது மகாபாரதம்.நல்லவர்கள், தீயவர்கள், பொறாமை குணம் உள்ளவர்கள், அறிவில் சிறந்த பெரியவர்கள், சிறு மதி படைத்த கயவர்கள், நன்றி உள்ளவர்கள், துரோகிகள், வீரர்கள், கோழைகள், வள்ளல் குணம் கொண்டவர்கள், நட்பில் சிறந்தவர்கள், கடமையில் சிறந்தவர்கள், முனிவர்கள், ரிஷிகள், துறவிகள் என்று அதில் இல்லாத கதாபாத்திரங்கள் எதுவும் உலகில் கிடையாது. அந்த அளவு வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் உடையது இந்த உலகம் என்பதை உணர்த்துவதே கோட்பாடு. கண்ணனுடைய விஸ்வரூபத்தைப் பார்க்கும் வரை அர்ஜுனனுடைய கண்ணோட்டமும், மனநிலையும் வேறு விதமாக இருந்தது. ஆனால், அதைப் பார்த்த பிறகு அவன் அடியோடு மாறி விட்டான். தனக்கு உற்றவர்களும், தனக்குக் கேடு செய்பவர்களும் அனைவருமே பகவானுடைய சொரூபத்தில் அடங்கியிருப்பதைக் கண்டான். தான் போர் புரியாவிட்டாலும் பல உயிர்களை துடைத்து ஒடுக்கவது இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்து கொண்டான். அது போல தங்கள் செயல்களுக்கெல்லாம் தாங்களே கர்த்தாக்கள் என்று உயிர் வகைகள் எல்லாம் எண்ணிக் கொள்கின்றன. பரம் பொருளை உணர்ந்த ஞானிகள் நிலையோ வேறு. அவர்களுக்குத் தெரியும் தாங்கள் எதுவுமில்லை என்பது. கருவியும் அவனே. கர்த்தாவும் அவனே. காரியங்களும் அவனே.

இந்த உலகில் காணப்படுகின்ற முரண்பாடுகளெல்லாம் முரண்பாடுகளே அல்ல என்பது ஈசனை உணர்ந்தவர்களுக்கே தெரியும். பரமசிவன் சொரூபத்தில் அவ்வுண்மையை அவர்கள் அடக்கி வைத்துச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். சர்ப்பத்துக்கும், சந்திரனுக்கும் தீராத பகை என்பது ஐதீகம். ஆனால், சிவனாருடைய சொரூபத்தில் அவை இரண்டும் அருகருகே இடம் பெற்றிருக்கின்றன. தீயை அணைக்க வல்லது தண் புனல். ஆனால், சிவனாரின் ஜடா முடியிலிருந்து பாயும் கங்கையோ அவர் கையில் ஏந்தியிருக்கும் அனலை அணைக்காமலிருக்கிறது. விலங்குகளில் பெரியது யானை. சிறியது எலி. யானை வடிவிலிருக்கும் பிள்ளையார் எலியை வாகனமாகக் கொண்டிருப்பதன் மூலம், ஈஸ்வர சொரூபத்தில் பெரியது, சிறியது என்ற பேதம் கிடையாது என்பதை உணர்த்துகிறது. கொழுத்த காளையைப் பார்த்தால் சிங்கம் அதைக் கொன்று தின்று விடுமே அல்லாது,அதனோடு கூட நட்புறவோடு படுத்துக் கிடக்காது. ஆனால், சிவனாரின் சொரூபத்திலோ அம்பிகையின் வாகனமாக சிங்கமும், அண்ணலின் வாகனமாகக் காளையும் அருகருகே அமர்ந்திருக்கின்றன. பொறாமையோ, பயமோ, பகையோ அங்கு இல்லை.

ஆற்றலில் சிறந்தவனாகக் குமரன். அறிவில் சிறந்தவனாக கணபதி. குமரனின் காலுக்கடியில் எதிரிகளான மயிலும் பாம்பும் நட்போடு விளங்குகின்றன. அங்கே விரோத மனப்பான்மை என்பது துளி கூடக் கிடையாது. இறைவனின் திருவடியின் கீழ் காமம், கோபம், குரோதம் அழிந்து பட்டுப் போகின்றது. ஆற்றலில் சிறந்த குமரனா, அறிவில் சிறந்த கணபதியா யார் மேலோன், யார் கீழோன் என்று நிர்ணயிக்க யாராலும் முடியாது. பெயரளவில் ஒருவன் பெரியவன், மற்றவன் சிறியவன் அவ்வளவுதான். மற்றபடி ஈஸ்வர சாந்நியத்தித்தில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஈஸ்வரனுடைய சொரூபத்தில் வேற்றுமைக்கோ, பேதத்திற்கோ, முரண்பாடுகளுக்கோ இடமில்லை. அனைத்தும் அவர் மயமாகி விடுகின்றது. அர்ஜுனனுக்குக் கிடைத்த விஸ்வரூபக் காட்சி சிவனாரரின் சொரூபத்திலேயே அடங்கி இருக்கிறது. பரம்பொருளை உணர்ந்த ஒவ்வொரு ஞானியும் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டவர்களே. ஊனக் கண் கொண்டு காண்பவர்களுக்கு அது படம். ஞானக் கண் கொண்டு காணும் போது அது சொல்வதோ பெரும் பாடம்.

Nov 13, 2013

மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை


காதல் என்றால்....?

5 வயசு பொண்ணு :
என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான் எனக்கு கோவம் வந்திடுச்சு அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப
என் பொம்மைக்கு அவன் புது சட்ட போட்டு எடுத்துட்டு வருவது.

10 வயசு பொண்ணு :
அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன் டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம
அவனே முட்டி போட்டு நிற்பது .

15 வயசு பொண்ணு :
ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது அந்த பேனாவ தான்னு வாங்கும் போது அவன் கைல லேசா உரசுவது

20 வயசு பொண்ணு :
நான்கு வருடம் எதையுமே சொல்லாமல் கல்லூரி கடைசி நாளில் விடை பெறும் போது "அப்புறம் எப்ப பார்க்கலாம் ?"
என்று அவன் கேட்டது

25 வயசு பொண்ணு :
கையில ஒத்த ரோசாவோட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிப்பாயா என்று கேட்டு அவனையே முட்டாளாக்கி கொண்டது .

35 -45 வயசு பெண் மணி :
நான் ரொம்ப களைப்பா இருக்குறதப்பார்த்து நான் காபி போட்டு தரவா என்று அவர் கேட்பது

55 வயசு பெண்மணி :
அவருக்கு மைசூர்பான்னா உயிர் எனக்கு சர்க்கரை நோய் நான் சாப்பிட முடியாதென்று அவரும் சாப்பிடாமல் அதை ஒதுக்குவது

65 வயது பெண்மணி
நான் கடைசி மூச்ச விடும் போது என் கைய பிடிச்சிகிட்டே
என்னையும் கூட்டிட்டு போ-ன்னு அவர் கண்ணீர் விட்டது.

ஒரு புனிதத் தாவரம்

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது

 இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

Nov 12, 2013

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

Nov 7, 2013

மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!

கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.

ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப... அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.

வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!

மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.

மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.

மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.