Dec 27, 2013

காரை படிந்துள்ளதா....?

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.

நன்றி: ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்

தனித் தன்மை

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.

அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்...!

புதுப்பெண்ணை 'வலது காலை எடுத்து வைத்து வா' என்று கூறக்காரணம்?

புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?

மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அதாவது மனிதனால் ஒருபோதும் தனிமையில் வாழ முடியாது. அப்படி வாழ்வதும் வாழ நினைப்பதும் விதிவிலக்காக கொள்ளலாமே தவிர விதியாக கொள்ள இயலாது. சமூகமாக கூடி வாழ்வதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

பத்துபேர் இருக்கிற ஒரு சபையில் எல்லோருக்குமான கட்டுப்பாடு உண்டு. தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாலுபேர் முன்னால் நாம் மட்டும் தனித்த ஒரு செயலை செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அப்படி செய்வதனால் பொது அமைதி கெட்டுவிடும் இதனால் தான் நமது முன்னோர்கள் நீதியை, பொது நீதி, தனி நீதி என்று இரு பகுதிகளாக பிரித்து நமக்கு தந்தார்கள்.

“உலகப்பொதுமறை” தந்த வள்ளுவன் கூட, உலகத்தவரோடு ஒட்டி உறவாடி செல்லாதவன், பலவிதமான கல்வியை கற்றிருந்தாலும் பயனில்லை என்று கூறுகிறார். நாலுபேர் ஒரு பாதையில் போகும் போது நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் தனிபாதை போட நினைத்தால் தடுமாற வேண்டிய சூழல் வரும்.

நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன. நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்.

Dec 13, 2013

லட்சுமி கடாட்சம் பெருக...

*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.

* வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.

*வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

*வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

*குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.

*அதேபோல் 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.


கடன் தீர...

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்முடைய இந்த பிறவி பயன், பலன் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொறுத்தே உள்ளது என்பதுதான் அந்த வார்த்தையின் அர்த்தம். ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும்.

இந்த ஸ்தானத்தில் இருந்துதான் மற்ற அமைப்புகளை கணக்கிடுகிறோம். லக்னம் ஒன்றாம் இடம். இதற்கு அடுத்த வீடு தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம். இந்த வரிசையில் ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாமிடமும், ஆறாம் அதிபதியுமே கடன் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியவர்.

பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்துவிடுகிறது. ஒரு சில மகா பாக்கியவான்களை தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது.

இதில் சுபவிரயமும், அசுபவிரயமும் அடக்கம். மகன், மகள் கல்வி செலவு, பிள்ளைகள் திருமணம், வியாபாரம், தொழில், வழக்குகள், ஆடம்பர வாழ்க்கை, மருத்துவ செலவுகள் என பல விஷயங்கள் நம்மை கடனாளி ஆக்குகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள்.

எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடன் தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லையிலிருந்து மீள, 3 பவுர்ணமி நாட்களில் அவரவர் குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை படிப்படியாகக் குறையும். கடனை அடைத்துவிடலாம்.

குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் வசிப்பவர்கள், அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி 5 முக நெய்விளக்கு ஏற்றி, 9 பவுர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்.

9 பவுர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை செய்து வந்தால்  கடன் சுமை படிப்படியாகக் குறைந்து, 90 நாட்களில் பெருமளவு கடனைக் கட்டி நிம்மதி பெறலாம்.

மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும்.

தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம்.

“ ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக...”

இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் கடன்தொல்லை நீங்கும்.

Dec 8, 2013

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்

சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை
ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும். ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல. வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிப்பது சிறந்தது.

பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும்போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது. வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.


குங்குமம்

இந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.

சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

இந்த குங்குமம் நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லதாகும்.அதேபோல் குங்குமம் வைத்த பெண்களை யாரும் ஹிப்னாட்டிஸம்,வசியம் செய்ய முடியாது.அதை முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.

Dec 3, 2013

அறுபதாம் கல்யாணம்

60 வயசுக்கு என்ன விஷேசம்?

அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது.  சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்.

நம்முடைய தமிழ் ஆண்டுகள் அறுபதாகும்.ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கின்றது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நட்சத்திரத்தில், எந்த திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும். இந்த அறுபதாம் ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒருபெரும் விழாவாக அவர்கள் பெற்ற குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய் இருந்து வருகிறது.

இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் அல்லது அறுபதாம் கல்யாணம் என்பார்கள்.தன் துணையுடான அறுபதாம் கல்யாணம் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது அதற்கு தெய்வ அருள் நிச்சயம் வேண்டும்.

அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...

கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..

20 வயது வரை  நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை

40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை

60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது?

மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.

இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி... குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..

உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் இன்ப,துன்பங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான்.அவனுடைய அறுபதாவது வாழ்வில் மீண்டும் ஒரு புதுப்பிறவி எடுக்கிறான்.

அதாவது இளமையில் திருமணம் செய்து குடும்பத்தை கவனித்து,பிள்ளகளை ஆளாக்கி வளர்த்து,நல்ல வாழ்வை அமைத்துகொடுத்து இல்லற கடமையை முடிக்கிறான்.

இதற்கு பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுவித்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.


தெவசம் (பித்ரு பரிகாரம் - II)

தெய்வத்தின் வசம் என்பதன் சுருக்கமே தெவசம் ஆகும்.நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி,பட்சம்,தமிழ்மாதம் அறிந்து,ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே தெவசம் அல்லது சிரார்த்தமாகும்.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் சக்தி உடையது பித்ரு தர்ப்பணம் ஆகும்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள்,ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று(ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையகளையும்,அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

தெவச தினம் அன்று ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யலாம். அது மிகப்பெரிய புண்ணியமாகும்.


Dec 2, 2013

பரம்பரை என்றால் என்ன?

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
என்று சொல்வதுண்டு...
வழி வழியாக வந்தவர்கள் என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? 

ஆம்!..

பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

நமக்கு முந்தைய தலைமுறைகள்:

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி -

ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் -

ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்

என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
என்று பொருள் வரும்.
நமக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
இப்படி உறவு முறைகள் இருக்கிறதா?

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!

Dec 1, 2013

தீபம் ஏற்றும் முறை

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.


விளக்கேற்றும் நேரம்
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம்.

விளக்கேற்றும் பலன்
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்

விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.


திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எண்ணெயின் பலன் தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.


விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் -நல்லெண்ணெய்.

நன்றி: பட்டுக்கோட்டை 
ஜோதிடர் சுப்பிரமணியன்.

பெண்கள் மூக்குத்தி அணிவதால்....

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன.