Nov 16, 2013

அம்மா...!


Nov 14, 2013

எது என்னுடையது.....?


தீபத்திருநாள்

கார்த்திகை நட்சத்திற்கு முதல் நாள் தீபம்.
மறுநாள் கார்த்திகை தீபம். தீபம் இருளை நீக்கி பேரொளியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும்.பௌர்ணமி தினத்தன்று சந்திரன் கிருத்திகா நக்ஷத்திரத்தில் இருக்கும் போது கொண்டாடப் பட்டது.அன்று மகாபலி சக்ரவர்த்தி முக்தி அடைந்த தினம் என்பார்கள். கார்த்திகையில் நெற்பொறி நைவேத்தியம் செய்ய வேண்டும். இவை முக்தி பெற்றவருக்கு மறுபிறவி இல்லை என்பதை காட்டுகிறது.

கார்த்திகைத் தீபத் திருவிழா பண்டையக் காலந்தொட்டு நம்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமது தொல்காப்பிய உரையில், நச்சினார்க்கினியர், ‘கார்த்திகை திங்களில் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு’ என்று கார்த்திகைத் தீபத்தைக் குறிப்பிடுகிறார். ‘கார் நாற்பது’ என்ற நூலிலும் கார்த்திகை தீபம் பற்றிய விரிவான விளக்கம் கிடைக்கிறது. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ‘தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்று கார்த்திகை விளக்கு பற்றி பாடி மகிழ்கிறார்.
தமிழர்களிடையே வழங்கும் பழமொழிகளிலும் கார்த்திகை தீபம் ஒளி பரப்புகிறது. ‘குன்றில் இட்ட விளக்குபோல்’ என்று சாதாரணமாகத் தமிழ் மக்கள் பேசிக்கொள்வதுண்டு. திருவண்ணாமலையில் ஏற்றி வைக்கும் ஜோதி சொரூபமான மகாதீப தரிசனத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய பழமொழியாக இருக்கலாம் என்பார்கள். ‘மலை விளக்கு’ என்பதும் அண்ணாமலைக் கார்த்திகைத் தீபத்தைக் குறித்தே.

சிவபெருமான் மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் ஜோதிப் பிழம்பாய் விஸ்வரூப தரிசனம் கொடுத்து மலையாய் குளிர்ந்த நாளே கார்த்திகை பௌர்ணமி தினம். எனவே இந்நாளில் சிவன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால் அண்ணாமலையாரின் ஜோதி தரிசனம் கண்ட பலன் ஏற்படும் என்பர். இந்நாளில் அன்னாபிஷேகம் செய்வது மிக விசேஷம். இந்நாளில் ஈசனின் பன்னிரு ஜோதிர் லிங்க வடிவங்களை தரிசிப்பது மகத்தான பலன் தரும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டிய கருத்தை வலியுறுத்தி சிவபெருமான் கடுந்தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி தேவிக்கு கார்த்திகை பௌர்ணமி நாளில்தான் உடலின் இடப்பாகத்தைக் கொடுத்து அர்த்தநாரீஸ்வரரானார். இந்நாளில் லிங்காஷ்டகம் சொல்வதும் கேட்பதும் தீராத வினை தீர்த்து நீங்காத செல்வமும் நிலைத்த ஆயுளும் தரும்.

கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியில் (பிருந்தாவன துவாதசி) துளசி தேவி மகாவிஷ்ணுவை மணந்ததாக ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசி தளத்திற்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். துளசி மணிமாலை அணிபவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசி பூஜை நடத்துவதும் சிறப்பானதே. இதனால் லட்சுமி தேவி இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள். இந்நாளில் அன்னதானம் செய்தால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.

இந்த கார்த்திகைத் திருநாளில், மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து தாமரை இதழ்களால் அர்ச்சித்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூடப் பெறலாம். இதே நாளில், பெருமாள் கோயிலில் விஷ்ணு சந்நதிக்கு எதிரே அமர்ந்துகொண்டு பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் நம்மை வந்து சேரும். கார்த்திகை மாத சுத்த பஞ்சமி திருநாள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் திருமகள் சேர்ந்த புண்ணிய தினமாகும். இந்நாளில் காவிரியாற்றிலும் புனித தீர்த்தங்களிலும் நீராடி திருமாலையும் திருமகளையும் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேரும் என்கின்றன சாஸ்திரங்கள்.

நவகிரக நாயகர்கள் பிரம்மாவின் சொற்படி கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரு வாரங்கள் நோன்பு நோற்று சாப விமோசனம் பெற்றனராம். கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு மட்டுமாவது உணவு உண்ணாமல் உபவாசமிருந்து, சிவாலயம் சென்று வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் சிவசக்தியின் பேரருளால் நீங்கி நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெருகும். இம்மாதத்தில் விளக்கு தானம் செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும். கார்த்திகை சோம வார (திங்கட்கிழமை) விரதம் அனுஷ்டிப்பவர்கள் சகல மேன்மைகளையும் பெறுவர். இவ்விரதத்தை 12 வருடங்களாகக் கடைப்பிடித்து நாரதர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.

உலக கதாபாத்திரங்கள்

உலகிலே காணப்படுகின்ற அத்தனை விதமான மனிதர்களையும் கதாப்பாத்திரங்களாகக் கொண்டது மகாபாரதம்.நல்லவர்கள், தீயவர்கள், பொறாமை குணம் உள்ளவர்கள், அறிவில் சிறந்த பெரியவர்கள், சிறு மதி படைத்த கயவர்கள், நன்றி உள்ளவர்கள், துரோகிகள், வீரர்கள், கோழைகள், வள்ளல் குணம் கொண்டவர்கள், நட்பில் சிறந்தவர்கள், கடமையில் சிறந்தவர்கள், முனிவர்கள், ரிஷிகள், துறவிகள் என்று அதில் இல்லாத கதாபாத்திரங்கள் எதுவும் உலகில் கிடையாது. அந்த அளவு வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் உடையது இந்த உலகம் என்பதை உணர்த்துவதே கோட்பாடு. கண்ணனுடைய விஸ்வரூபத்தைப் பார்க்கும் வரை அர்ஜுனனுடைய கண்ணோட்டமும், மனநிலையும் வேறு விதமாக இருந்தது. ஆனால், அதைப் பார்த்த பிறகு அவன் அடியோடு மாறி விட்டான். தனக்கு உற்றவர்களும், தனக்குக் கேடு செய்பவர்களும் அனைவருமே பகவானுடைய சொரூபத்தில் அடங்கியிருப்பதைக் கண்டான். தான் போர் புரியாவிட்டாலும் பல உயிர்களை துடைத்து ஒடுக்கவது இறைவனின் சித்தம் என்பதை உணர்ந்து கொண்டான். அது போல தங்கள் செயல்களுக்கெல்லாம் தாங்களே கர்த்தாக்கள் என்று உயிர் வகைகள் எல்லாம் எண்ணிக் கொள்கின்றன. பரம் பொருளை உணர்ந்த ஞானிகள் நிலையோ வேறு. அவர்களுக்குத் தெரியும் தாங்கள் எதுவுமில்லை என்பது. கருவியும் அவனே. கர்த்தாவும் அவனே. காரியங்களும் அவனே.

இந்த உலகில் காணப்படுகின்ற முரண்பாடுகளெல்லாம் முரண்பாடுகளே அல்ல என்பது ஈசனை உணர்ந்தவர்களுக்கே தெரியும். பரமசிவன் சொரூபத்தில் அவ்வுண்மையை அவர்கள் அடக்கி வைத்துச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். சர்ப்பத்துக்கும், சந்திரனுக்கும் தீராத பகை என்பது ஐதீகம். ஆனால், சிவனாருடைய சொரூபத்தில் அவை இரண்டும் அருகருகே இடம் பெற்றிருக்கின்றன. தீயை அணைக்க வல்லது தண் புனல். ஆனால், சிவனாரின் ஜடா முடியிலிருந்து பாயும் கங்கையோ அவர் கையில் ஏந்தியிருக்கும் அனலை அணைக்காமலிருக்கிறது. விலங்குகளில் பெரியது யானை. சிறியது எலி. யானை வடிவிலிருக்கும் பிள்ளையார் எலியை வாகனமாகக் கொண்டிருப்பதன் மூலம், ஈஸ்வர சொரூபத்தில் பெரியது, சிறியது என்ற பேதம் கிடையாது என்பதை உணர்த்துகிறது. கொழுத்த காளையைப் பார்த்தால் சிங்கம் அதைக் கொன்று தின்று விடுமே அல்லாது,அதனோடு கூட நட்புறவோடு படுத்துக் கிடக்காது. ஆனால், சிவனாரின் சொரூபத்திலோ அம்பிகையின் வாகனமாக சிங்கமும், அண்ணலின் வாகனமாகக் காளையும் அருகருகே அமர்ந்திருக்கின்றன. பொறாமையோ, பயமோ, பகையோ அங்கு இல்லை.

ஆற்றலில் சிறந்தவனாகக் குமரன். அறிவில் சிறந்தவனாக கணபதி. குமரனின் காலுக்கடியில் எதிரிகளான மயிலும் பாம்பும் நட்போடு விளங்குகின்றன. அங்கே விரோத மனப்பான்மை என்பது துளி கூடக் கிடையாது. இறைவனின் திருவடியின் கீழ் காமம், கோபம், குரோதம் அழிந்து பட்டுப் போகின்றது. ஆற்றலில் சிறந்த குமரனா, அறிவில் சிறந்த கணபதியா யார் மேலோன், யார் கீழோன் என்று நிர்ணயிக்க யாராலும் முடியாது. பெயரளவில் ஒருவன் பெரியவன், மற்றவன் சிறியவன் அவ்வளவுதான். மற்றபடி ஈஸ்வர சாந்நியத்தித்தில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஈஸ்வரனுடைய சொரூபத்தில் வேற்றுமைக்கோ, பேதத்திற்கோ, முரண்பாடுகளுக்கோ இடமில்லை. அனைத்தும் அவர் மயமாகி விடுகின்றது. அர்ஜுனனுக்குக் கிடைத்த விஸ்வரூபக் காட்சி சிவனாரரின் சொரூபத்திலேயே அடங்கி இருக்கிறது. பரம்பொருளை உணர்ந்த ஒவ்வொரு ஞானியும் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டவர்களே. ஊனக் கண் கொண்டு காண்பவர்களுக்கு அது படம். ஞானக் கண் கொண்டு காணும் போது அது சொல்வதோ பெரும் பாடம்.

Nov 13, 2013

மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை


காதல் என்றால்....?

5 வயசு பொண்ணு :
என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான் எனக்கு கோவம் வந்திடுச்சு அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப
என் பொம்மைக்கு அவன் புது சட்ட போட்டு எடுத்துட்டு வருவது.

10 வயசு பொண்ணு :
அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன் டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம
அவனே முட்டி போட்டு நிற்பது .

15 வயசு பொண்ணு :
ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது அந்த பேனாவ தான்னு வாங்கும் போது அவன் கைல லேசா உரசுவது

20 வயசு பொண்ணு :
நான்கு வருடம் எதையுமே சொல்லாமல் கல்லூரி கடைசி நாளில் விடை பெறும் போது "அப்புறம் எப்ப பார்க்கலாம் ?"
என்று அவன் கேட்டது

25 வயசு பொண்ணு :
கையில ஒத்த ரோசாவோட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிப்பாயா என்று கேட்டு அவனையே முட்டாளாக்கி கொண்டது .

35 -45 வயசு பெண் மணி :
நான் ரொம்ப களைப்பா இருக்குறதப்பார்த்து நான் காபி போட்டு தரவா என்று அவர் கேட்பது

55 வயசு பெண்மணி :
அவருக்கு மைசூர்பான்னா உயிர் எனக்கு சர்க்கரை நோய் நான் சாப்பிட முடியாதென்று அவரும் சாப்பிடாமல் அதை ஒதுக்குவது

65 வயது பெண்மணி
நான் கடைசி மூச்ச விடும் போது என் கைய பிடிச்சிகிட்டே
என்னையும் கூட்டிட்டு போ-ன்னு அவர் கண்ணீர் விட்டது.

ஒரு புனிதத் தாவரம்

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது

 இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

Nov 12, 2013

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

Nov 7, 2013

மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!

கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.

ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப... அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.

வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!

மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.

மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.

மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

நீரழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்?

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும், தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி கிவி பழம் : நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

செர்ரி : செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா : கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ' மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம் : கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

பீச் : மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பெர்ரிப் பழங்கள் : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆப்பிள் : தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

அன்னாசி : அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது. பேரிக்காய் : சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பப்பாளி : பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அத்திப்பழம் : அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

ஆரஞ்சு : சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி' இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தர்பூசணி : தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.

கிரேப் ஃபுரூட் : ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.

மாதுளை : அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பலாப்பழம் : பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.

நெல்லிக்காய் : கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி' மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

முலாம்பழம் : முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

நட்சத்திரப் பழம் : இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

வெள்ளை கொய்யா : நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள். உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…

இருமனங்கள் இணைவது தான் காதல். அப்படி காதல் செய்பவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை ஒருசிலவற்றை வைத்து தான் தேர்ந்தேடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும்
போது பார்ப்பது இரண்டு தான். அவை தான் அகஅழகு மற்றும் புறஅழகு. இதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களிடம் புறஅழகைப் பார்ப்பதைவிட, அவர்கள் எதிர்ப்பார்ப்பது மற்ற மூன்று விஷயங்களை மட்டும் தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அந்த மூன்று விஷயங்கள் சரியாக இருந்தால் தான் வாழ்க்கையானது சந்தோஷமாக, நீண்ட நாட்கள் நிலைக்கும் என்றும் கூறுகின்றனர். அதை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
  •  ஆண்கள் குழந்தை போன்றவர்கள். அவர்கள் எதையும் சரியாக யோசிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் நிறைய பாசத்தை வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் காதலிப்பவர்கள், தனது மனதை சந்தோஷமாக வைத்திருக்கக் கூடிய, தன்னை நன்கு புரிந்து கொள்ளக் கூடிய, எந்த வகையிலும் தன்னை ஆதரவாக இருப்பவளான ஒரு பெண்ணையே எதிர் பார்ப்பார்கள். உதாரணமாக, காதலனுக்கு கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும். அதனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை நண்பர்களுடன் விளையாடுவார்கள் என்றால், அப்போது காதலியும் அவனுடன் சென்று அவன் விளையாடும் போது, அவனை ஊக்கப்படுத்தினால், அது அவர்களுக்கு மிகுந்த பாசத்தை உண்டாக்கும். இது போல அவர்களது சிறு சிறு செயல்களில் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மனதிற்கு ஆதரவாக இருந்தால், அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இத்தகைய குணத்தையே பெரிதும் பார்ப்பார்கள்.
  • ஆண்கள் பெண்களை விட மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். ஆனால் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு வெளிப்படுத்தினால், அப்போது அவர்கள் அழ நேரிடும். பிறகு அது ஆண்களுக்கே பெரும் மைனஸ் ஆக மாறிவிடும். ஆகவே அவர்கள் தங்கள் உணர்ச்சியான பாசத்தை வெளிப்படுத்தும் போது காதலியானவள் புரிந்து கொண்டு, அவர்களது உணர்வை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் வெளிப்படுத்தும் போது அது சற்று கோபம் போன்று இருக்கும். ஆகவே அதைப் புரிந்து அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் இருவருக்கும் இருக்கும் பாசமானது ஆழமாக நீண்ட நாட்கள் இருக்கும்.
  • ஆண்களுக்கு தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவரையே பிடிக்கும். உதாரணமாக, காதலன் ஆசையாக சமைத்துக் கொடுக்கும் போது, காதலியானவள் சமைத்த உணவின் சுவையை மட்டும் பாராட்டி பேசக் கூடாது. மாறாக, அவன் உங்கள் மீது உள்ள பாசத்தால், யாருக்காகவும் செய்தாததை உங்களுக்காக செய்கிறான் என்பதை உணர்ந்து, அவன் பாசத்தை பற்றியே அவனிடம் பேச வேண்டும். இவ்வாறு உணர்ந்து பேசும் பெண்களையே அவர்களுக்குப் பிடிக்கும்.
ஆகவே ஆண்கள் உண்மையாக ஒரு பெண்ணை காதலிக்கின்றார்கள் என்றால், அப்போது பெண்ணிடம் இருக்கும் புற அழகைப் பார்ப்பதை விட அக அழகான மேற்கூறிய மூன்று விஷயங்களையே ஒவ்வொரு ஆண்களும் தாம் காதலிக்கும் பெண்ணிடம் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்


Nov 6, 2013

புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

எச்சரிக்கை..! குடிநீர் பாட்டில்கள்..!

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

“e-District”


இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும். மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் வழி வகை செய்ய‍ப்பட்டுள்ள‍து.

இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகை யான சான்றிதழ்கள் அனைத் து தனியார் மற்றும் அரசா ங்க அலுவ லகங்களலும் ஏற்று கொள்ளப்படும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண் டிய எல்லாம் கீழ்க்கண்ட இ ணைய முகவரிக்குச் சென்று “Register Citizen” என்பதை கிளி க்செய்து உங்ளுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழுவிபரமும் ரிஜிஸ்டர் ஆகிவிடும். பின்னர் உங்களுக்கு தேவை யான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள லாம்.

இணைய முகவரி http://edistrict.tn.gov.in/

வருமான வரி சோதனையை தவிர்க்க..!

வருமான வரி சோதனையை தவிர்க்க..!

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.

* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளில் அல்லது இ.டி.எஃப்.களில் முதலீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்.

ஃபேஸ் புக்கால் ஏற்பட்ட விபரீதம்

உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களால் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவம் கூட நொடிப் பொழுதில் உலகம் முழுவதும் பரவுகிறது.  இது மக்களிடையே விரைவாக விழிப்புணர்வு ஏற்படுத்த உதவினாலும், இந்த வலைதளங்களால் ஏற்படும் விபரீதங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.

இந்தியா – ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன் கிஷோர்சிங்(29). சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.  அதே நிறுவனத்தில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சந்தியா(25) என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்தார்.    பெற்றோர்கள், இவர்களின் காதலை ஏற்கவில்லை.     ஒரு வழியாக, பெண் வீட்டார் சம்மதித்தனர்.   சந்தன் பெற்றோர் கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலர்கள் 3 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். தேன் நிலவுக்காக பெல்ஜியம், ஹங்கேரி நாடுகளுக்கு சென்றனர். வெளிநாடு சென்றது, பதிவுத் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்களை சந்தியா தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டார்.

இது சந்தனுடைய பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரை தொடர்பு கொண்டு ‘நாங்கள் உனக்கு திருமணம் ஆகவில்லை என்று எல்லோரிடமும் சொல்லி வருகிறோம். அவசரப்பட்டு உனது மனைவி திருமண புகைப்படத்தை பேஸ் புக்கில் போட்டுள்ளார். இது எங்களுக்கு அவமானமாக உள்ளது. உடனே அவற்றை எடுக்கச் சொல்’ என்றனர்.

இதுபற்றி மனைவியிடம் சந்தன் தெரிவித்த போது, அவர் பேஸ்புக்கிலிருந்து படங்களை எடுக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சந்தனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு கடைசியில் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

சந்தனுக்கு அவரது பெற்றோர் ஆஸ்திரேலியாவில் பெண் பார்த்துள்ளனர். இது சந்தியாவுக்கு தெரிய வந்ததால்தான் அவர் பேஸ்புக்கில் போட்ட தனது திருமண படத்தை எடுக்கவில்லை என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். காதல் திருமணம் செய்தபின், சந்தனால் பெற்றோரை சமாதானப்படுத்த முடியவில்லை.

இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்திருக்கலாம். ஆனால், சந்தியாவுக்கு தன்னை விட்டு சந்தன் பிரிந்து விடுவாரோ என்ற பயம். இந்த சூழ்நிலையில்தான் சந்தனுக்கு எமனாக பேஸ்புக் வந்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களால் தினம்தினம் நடக்கும் விபரீத சம்பவங்களை இவற்றை பயன்படுத்துவோர் உணர்ந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தயிர் எப்படி ஆகிறது?

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.

இப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக்டீரியாக்கள் எங்கிருந்து வருகின்றன?

நாமே நிறைய பாக்டீரியாக்களை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் தயிர். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுடனும், மற்றொரு பொருள் சேரும்போது வேதிவினை நடக்கிறது. அதேபோல, பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை ஊற்றும் போது பாலில் வேதிவினைதான் நடக்கிறது. (சமைப்பதே ஒரு வேதியியல்தான்). பொதுவாக, பாலில் புரதச் சத்து அதிகம். இந்தப் புரதச்சத்துதான் நமது எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால் தயிராகும்போது, இந்தப் புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடுதான் நடக்கிறது.

ஏற்கனவே உறைந்த தயிரில் "லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ்' (Lactobacillus acidophilus) என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும்போது, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைப் பொருளை இந்தப் பாக்டீரியா நொதிக்கச் செய்கிறது. இதன்மூலம் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர்மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின் புரதப் பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் ஈர்க்கின்றன. இதன் காரணமாக புரதப் பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு கெட்டியாகி உறைந்துவிடுகின்றன.

லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதன் காரணமாகத்தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.

உடலில் உணவு செரிக்கவும், நோய்கள் குணமாகவும் லாக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தேவை. இதை உணர்ந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் தயிர், மோரை அதிகம் சாப்பிடச் சொன்னார்கள். நம் வயிற்றுக்குள் செல்லும் உணவை செரிக்க வைப்பதற்கான சில நொதிகளை, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தருகின்றன.

யாரென தெரிகிறதா?

விடை...

Below is the list of all 103 names from the painting.
1 Bill Gates, Microsoft founder
2 Homer, Greek poet
3 Cui Jian, Chinese singer
4 Vladimir Lenin, Russian revolutionary
5 Pavel Korchagin, Russian artist
6 Bill Clinton, former US President
7 Peter the Great, Russian leader
8 Margaret Thatcher, former British Prime Minister
9 Bruce Lee, martial arts actor
10 Winston Churchill, former British Prime Minister
11 Henri Matisse, French artist
12 Gengis Khan, Mongolian warlord
13 Napoleon Bonaparte, French military leader
14 Che Guevara, Marxist revolutionary
15 Fidel Castro, former Prime Minister and President of Cuba
16 Marlon Brando, actor
17 Yasser Arafat, former leader of Palastine
18 Julius Caesar, Roman emperor
19 Claire Lee Chennault, Second World War US Lieutenant
20 Luciano Pavarotti, singer
21 George W. Bush, former US President
22 The Prince of Wales
23 Liu Xiang, Chinese hurdler
24 Kofi Annan, former UN Secretary General
25 Zhang An (the painter)
26 Mikhail Gorbachev, former Russian leader
27 Li Tiezi (the painter)
28 Dante Alighieri, Florentine poet
29 Dai Dudu (the painter)
30 Pele, footballer
31 Guan Yu, Chinese warlord
32 Ramses II, Egyptian pharoah
33 Charles De Gaulle, French general
34 Albert Nobel, Swedish chemist, founder of Nobel prizes
35 Franklin Roosevelt, former US President
36 Ernest Hemingway, American novelist
37 Elvis Presley, American singer
38 Robert Oppenheimer, American physicist
39 William Shakespeare, English playwright
40 Wolfgang Amadeus Mozart, Austrian composer
41 Steven Spielberg, American film director
42 Pablo Picasso, Spanish painter
43 Marie Curie, physicist and pioneer of radioactivity
44 Zhou Enlai, first Premier of the People’s Republic of China
45 Johann Wolfgang Von Goethe, German writer
46 Laozi, Chinese philosopher
47 Marilyn Monroe, American actress
48 Salvador Dali, Spanish painter
49 Dowager Cixi, former ruler of China
50 Ariel Sharon, former Israeli Prime Minister
51 Qi Baishi, Chinese painter
52 Qin Shi Huang, former Emperor of China
53 Mother Teresa, Roman Catholic Missionary
54 Song Qingling, Chinese politician
55 Rabindranath Tagore, Indian poet
56 Otto Von Bismarck, German statesman
57 Run Run Shaw, Chinese media mogul
58 Jean-Jacques Rousseau, Swiss philosopher
59 Audrey Hepburn, Belgian-born actress
60 Ludwig Van Beethoven, German composer
61 Adolf Hitler, Nazi leader
62 Benito Mussolini, Italian fascist politician
63 Saddam Hussein, former President of Iraq
64 Maxim Gorky, Russian writer
65 Sun Yat-Sen, Chinese revolutionary
66 Den Xiaoping, Chinese revolutionary
67 Alexander Pushkin, Russian author
68 Lu Xun, Chinese writer
69 Joseph Stalin, former Soviet Union leader
70 Leonardo Da Vinci, Italian painter
71 Karl Marx, German philosopher
72 Friedrich Nietzche, German philosopher
73 Abraham Lincoln, former US President
74 Mao Zedong, Chinese dictator
75 Charlie Chaplin, British actor
76 Henry Ford, founder of Ford motor company
77 Lei Feng, Chinese soldier
78 Norman Bethune, Canadian physician
79 Sigmund Freud, Austrian psychiatrist
80 Juan Antonio Samaranch, former International Olympic Committee president
81 Chiang Kai Shek, Chinese general
82 Queen Elizabeth II, Queen of the United Kingdom
83 Leo Tolstoy, Russian novelist
84 Li Bai, Chinese poet
85 Corneliu Baba, Romanian painter
86 Auguste Rodin, French artist
87 Dwight Eisenhower, former US President
88 Michael Jordan, American basketball player
89 Hideki Tojo, former Japan Prime Minister
90 Michelangelo, Italian Renaissance painter
91 Yi Sun-Sin, Korean naval commander
92 Mike Tyson, American boxer
93 Vladimir Putin, Russian Prime Minister
94 Hans Christian Andersen, Danish author
95 Shirley Temple, American actress
96 Albert Einstein, German physicist
97 Moses, Hebrew religious leader
98 Confucius, Chinese philosopher
99 Ghandi, Indian spiritual leader
100 Vincent Van Gogh, Dutch painter
101 Toulouse Lautrec, French painter
102 Marcel Duchamp, French artist
103 Behind George Bush is Osama bin Laden

விந்தை...


111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
போட்டு பாருங்கள், கணக்கு சரியாக வரும்.