Jul 18, 2013

இந்துமதம் தோற்றம் பெற்றது எங்கே?

இந்தமதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும் 

“இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..”  என்ற எண்ணம் தோன்றுகிறதா? 

ஆம்! 
ஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம்.
அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்!!!
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.
அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன???

சைவத்தின் தலைமைக் கோவில் : சிதம்பரம் - தமிழகத்திலேயே இருக்கின்றது.

வைணவத்தின் தலைமைக் கோவில் : திருவரங்கம் -இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.

தலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…!!!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

மேலும்,சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.

வைணவம் வளர்த்த
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.

சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!!

சமஸ்கிருதத்தால் வட நாட்டில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏனென்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் உண்மை புரியும்.

சமஸ்கிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமஸ்கிருதம் பேசப்பட்ட இடத்தில் சமஸ்கிருதத்தில் பேசியவர்களால் சமஸ்கிருதத்தால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்?

ஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின?

கடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன?  யோசியுங்கள்..................

0 comments:

Post a Comment